மானிட வரலாற்றில் கறை படிந்த பக்கங்களில் பாரத தேசத்தின் தூக்குத் தண்டனைத் தீர்ப்பும் ஒன்றாகிவிட்டது. இருபது வருடங்களுக்கு மேல் சிறைத்தண்டனை அனுபவித்து தமது வாழ்நாளில் பாதியை இருண்ட அறைகளில் கழித்தவர்கள் மீண்டும் தண்டிக்கப் படுவது தமிழினத்துக்கே விதிக்கப்பட்ட வலியாகிவிட்டது.
நீதி மறுக்கப்பட்டு தண்டனைக்காகக் காத்திருக்கும் எமது தமிழ் உறவுகளை காப்பாற்றக் கோரி உலகெங்கும் பல்வேறு கவனயீர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்று வரும் இவ்வேளை, எமது உயிர் நாடிகளை நிறுத்திவிடும் அளவிற்கு அதிர்ச்சியான செய்தி எம்மை உலுக்கியது. எமது சகோதரி செங்கொடி தன்னை வேள்வித் தீயில் ஆகுதியாக்கி விட்டார்.
எம்மின விடுதலையில் எத்தனையோ மகத்தான தியாகங்கள் நிறைந்துள்ளது. இவற்றிற்கெல்லாம் மேலாக எமது சகோதரி தியாகி செங்கொடியின் தியாகம் எம்மை பெரும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த காலங்களில் தியாகி முத்துக்குமாரின் வரிசையில் பல உன்னத தியாகங்கள் தமிழகத்தில் நிகழ்ந்துள்ளது.
இத் தியாகங்கள் எவையும் பாரத தேச ஆட்சியாளர்களையோ, கொள்கை வகுப்பாளர்களையோ அன்றி உலக ஒழுங்கை தீர்மானிக்கும் சக்திகளையோ பாதித்ததாகத் தெரியவில்லை.
எமது தியாகங்கள் எதுகும் இவர்களிடம் மாற்றங்கள் எதனையும் ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை. இந்த வகையில் சகோதரி தியாகச்சுடர் செங்கொடியின் கொடையும் வீண் போய்விடும் எனும் அச்சம் எம்மிடம் உள்ளது.
எனவே எமது அன்பு இரத்தத் தாய்த் தமிழக உறவுகளேஇ இளையோரே, மாணவர்களே உங்களின் போராட்டக் குணத்தினையும் விடா முயற்சியினையும் நாம் மதிக்கின்றோம். ஆனால் பயன் எதையும் பெற்றுத்தராத உயிர்த் தியாகங்கள் செய்வதினை முழுமையாகத் தவிர்க்குமாறு உரிமையுடன் கேட்க்கின்றோம்.
எமது விடுதலைப்பயணம் வெற்றிபெறவும் அதனை வழிநடத்தவும் உங்களைப் போன்ற தியாக எண்ணம் உள்ளவர்கள் எம்மினத்திற்கு வேண்டும். எனவே உங்கள் உயிர்த்தியாகங்களை தவிர்த்து இறுதிவரை போராடுங்கள். நிச்சயம் எமது தமிழினம் முழுமையான விடுதலை பெறும். தெடர்ந்து உங்கள் பணியினைச் செய்யுங்கள்.
தர்மத்தின் மீதும் தியாகத்தின் மீதும் நடந்துசெல்லும் எமது விடுதலைப் பயணம் நிச்சயம் வெற்றிபெறும். எமது தாயகத்தில் முள்ளிவாய்க்காலில் ஏற்பட்ட பேரவலத்திற்கும், எமது விடுதலைப் போராட்டப் பின்னடைவுக்கும், காரணமாய் இருந்வர்களுக்கும், துணைநின்றவர்களுக்கும் கடந்த சட்ட சபைத் தேர்தலினூடாக தமிழக உறவுகளாகிய நீங்கள் தீர்ப்பு வழங்கி உள்ளீர்கள். இவ்வாறான சாத்வீகப் போராட்டத்தை தொடருங்கள்.
தமிழின விடுதலைக்காக எம்மவர்கள் பல்வேறு வடிவங்களில் எமது நியாயத் தன்மையினையும், விடுதலை உணர்வையும் உலகிற்கு அதியுயர் தியாகங்களினூடாக உறுதிப்படத் தெரிவித்து விட்டார்கள். கடந்த காலங்களில் நடந்த உயிர்த் தியாகங்கள் எமது விடுதலை மீதான உறுதியை உலகிற்கு சுட்டிக்காட்டி உள்ளது.
இதேவேளை தியாகச் சுடர் செங்கொடியின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பிரித்தானியாத் தமிழர் சார்பாகவும் உலகத்தமிழர் சார்பாகவும் எமது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றி
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
பிரித்தானியத் தமிழர் ஒன்றியம்
+44 (0) 20 8144 4437
+44 (0) 74 0021 9654
britishtamilsunion@gmail.com
http://naamnanbargal.blogspot.com
http://naamnanbargal.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?