Thursday, 1 September 2011

குற்றம் சாட்டின��ல் குடும்பத்தை பிரிப்பேன் - காலச்சுவடு பத்திரிக்��ைக்கு “கவிஞர்” மிரட்டல்



முன் எப்போதும் இல்லாத இல்லாத அளவுக்கு தமிழ் இலக்கிய யுத்தம் கேவலமான நிலையை அடைந்து இருப்பது , இலக்கிய உலகை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

சில தினங்கள் முன்பு, அல்ட்டிமேட் ரைட்டர்  சாரு நிவேதிதா , ஒரு பதிப்பகம் மேல் சில குற்றச்சாடுக்கள் வைத்தார். அந்த குற்றச்சாட்டுக்கு நேரடியாக பதில் அளிக்காத அந்த பதிப்பக உரிமையாளர், சாருவுக்கு எதிராக பல சதி வேலைகளில் இறங்கி தன்னை களங்கப்படுதிக்கொண்டார். ஒரு சாமியாரின் அபாண்டமான குற்றச்சாடுக்கு பின் இருந்து செயல்பட்டவர் , இந்த பதிப்பக அதிபர்தான் என பேசப்பட்டது...

ஆனால் இதை சிலர் நம்பவில்லை.. இவ்வளவு கேவலமாக அவர் இறங்க மாட்டார் என சிலர் நினைத்தனர்..

இந்த நிலையில் , இலக்கிய இதழான காலச்சுவடு அந்த நபர் மீது சில குற்றச்சாட்டுக்களை வைத்தது...




  • கருணாநிதி கைதுசெய்யப்பட்ட முறை கண்டிக்கப்பட வேண்டியது என்ற எண்ணம் எனக்கு இருந்தாலும் அதற்கான சூழலை - போலீசின் சீரழிந்த பண்பாட்டை - உருவாக்கியதில் கருணாநிதி அரசுகளின் பங்களிப்பும் விமர்சிக்கப்பட வேண்டும் என்று கருதினேன். இதுபற்றிய என்னுடைய கட்டுரை 'ஜனநாயக அராஜகம்' ஜூலை 15, 2001 திண்ணை.காம் இதழில் வெளிவந்தது. காலச்சுவடில் ஏன் வெளிவரவில்லை? அப்போது ஆசிரியர் குழுவிலிருந்து, நடைமுறையில் பொறுப்பாசிரியராக இயங்கி வந்த ****னுக்குத் திமுக பற்றிய விமர்சனப் பார்வையை வெளியிடுவதில் விருப்பமிருக்கவில்லை. திமுகவை விமர்சிக்க இது உகந்த காலகட்டமல்ல என்பதே அவர் முன்வைத்த காரணம். எதை எப்போது யார் விமர்சிக்கலாம் எனப் பிறர் முடிவுசெய்வதில் எனக்கு எப்போதும் உடன்பாடு இருந்ததில்லை. இருப்பினும் எதையும் பிரசுரிக்கும்படி பொறுப்பாசிரியர்களை வலியுறுத்துவது என் பாணி அல்ல. அதிலும் என் எழுத்தாக இருந்தால் நிச்சயமாக வலியுறுத்துவது இல்லை. கனிமொழியின் கணவர் அரவிந்தனின் முதலீட்டில் சுஜாதாவின் படைப்புகளை வெளியிட ***ரன் ஒரு பதிப்பகம் தொடங்கும் திட்டத்துடன் இருந்தது எனக்கு அப்போது தெரியாது. பின்னர் அவரே அறிவித்த 'நம்பமுடியாத காத'லில் அப்போது அவர் மூழ்கிக்கிடந்ததும் எனக்குத் தெரியாது. அதிலிருந்து தான் வெளியேறிவிட்டதாக அவர் அறிவித்தது உயர்வு நவிற்சியாக இருக்கக்கூடும்.
  • ஆலோசனைக் குழுவில் இருந்த காலகட்டத்தில் கனிமொழிக்கு ஒரு நெருக்கடி ஏற்பட்டது. அப்போது காலச்சுவடில் இருந்து விலகியிருந்த ****ன், ஆலோசனைக் குழுக் கூட்டம் நடைபெறும் நாட்களை அலுவலக ஊழியர்கள் வழி துப்புத் துலக்கி, கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நேரங்களில் கனிமொழிக்குக் குறுஞ்செய்திகள் அனுப்புவார். அவருடைய நடவடிக்கை தனக்குத் தெரியும் எனக் காட்டிக்கொள்வதே அவற்றின் நோக்கமாக இருக்கும். இது முதலில் நகைச்சுவைக்கு உரியதாக இருந்து பின்னர் கண்காணிப்பின் நெருக்கடியாக உருவெடுத்ததும் ஒருமுறை என்னிடம் கனிமொழி அலுவலகச் சூழல் பற்றிக் கடுமையாகப் புகார் கூறினார். அலுவலக நண்பர்களிடம் விஷயத்தை விளக்கி, சில செய்திகளைப் பரப்புரை செய்யலாகாது என்பதைப் புரியவைத்து இதற்கு ஒரு முடிவு கட்டினோம்

ஒரு இதழில் வேலை செய்த போது, அந்த இதழுக்கு உண்மையாக இல்லாமல் துரோகம் செய்தது, ஒருவரிடம் காசு வாங்கி கொண்டு, அவருக்கு சாதகமாக எழுதுவது, காட்டி கொடுப்பது போன்றவை குற்றச்சாட்டுக்கள்... 

இதற்கு அவர் அளித்த பதில் என்ன தெரியுமா?

  • ஓர் இலக்கிய பத்திரிக்கையில் என்னைப்பற்றிய செய்திகள் வந்துள்ளன... நான் நினைத்தால் அந்த கட்டுரை எழுதியவரிம் குடும்பத்தை பிரிக்க முடியும், அவர் மனைவி டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பும்படி செய்ய வேண்டும்.. செய்யலாமா என யோசிக்கிறேன்

ஒரு குற்றச்சாட்டுக்கு , என்ன ஒரு பதில் பாருங்கள்..

இருவருக்கிடையே சண்டை என்றால் பெண்களை ஏன் இழுக்கிறீர்கள்... இலக்கியம் இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து விட்டதே என ஆதங்கப்ப்டுகிறார்கள் பொதுமக்கள் 


http://tamil-paarvai.blogspot.com




  • http://tamil-paarvai.blogspot.com


  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger