Thursday, 1 September 2011

உயிர்களிடத்து அ��்பு வேண்டும்-கதை



ஒரு மனிதன் தன் நாயுடன் ஒரு நீண்ட சாலையில் நடந்து கொண்டிருந்தான்.

அழகிய இயற்கைக் காட்சிகளை ரசித்தபடியே சென்று கொண்டிருந்தான்.

திடீரென அவன் உணர்ந்தான்,தான் இறந்துவிட்டோம் என்பதை!

தன் இறப்பும்,அதற்கு முன்பே நிகழ்ந்த அவன் நாயின் இறப்பும் அவனுக்கு நினைவு வந்தது.

அந்தச் சாலை எங்கு போகிறதோ எனச் சிந்தித்தான்.

கொஞ்ச தூரம் சென்றதும் சாலையின் ஒரு பக்கத்தில் உயரமான சலவைகல்லாலான மதிற்சுவரைக் கண்டான்.

சிறிது தூரத்தில் மலை மேல் அந்த மதிற்சுவரில் அழகிய நுழைவாயில் ஒன்றைக் கண்டான்.

அருகில் சென்று பார்த்தபோது, அந்த வாயிலின் கதவில் ரத்தினக் கற்கள் பதிக்கப் பட்டிருப்பதையும்,,அந்த வாயிலை நோக்கிச் செல்லும் பாதை தங்கத்தால் போடப் பட்டிருப்பதையும் கண்டான்.

அந்த வாயிலை நோக்கித் தன் நாயுடன் நடக்க ஆரம்பித்தான்.அருகில் செல்லும்போது அந்த வாயிலின் உள்ளே ஒரு மனிதன் தங்க மேசையின் முன் அமர்ந்திருப்பதைக் கண்டான்.

அருகில் சென்ற அவன் அந்த மனிதனிடம் கேட்டான்" இந்த இடத்தின் பெயர் என்ன?"

அந்த மனிதன் சொன்னான்"சொர்க்கம்"

அவன் கேட்டான்"குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா?"

"நிச்சயமாக!உள்ளே வாருங்கள் குளிர்ந்த நீர் வரவழைக்கிறேன்"சொல்லியவாறே அவன் கதவைத் திறக்கலானான்!

வழிப்போக்கன் தன் நாயைக் காட்டிக் கேட்டான்"என் நண்பனும் என்னோடு வரலாம் அல்லவா?"

"மன்னிக்கவும்!நாய்களுக்கு இங்கு அனுமதி இல்லை"

வழிப் போக்கன் யோசித்தான்.பின் தன் வந்த பாதையில் சாலையை நோக்கி நாயுடன் நடக்க ஆரம்பித்தான்.

நீண்ட தூரம் நடந்தபின் மற்றொரு வாயிலைக் கண்டான்.துருப்பிடித்த கதவு.அதை நோக்கி ஒரு மண்பாதை சென்று கொண்டிருந்தது.

அந்த வாயிலை அவன் நெருங்கியதும் ஒரு மனிதன் ஒரு மரத்தடியில் அமர்ந்து ஏதோ படித்துக் கொண்டிருப்பதைக் கண்டான்.

அவனிடம் கேட்டான்"குடிக்கத் தண்ணீர் கிடைக்குமா?"

"உள்ளே ஒரு குழாய் இருக்கிறது,வாருங்கள் "

"நாயைக் காட்டிக் கேட்டான் "என் தோழனுக்கும் நீர் வேண்டும்"

அந்த மனிதன் சொன்னான்"குழாயடியில் ஒரு குவளை இருக்கிறது.எடுத்துக் கொள்ளலாம்"

அவன் உள்ளே சென்றான்.குழாயையும் குவளையையும் கண்டான்.தண்ணீர் எடுத்து நாய்க்கும் கொடுத்துத் தானும் அருந்தினான்.

தாகம் தீர்ந்தது.

மரத்தடி மனிதனை அணுகிக் கேட்டான்"இந்த இடத்தின் பெயர் என்ன?"

அவன் சொன்னான் "சொர்க்கம் என்றழைக்கப் படுகிறது"

வழிப் போக்கன் திகைத்தான்,

"குழப்பமாயிருக்கிறதே!நான் வரும் வழியில் ஒருவர் வேறு இடத்தையும் சொர்க்கம் என்று சொன்னாரே!"

ஓ!இந்த ரத்தினக்கல் பதித்த கதவுள்ள இடத்தைச் சொல்கிறீர்களா?

அது---நரகம்!!"

"அப்படியென்றால் சுவர்க்கம் என்று அவர்கள் சொல்லிக் கொள்வது உங்களுக்கு எரிச்சலாக இல்லையா?"

"இல்லை .மாறாக மகிழ்ச்சியடைகிறோம்-தங்கள் தாகம் தீர்க்கத் தங்கள் உயிர் நண்பர்களைத் தியாகம் செய்யும் மனிதர்களை இனம் கண்டு நிறுத்துவதற்காக!"

"நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி
ஒல்லும் வாய் ஊன்றும் நிலை"




http://tamil-friend.blogspot.com




  • http://tamil-friend.blogspot.com


  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger