Thursday 1 September 2011

கருணை இல்லா காங்���ிரஸ் தலைமை.....!!!




சென்னை, ஆக.26,2011

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரையும் தூக்கிலிடுவதற்கான நடவடிக்கை குறித்து தங்களுக்கு மத்திய அரசிடம் இருந்து எந்தத் தகவலும் வரவில்லை என்று வேலூர் சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, இம்மூவரையும் தூக்கிலிடுவதற்கான நடவடிக்கை குறித்து வேலூர் சிறைக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.
இம்மூவரையும் தூக்கிலிடக் கூடாது என உயர் நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்படவுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோரின் கருணை மனுக்களை ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் ஏற்க மறுத்து, அண்மையில் தள்ளுபடி செய்து விட்டார்.  இதனால், அவர்கள் 3 பேரும் தூக்கில் இடப்படுவது உறுதியானது.

இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் உள்ள பல்வேறு அமைப்புகள், கட்சிகள் ஒருமித்த குரலில் இந்தத் தூக்கு தண்டனைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், மூவரின் கருணை மனு நிராகரிப்பு குறித்த ஜனாதிபதியின் முடிவு பற்றிய தகவலை, தமிழக அரசு மூலம் வேலூர் மத்தியச் சிறை சிறைக்கு மத்திய உள்துறை வியாழக்கிழமை இரவு அனுப்பியுள்ளது.

இன்று காலை கிடைக்கப்பெற்ற அந்த அவசர கடிதத்தில் (ஸ்பீட் போஸ்ட்) மத்திய அரசின் கடிதத்தை இதனுடன், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது என உறுதியான தகவல்கள் வெளியாகின.

தூக்கு தண்டனை விஷயத்தில் ஜனாதிபதியின் முடிவு தெரிவிக்கப்பட்ட 7-வது நாளில் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்பது மரபு.

உயர் நீதிமன்றத்தில் அணுக முடிவு...

மூவரையும் தூக்கிலிட உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டதை அறிந்த தமிழ் ஆர்வலர்கள் பலரும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில், மூவரின் கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தை இன்று அணுகுவது என முடிவு எடுக்கப்பட்டது.

கடந்த 20 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இவர்களது கருணை மனுக்களை, முந்தைய இரண்டு ஜனாதிபதிகளும் நிராகரிக்காத நிலையில், தற்போது அம்மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதை எதிர்த்து வாதிடப்படவுள்ளது.

மூவரின் தூக்கு தண்டனைக்கு எதிராக, பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானில் ஆஜராவார் எனத் தெரிகிறது.

சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகுவது தொடர்பான நடவடிக்கையை நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், மூவரையும் தூக்கிலிடுவதற்கான நடவடிக்கை குறித்து தங்களுக்கு மத்திய அரசிடம் இருந்து எந்தத் தகவலும் வரவில்லை என்று வேலூர் சிறைத் துறை அதிகாரிகள் இன்று காலை தெரிவித்துள்ளனர்.

நன்றி : விகடன்.


http://tamil-shortnews.blogspot.com




  • http://tamil-shortnews.blogspot.com


  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger