Monday, 23 June 2014

நீ அழகாக இல்லை எனக்கூறி புதுப்பெண்ணை சித்ரவதை செய்த கணவன் கைது

- 0 comments

நீ அழகாக இல்லை எனக்கூறி புதுப்பெண்ணை சித்ரவதை செய்த கணவன் கைது husband arrested for woman torture

திருவண்ணாமலை, ஜூன் 22–

திருவண்ணாமலை அருகே உள்ள கீழ்கரிப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயமோகன் (வயது29). விவசாயி. திருவண்ணாமலை பே கோபுர தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள் மகள் துர்காதேவி(22). ஜெயமோகனுக்கும், துர்கா தேவிக்கும் 2 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன் மனைவி இருவரும் கடந்த ஒரு மாதமாக சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக, நீ அழகாக இல்லை, எனக்கு பொருத்தமானவள் இல்லை உன் வீட்டிற்கு சென்றுவிடு எனக்கூறி ஜெயமோகன், மனைவி துர்காதேவியை கொடுமைப்படுத்தியுள்ளார். மேலும் உடல் ரீதியாக துன்புறுத்தியதாக தெரிகிறது.

இதற்கு ஜெயமோகனின் தாய் பச்சையம்மாளும் உடந்தையாக இருந்துள்ளார். இதனால் விரக்தியடைந்த துர்காதேவி திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயமோகனை கைது செய்தனர்.

...

 

[Continue reading...]

Friday, 20 June 2014

ஈராக்கில் தூத்துக்குடி நர்சு பத்திரமாக இருப்பதாக தகவல் iraq tuticorin nurse safe information

- 0 comments

ஈராக்கில் தூத்துக்குடி நர்சு பத்திரமாக இருப்பதாக தகவல் iraq tuticorin nurse safe information

 

சென்னை, ஜூன். 20–

ஈராக்கில் உள் நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. அங்குள்ள திக்ரித், மொசூல் நகரங்களை தீவிரவாதிகள் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

மொசூல் நகரில் 40 இந்திய தொழிலாளர்களும், திக்ரித் நகரில் 46 இந்திய பெண் நர்சுகளும் பணி புரிந்து வந்தனர். அவர் களை தீவிரவாதிகள் தங்கள் பிடியில் வைத்து உள்ளனர்.

46 இந்திய நர்சுகளில் 6 பேர் நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தருமகிரி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று ஏற்கனவே தகவல் வெளியானது.

தற்போது தூத்துக்குடியைச் சேர்ந்த நர்சு ஒருவரும் இவர்களுடன் இருப்பது தெரிய வந்துள்ளது. அவரது பெயர் லெஜிமா ஜெரோஷ் மோனிகா.

இவர் ஈராக்கின் தெக்ரித் நகர் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வந்தார். இவருடன் கூடலூர் உள்ளிட்ட இந்திய நர்சுகள் 46 பேரும் பணிபுரிந்து வந்தனர்.

திக்ரித் நகரை கைப்பற்றிய தீவிரவாதிகள் ஆஸ்பத்திரியில் பணிபுரிந்த 46 நர்சு களையும் தங்கள் பிடியில் வைத்துள்ளனர். லெஜிமா ஜெரோஷ் மோனிகா அங்கிருந்து தூத்துக்குடியில் உள்ள உறவினர்களுடன் டெலிபோனில் பேசினார்.

அப்போது, தீவிரவாதிகள் தங்களை வேறோரு ஆஸ்பத்திரியில் வைத்து இருப்பதாகவும் நலமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

தீவிரவாதிகள் தங்களை நல்ல முறையில் நடத்துகிறார்கள், குடிநீர், உணவு, இருப்பிட வசதிகள் செய்து கொடுத்துள்ளனர். இந்திய நர்சுகள் அனைவரும் நலமுடன் இருக்கிறோம் என்றும் லெஜிமா போனில் தெரிவித்தார்.

நேற்று கூடலூர் நர்சு சினி தனது கணவர் தில்சனிடம் பேசினார். இங்கு தங்களுக்கு ஒரு வாரத்துக்கு தேவையான உணவு உள்ளிட்ட எல்லா வசதியும் உள்ளது. எந்தப் பிரச்சினையும் இல்லை.

உள்நாட்டு போர் நீடித்தால் உணவு தட்டுப்பாடு வரும், எனவே இந்தியா திரும்ப விரும்புகிறோம். ஆனால் போக்குவரத்து முடங்கியுள்ளதால் வெளியில் செல்ல முடியவில்லை என்று கூறினார்.

ஈராக்கில் தவிக்கும் தமிழக நர்சுகளை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

...

 

[Continue reading...]

Tuesday, 17 June 2014

வரதட்சணை புகார்: ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்

- 0 comments

 

வரதட்சணை புகார்: ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டார் dowry report ips officer varunkumar puzhal jail

சென்னை, ஜூன்.18-

வரதட்சணை புகாரில் சிக்கி கைதான ஐ.பி.எஸ். அதிகாரி வருண்குமார் தலைவலி காரணமாக கடந்த 8-ந் தேதி புழல் சிறையிலிருந்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டார். டாக்டர்கள் குழுவினர் அவருக்கு தீவிர பரிசோதனைகள் செய்தனர். தலைவலிக்கான காரணம் குறித்து அறிய 'எம்.ஆர்.ஐ.', 'சி.டி'. உள்ளிட்ட ஸ்கேன்களும் எடுக்கப்பட்டது.

இந்த நிலையில் சிகிச்சை முடிந்து நேற்று இரவு டாக்டர்கள் அறிவுரையின்படி வருண்குமார் மீண்டும் புழல் சிறைச்சாலைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார்.

...

 

[Continue reading...]

Sunday, 15 June 2014

சென்னை பெண் டாக்டர் கொலை: கார் டிரைவர்–வேலைக்காரி கைது

- 0 comments

 

சென்னை பெண் டாக்டர் கொலை: கார் டிரைவர்வேலைக்காரி கைது chennai woman doctor murder car driver servant arrested

 

சென்னை, ஜூன்.16–

சென்னை முகப்பேர் ஏரித்திட்டம் பகுதியை சேர்ந்தவர் மல்லிகா (வயது 63), டாக்டர். தனது இளைய மகள் ரோகிணி பிரியாவுடன் வசித்து வந்த இவர் திருப்போரூரில் உள்ள சொந்த நிலத்தை விற்பதற்காக கடந்த 12–ந் தேதி தனது காரில் சென்றார்.

சென்னை நொளம்பூரை சேர்ந்த டிரைவர் கார்த்தி காரை ஓட்டினார். மல்லிகா வீட்டு வேலைக்கார பெண்ணும், கார்த்தியின் கள்ளக்காதலியுமான சத்யாவும் உடன் சென்றார்.

நள்ளிரவு வரை மல்லிகா வீடு திரும்பவில்லை. உடன் சென்ற டிரைவர் கார்த்தி, வேலைக்காரி சத்யா ஆகியோரும் மாயமாகி இருந்தனர். நொளம்பூர் இன்ஸ்பெக்டர் கர்ணன் தலைமையிலான போலீசார் தனிப்படை அமைத்து டாக்டர் மல்லிகாவை தேடி வந்தனர்.

இதற்கிடையே விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே மல்லிகா கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பது தெரிய வந்தது. டிரைவர் கார்த்தியும், அவரது கள்ளக்காதலி சத்யாவும் சேர்ந்து டாக்டர் மல்லிகாவை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

மல்லிகா அணிந்திருந்த ரூ. 3 லட்சம் மதிப்பிலான நகைகள், அவர் வைத்திருந்த ரூ.1 கோடி மதிப்பிலான நிலப்பத்திரம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இந்த நகைகள் சென்னையில் அடகு வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதற்கு சிலர் உதவி செய்திருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து கார்த்தி, சத்யாவுடன் சேர்ந்து டாக்டர் மல்லிகாவை கொலை செய்ய மேலும் பலர் திட்டமிட்டு செயல்பட்டிருப்பது அம்பலமானது. இந்த கோணத்தில் போலீஸ் விசாரணை முடுக்கி விடப்பட்டது.

கார்த்தியின் செல்போன் நம்பரை வைத்து அவரையும், கள்ளக்காதலி சத்யாவையும் பிடிக்க போலீசார் வலைவிரித்தனர். கொலையாளிகள் 2 பேரும் காரில் சுற்றிக் கொண்டிருக்க வாய்ப்பில்லை என்று போலீசார் கருதினர்.

காரை எங்காவது நிறுத்தி வைத்து விட்டு கார்த்தியும், சத்யாவும் தப்பிச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது. இதற்கு பலன் கிடைத்தது.

திண்டிவனம் பகுதி முழுவதும் போலீசார் சல்லடை போட்டு தேடியதில் டாக்டர் மல்லிகாவின் கார் அப்பகுதியில் சாலையோரமாக நிறுத்தப்பட்டி ருந்தது. அதனை போலீசார் கைப்பற்றினர்

இதற்கிடையே கார்த்தியும், சத்யாவும் தமிழகத்தை விட்டு ஆந்திர மாநிலத்துக்கு தப்பிச் சென்றது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து மயிலம் மற்றும் நொளம்பூர் போலீசார் 2 பேரையும் கைது செய்வதற்கு கூட்டாக இணைந்து செயல்பட்டனர்.

மேற்கு சென்னை இணை கமிஷனர் சண்முகவேல், விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் ஆகியோரது மேற்பார்வையில் தனிப்படை போலீசார் களத்தில் இறங்கினர். கார்த்தியின் செல்போன் நம்பரை வைத்து கண்காணித்ததில் அவர் திருப்பதியில் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் கார்த்தியை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். அவரது கள்ளக்காதலி சத்யாவும் பிடிபட்டார்.

சென்னைக்கு இருவரும் இன்று அதிகாலை 3 மணி அளவில் சென்னை கொண்டு வரப்பட்டனர். நொளம்பூர் போலீஸ் நிலையத்தில் வைத்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது 2 பேரும் அளித்த வாக்குமூலத்தில் திண்டிவனம் மயிலத்தில் டாக்டர் மல்லிகாவை கொலை செய்து நகைகளையும், நிலப் பத்திரத்தையும் கொள்ளை அடித்ததாக தெரிவித்தனர்.

சென்னையில் காணாமல் போன டாக்டர் மல்லிகா கொலை செய்யப்பட்டது மயிலத்தில் என்பதால் அங்குள்ள போலீசாரே கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் இந்த வழக்கில் அடுத்தக்கட்ட விசாரணையையும் அவர்களே மேற்கொள்வார்கள். இதன் காரணமாக கைது செய்யப்பட்ட கார்த்தியும், சத்யாவும் மயிலம் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இற்கிடையே இந்த வழக்கில் சத்யாவின் உறவுக்கார பெண்ணான ஆதிலட்சுமி என்பவரும், நில புரோக்கர் கணேசும் கைது செய்யப்பட்டனர்.

டாக்டர் மல்லிகாவிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை ஆதிலட்சுமிதான் சென்னையில் அடகு வைத்து பணம் வாங்கி கொடுத்துள்ளார். அதே நேரத்தில் மல்லிகாவின் சொத்தை அபகரிப்பதற்காக நில புரோக்கர் உடந்தையாக செயல்பட்டுள்ளார்.

இதனால் இவர்களும் இந்த கொலை வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். கைதான 4 பேரும் இரவோடு இரவாக மயிலத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். இன்று அங்குள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப் படுகிறார்கள்.

இந்த வழக்கில் இவர்கள் 4 பேரை தவிர மேலும் பலருக்கு தொடர்பு இருக்கிறதா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பெண் டாக்டர் ஒருவரை கொலை செய்வதற்கு 2 பெண்களே சதித்திட்டம் தீட்டி செயல்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

...

 

[Continue reading...]

பணியாளர்களுக்கு கூகுள் வழங்கும் அபார சலுகைகள் Coolest things to be employed with Google

- 0 comments

பணியாளர்களுக்கு கூகுள் வழங்கும் அபார சலுகைகள் Coolest things to be employed with Google

 

 

நியூயார்க், ஜூன் 16-

இணையத்தின் பிரபல தேடு இயந்திரங்களில் (சர்ச் என்ஜின்) உலகின் முதலிடம் வகிக்கும் கூகுள் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள மவுண்ட்டன் வியூ பகுதியில் அமைந்துள்ளது.

இந்நிறுவனத்தில் பணியாற்றும் ஒவ்வொருவரின் உழைப்பின் மூலம் ஆண்டொன்றுக்கு சுமார் 9 லட்சம் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்புக்கு சுமார் ஐந்தரை கோடி ரூபாய்) லாபமாக கூகுள் ஈட்டி வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த லாபத்தில் ஒரு சிறு பகுதியாக தனது ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி, அவர்களை பாசமழையில் கூகுள் குளிப்பாட்டி வருகின்றது.

சராசரியாக, இதர அலுவலகங்களில் பணி நேரங்களில் தூங்க அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால், நாளெல்லாம் உழைத்த பின்னர் இங்கு ஓய்வு தேவைப்பட்டால், இதற்கென அமைக்கப்பட்டிருக்கும் குளுகுளு கூண்டுகளில் சிறிது நேரம் உறங்கி களைப்பாறலாம்.

பிங்பாங் உள்ளிட்ட உள்ளரங்க விளையாட்டுகள், வீடியோ கேம்ஸ் ஆகியவற்றின் மூலம் புத்துணர்வு பெறலாம். வீட்டில் முடி வெட்டிக் கொள்ள நேரமில்லாதவர்களுக்கு இலவச கட்டிங், துணி துவைக்க முடியாதவர்களுக்கு இலவச வாஷிங், நவீன உடற்பயிற்சிக் கூடம், நீந்தி மகிழ அருமையான நீச்சல் குளம், மனம் சோர்ந்த நேரத்தில் பசுமையான புல்வெளியில் அமர்ந்தபடியே வேலை செய்யும் அனுமதி ஆகியவை இங்குள்ள பணியாளர்களுக்கு உண்டு.

மேலும், வேலை நேரத்தில் 20 சதவீதத்தை வாடிக்கையான அலுவலக பணிகள் நீங்கலாக, நீங்கள் விரும்பும் ஆய்வுப் பணிக்கென செலவிடலாம். இவ்வகையில், சம்பளத்துடன் வாரத்தில் ஒரு முழுநாளை உங்கள் சொந்த ஆய்வுப் பணிக்கென அலுவலகத்தின் உள்ளேயே செலவிடலாம்.

வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு வர மட்டுமின்றி, உரிய அனுமதியுடன் சில மணி நேரம் வரை இந்நிறுவனத்தின் பேட்டரி கார்களை உங்கள் சொந்த வேலைக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். உடல்நிலை சரியில்லாமல் போனாலோ, சிறு காயம் ஏற்பட்டாலோ, நொடிப் பொழுதில் உங்கள் மேஜைக்கே வந்து கவனிக்கும் மருத்துவர் குழுவும் உண்டு.

ஏக்கர் கணக்கில் விரிந்து, பரந்து கிடக்கும் அலுவலக வளாகத்தினுள் நடந்து செல்வதற்கு பதிலாக பேட்டரிகளின் மூலம் இயங்கும் தனி மோட்டார் சைக்கிள்களையோ, குழு மோட்டார் சைக்கிள்களையோ பயன்படுத்தலாம். கழிப்பறைகள் கூட நவீன ஜப்பனிய தொழில்நுட்பத்துடன் முன்புறம், பின்புறம் என்று தனித்தனியே கழுவி விட, உலர வைக்க என்று அனைத்தும் தானியங்கி முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்துக்கும் மேலாக, இந்த வளாகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் பிரபல உணவு வகைகள், திண்பண்டங்கள், நொறுக்குத் தீனி வகைகள், குளிர்பானங்கள் என எப்போதும் குறைவில்லாமல் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். உங்களால் இயன்ற வரை ஒரு கை பார்க்கலாம். இவை அத்தனை சலுகைகளும், அனைத்து ஊழியர்களுக்கும் இலவசமாகவே வழங்கப்படுகிறது.

உடல் சோர்ந்து, களைப்படைந்தால் ஒரு சிறு தொகையை கட்டணமாக செலுத்தி, தேர்ச்சி பெற்ற கலைஞர்களை வரவழைத்து மசாஜ் செய்து கொள்ளலாம். இதற்கென, தனி அறைகளும் உண்டு. இவற்றையெல்லாம் கேள்விப்படும் போது, நமக்கும் கூகுள் நிறுவன தலைமை அலுவலகத்தில் வேலை கிடைக்காதா..? என்ற ஆசை யாருக்குதான் தோன்றாது..?

...

 

[Continue reading...]

கூகுளின் புதிய புரட்சி; இதுவரை யாராலும் செய்ய முடியாத சாதனை..!

- 0 comments

ஒரு குழந்தையை அதனது முகம் 20 வயதில் எப்படி இருக்கும், 40 வயதில், 80 வயதில் எப்படியிருக்கும் என 30 விநாடிகளில் காட்டக் கூடிய மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. 80 வயதில் நீங்கள் எப்படி இருப்பீர்கள் எனக் கேட்டபடி ஏற்கனவே ஆயிரத்தெட்டு இணையதளங்கள் உள்ளன. அவற்றில் நம் போட்டோவை அப்லோடு செய்தால், அங்கங்கே தட்டி, உருட்டிப் புரட்டி, தலைமுடிக்கு வெள்ளை பெயின்ட் அடித்து, இப்படித்தான் இருப்பீர்கள் என அந்தத் தளங்கள் காட்டவும் செய்கின்றன.

 

வெகு காலமாக கணினித் துறைக்கு இது சவாலாகவே இருந்து வந்தது. காரணம், சிலருக்கு 5 வயது போட்டோவை 25 வயதில் எடுத்துப் பார்த்தாலே சம்பந்தமே இல்லாத யாரோ போல் தோன்றும். வேறு சிலருக்கோ 5 வயதில் இருக்கும் முகம் 50 வயதிலும் அப்படியே இருக்கும். யாருடைய வளர்ச்சி எப்படி இருக்கும் என்று யாரால் சொல்ல முடியும் என்றுதான் இத்தனை நாட்களாக நினைத்திருந்தோம். ஆனால், இந்த ஆராய்ச்சி அந்த மாயையை உடைத்துவிட்டது.

 

குழந்தையின் கண், மூக்கு, காது, உதடு போன்றவை எந்த வடிவத்தில் இருந்தால் அது காலப் போக்கில் மாறும். எந்த வடிவத்தில் இருந்தால் காலத்தால் மாறாதிருக்கும் என்ற பொது விதியை நாங்கள் கண்டறிந்து விட்டோம் என ஆய்வுக்குத் தலைமை ஏற்றிருக்கும் வோஷிங்டன் பல்கலைக்கழகப் பேராசிரியை கெமல்மெசர் தெரிவித்துள்ளார்.

 

இதற்காக அவர்கள் ஆயிரக்கணக்கான மனிதர்களின் சிறு வயதுப் புகைப்படங்களை சேகரித்திருக்கிறார்கள். ஒவ்வொரு வயதிலும் ஒரே மாதிரியாக போஸ் கொடுத்து போட்டோ எடுத்து வைத்திருப்பவர்களைத் தேடிப் பிடித்திருக்கிறார்கள். அந்தப் படங்களைத் துல்லியமாக ஆராய்ந்ததன் மூலம், ஒரு மனிதனின் முகத்தில் வயது ஏற்படுத்தும் மாற்றங்களை வரையறுக்க முடிந்திருக்கிறது. அந்த மாற்றங்கள் ஆணுக்கு வேறு பெண்ணுக்கு வேறு மாதிரி இருக்கும் என்பதும் தெளிவாகி இருந்திருக்கிறது.

 

அந்த இலக்கணங்களை கணினி கட்டளைகளாக்கித்தான் இந்த மென்பொருளை உருவாக்கியிருக்கிறோம். தற்போது இந்த மென்பொருளில் 6 வயதுப் பையனின் புகைப்படத்தை உள்ளீடு செய்தால், அவன் முகம் 20 வயதில் எப்படி இருக்கும், 40 வயதில், 80 வயதில் எப்படியிருக்கும் என்றெல்லாம் 30 விநாடிகளில் காட்டி விடுகிறது. இதுவரை வயோதிப மாற்றங்களை இவ்வளவு துல்லியமாக எந்த மென்பொருளும் காட்டியதில்லை. எனப் பெருமிதம் கொள்கிறார் கெமல்மெசர். இந்த நம்பிக்கை இவர்களுக்கு தானாக வரவில்லை. இன்றைய வயோதிபர் ஒருவரின் சிறு வயது போட்டோவை இந்த மென்பொருளில் இட்டு சோதித்திருக்கிறார்கள்.

 

மென்பொருள் தந்த வயோதிக முடிவு சரியாக அந்தத் வயோதிபரின் சமீபத்திய போட்டோ போலவே இருந்திருக்கிறது. மக்களின் இந்த ஆர்வம் தெரிந்துதான் இணையத்தின் இமயமான கூகுள் நிறுவனமும் இன்டெல் நிறுவனமும் இந்த ஆராய்ச்சிக்கு பொருளுதவி செய்திருக்கின்றன. கூடிய சீக்கிரமே இது கூகுள் தேடுபொறியோடு இணைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரலாம்! இப்படியே வளர்ந்துகிட்டுப் போனா, இன்னும் 80 வருடத்தில் நம்ம உலகம் எப்படி இருக்கும்

 

[Continue reading...]

மத்திய பிரதேசத்தில் இளம்பெண்ணை கற்பழித்து நிர்வாண ஊர்வலம் Young girl molested in Madhya Pradesh

- 0 comments

மத்திய பிரதேசத்தில் இளம்பெண்ணை கற்பழித்து நிர்வாண ஊர்வலம் Young girl molested in Madhya Pradesh

போபால், ஜூன். 15–

நினைத்தாலே நெஞ்சம் பதறும் இந்த கொடூர சம்பவம் மத்திய பிரதேசத்தில் அரங்கேறி உள்ளது.

கந்த்வா மாவட்டவம் பிலைகெடா கிராமம். தலைநகர் போபாலில் இருந்து 300 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

இந்த கிராமத்தை சேர்ந்தவர் மலாயா (35). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தலித் வகுப்பை சேர்ந்த இந்த பெண்ணுக்கு திருமணமாகி 10 வயதில் ஒரு மகனும் இருக்கிறான்.

மலாயாவின் கணவர் அடிக்கடி குடித்து விட்டு தகராறு செய்து அடித்து உதைப்பார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த சண்டையின் போது கூர்மையான ஆயுதத்தால் மலாயாவை தாக்கினார். பலத்த காயம் அடைந்த மலாயா பிப்லாடு போலீஸ் நிலையத்தில் கணவர் மீது புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மலாயாவின் கணவரை கைது செய்தனர்.

போலீஸ் நடவடிக்கைக்கு ஆளான மலாயாவின் கணவர் கடும் கோபம் அடைந்தார். போலீசில் சிக்க வைத்த மனைவிக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று திட்டமிட்டார். அவரது திட்டத்துக்கு நண்பர்களும் தூபம் போட்டனர்.

தனது திட்டத்தை நிறைவேற்ற மலாயாவின் கணவர் தருணம் பார்த்து காத்து இருந்தார். கடந்த 10–ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இரவில் தனது நண்பர்கள் வட்டாரத்தை சேர்ந்த 10 பேரை விருந்துக்கு தயாராக இருங்கள் என்று வயல்வெளியில் காத்திருக்க சொன்னார்.

வீட்டுக்கு சென்று மலாயாவிடம் 'நீ என் மீது கொடுத்த புகார் தொடர்பாக போலீசார் உன்னை விசாரணைக்கு அழைத்து வரும்படி கூறினார்கள். உடனே போக வேண்டும் வா என்று அழைத்தார்.

கணவர் சொன்னதை நம்பி தனது மகனுடன் மலாயா கிளம்பினார். ஊருக்கு வெளியே வயல்வெளி வழியாக நடந்து சென்றனர். அங்கு ஏற்கனவே தயாராக இருந்த நண்பர்கள் கூட்டத்தை பார்த்ததும் மலாயா திடுக்கிட்டார். ஏதோ நடக்கப் போகிறது என்று பயந்த மலாயா கணவரிடம் 'இங்கிருந்து போய் விடுவோம்'' உன்று கூறினார்.

அதை கேட்டு சிரித்த கணவரும், நண்பர்களும் கொஞ்சம் பொறு என்ற படி எல்லோரும் மது அருந்தினார்கள்.

போதை தலைக்கேறியதும் வெறி கொண்ட மிருகங்களாய் ஒவ்வொருவரும் மலாயா மீது பாய்ந்தனர். ஒருவர் மாறி ஒருவர் என்று 10 பேரும் ஆசை தீரும் வரை அந்த அபலை பெண்ணை கற்பழித்தனர்.

காமுகர்களின் பிடியில் சிக்கி சிதைந்த வேதனையில் துடித்த மலாயா கணவரிடம் என்னை காப்பாற்றுங்கள் என்று கெஞ்சினார். இறக்கமில்லாத அந்த அரக்க கணவன் தனது மனைவி மாற்றார்களால் கற்பழிக்கப்படுவதை பார்த்து ரசித்து கொண்டிருந்தான்.

உயிர் வலியோடு தவித்த மலாயா சோர்ந்து கிடந்தாள். தாகத்தில் நாவு வறண்டது. தண்ணீர் தண்ணீர் என்று பரிதாபமாக கெஞ்சினார். அவளது பரிதாப கெஞ்சலை பார்த்து பரிகாசம் செய்து குடிப்பதற்கு சிறுநீரை கொடுத்தார்கள் அந்த மகா பாவிகள்.

நடக்கவும் சக்தியற்று வயல் காட்டில் வீழ்ந்து கிடந்த மலாயாவை அதோடு விடுவதற்கும் அவர்களுக்கு மனம் இல்லை.

அடித்து துவைத்து எழுப்பினார்கள். உடலில் ஒரு பொட்டு ஆடையில்லாமல் அவிழ்த்து வீசினார்கள். கதறி துடித்த மலாயாவை அங்கிருந்து நிர்வாணமாக ஊர் முழுவதும் ஊர்வலமாக அழைத்து சென்றனர்.

பெற்ற தாய் தன் கண் முன்னால் சீரழிக்கப்பட்டு பரிதாபமாக கதறியதை பார்த்து அவரது 10 வயது மகனும் பரிதாபமாக கதறினான். அப்பா, அம்மாவை விட்டு விடுங்கள் என்று அந்த சின்னஞ்சிறுவன் கெஞ்சியதையும் யாரும் காதில் வாங்கவில்லை.

காப்பாற்ற யாரும் இல்லாமல், உதவிக்கரம் நீட்ட ஒருவர் கூட வராத நிலையில் என்னை விட்டு விடுங்கள் என்று கையெடுத்து கும்பிட்டாள். ஆனால் அந்த வெறி பிடித்த மனித மிருகங்கள் அப்பாவி மலாயாவை அடித்து, அடித்து ஊரை சுற்றி நிர்வாணமாக நடக்க வைத்து பழி தீர்த்து கொண்டனர்.

தகவல் அறிந்து போலீசார் அந்த கிராமத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மலாயாவின் கணவரையும், இதை கொடூர செயலில் ஈடுபட்ட அவரது நண்பர்கள் 10 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

...

[Continue reading...]

Saturday, 14 June 2014

தூள் பட வில்லி சொர்ணாக்கா மரணம் dhool movie willy swarnakka death

- 0 comments

தூள் பட வில்லி சொர்ணாக்கா மரணம் dhool movie willy swarnakka death

பிரபல வில்லி நடிகை சகுந்தலா திடீர் மரணம் அடைந்தார் அவருக்கு வயது 63. தமிழில் விக்ரமின் 'தூள்' படத்தில் சகுந்தலா வில்லியாக நடித்தார். இதில் சொர்ணாக்கா என்ற கேரக்டரில் அவர் வந்தார். அடியாட்களுடன் அப்பாவிகளை கொன்று வீசும் குரூர வில்லியாக தோன்றினார். இந்த வேடம் பரபரப்பாக பேசப்பட்டது.

ரவுடி பெண்களை பிற படங்களில் சொர்ணாக்கா என பேசும் அளவுக்கு இந்த கேரக்டர் வலுவாக அமைந்தது. விஜய்யின் சிவகாசி படத்தில் பிரகாஷ்ராஜ் மாமியாராக வந்தார். மருமகனை எம்.எல்.ஏ. வாக்க இவர் செய்யும் அடாவடி வில்லத்தனங்கள் ரசிகர்களை கவர்ந்தது. தெலுங்கில் முன்னணி நடிகையா இருந்தார். அங்கு இவரை தெலுங்கானா சகுந்தலா என்று அழைத்தனர்.

1981–ல் 'மா பூமி' என்ற படத்தில் அறிமுகமாகி ஏராளமான படங்களில் நடித்தார். 2003–ல் வெளியான 'ஒக்கடு' தெலுங்கு படம் சகுந்தலாவை முன்னணி நடிகையாக்கியது. தொடர்ந்து முன்னணி தெலுங்கு நடிகர்களுடன் வில்லி, காமெடி, மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். சகுந்தலா பேசும் 'பஞ்ச்' வசனங்கள் பிரபலமானவை இதுவே அவரை பெரிய நடிகையாக்கியது.

தெலுங்கு ரசிகர்கள் சகுந்தலாவை அடுத்த சூர்யகாந்தம் என்று அழைத்தனர். ஐதராபாத்தில் உள்ள கொம்பள்ளி பகுதியில் உள்ள வீட்டில் சகுந்தலா வசித்து வந்தார். நேற்று நள்ளிரவு அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக ஐதராபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி மரணம் அடைந்தார்.

சகுந்தலா உடல் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டு உள்ளது. நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.
...

[Continue reading...]

பொள்ளாச்சியில் பாலியல் பலாத்காரம்: சிறுமியை கற்பழித்தவன் கைது

- 0 comments

பொள்ளாச்சியில் பாலியல் பலாத்காரம்: சிறுமியை கற்பழித்தவன் கைது pollachi girl molested criminal arrested

 

பொள்ளாச்சி, ஜூன். 14–

பொள்ளாச்சி பழைய பஸ் நிலையம் அருகே டி.இ.எல்.சி. தேவாலயம் உள்ளது. இதன் அருகே ஆதரவற்ற மாணவமாணவிகள் தங்கும் விடுதி உள்ளது. இங்கு 17 மாணவர்கள், 3 மாணவிகள் தங்கியிருந்தனர்.

கடந்த 11–ந் தேதி இரவு இந்த விடுதிக்குள் மர்ம மனிதர்கள் புகுந்தனர். அவர்கள் அங்கிருந்த 10 வயது மற்றும் 11 வயது மாணவிகள் 2 பேரை கத்தி முனையில் மிரட்டினர். பின்னர் அவர்களை விடுதி வளாகத்தில் உள்ள பாழடைந்த கட்டிடத்துக்கு தூக்கிச்சென்று கற்பழித்தனர்.

அந்த மாணவிகள் இருவரும் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்தியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விடுதியில் தங்கியிருந்த மாணவிகள் கற்பழிக்கப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

பல்வேறு சமூக அமைப்புகளும் இந்த கொடூர செயலுக்கு கண்டனம் தெரிவித்தன. குற்றவாளிகளை உடனே கைது செய்யுமாறு முதல்அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். முதல் கட்டமாக விடுதிக்கு சீல் வைக்கப்பட்டது.

மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. டேவிட்சன் தேவாசீர்வாதம், கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவின் பேரில் 6 தனிப்படை அமைக்கப்பட்டது. பொள்ளாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை தொடங்கினார்கள்.

பொள்ளாச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பாலியல் பலாத்கார வழக்குகளில் தொடர்புடையவர்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பொள்ளாச்சி சி.டி.சி. மேடு பகுதியை சேர்ந்த கோபிநாத் (27) என்பவனை பிடித்து விசாரித்தனர்.

அவன் கொடுத்த தகவலின் பேரில் வால்பாறையை சேர்ந்த வீராசாமி (23)யும், அவனது நண்பனும் விடுதிக்கு சென்று மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

வீராசாமியின் போட்டோவை கோபிநாத்திடம் இருந்து பெற்ற போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வரும் 10 வயது மாணவியிடம் போட்டோவை காட்டி விசாரித்த போது தன்னை சீரழித்தவன் இவன் தான் என்று அந்த மாணவி அடையாளம் காட்டினாள்.

இந்த வழக்கில் பொள்ளாச்சியை சேர்ந்த அரவிந்த் (25), அருண் வெங்கடேஷ் (23), ஹரி (22) ஆகியோர் மீதும் தனிப்படை போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே அவர்கள் 3 பேரையும் பிடித்து விசாரித்தனர்.

பின்னர் அவர்கள் 3 பேருடன் கோபிநாத்தையும் சேர்த்து பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். அங்கு அவர்கள் 4 பேருக்கும் ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின்னர் ஆனைமலை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

இந்த நிலையில் உடுமலை பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சென்று கொண்டிருந்த ஒருவனைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவன் தான் பொள்ளாச்சியில் விடுதியில் தங்கியிருந்த 10 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வீராசாமி என்பது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து அவனை பொள்ளாச்சி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவனை கைது செய்தனர். பின்னர் அவனை பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 10 வயது சிறுமி முன்பு நிறுத்தினர். அந்த சிறுமியும் 'இவன் தான் என்னை பாலியல் பலாத்காரம் செய்தான்' என்று அடையாளம் காட்டினாள். இதைத்தொடர்ந்து வீராசாமிக்கு ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டது.

பின்னர் ஆனைமலை, பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீஸ் நிலையங்களில் வீராசாமியிடம் விசாரணை நடைபெற்றது. ஐ.ஜி. டேவிட்சன் தேவாசீர்வாதம், சூப்பிரண்டு சுதாகர் ஆகியோர் முன்னிலையிலேயே இந்த விசாரணை நடந்தது. மேலும் தகவல் பெற வேண்டியதுள்ளதால் வீராசாமியை ரகசிய இடத்துக்கு கொண்டு சென்று விசாரித்து வருகிறார்கள்.

...

 

[Continue reading...]

Thursday, 12 June 2014

ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்தியால் மர்ம உறுப்பை வெட்டி நபர் படுகொலை

- 0 comments

ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்தியால் மர்ம உறுப்பை வெட்டி நபர் படுகொலை man murder forcing homophobia

 

குன்னம், ஜூன் 12–

பீகார் மாநிலம் ஜம்மு மாவட்டம் தக்கல் அருகே உள்ள ராஜகர்னா காடு பகுதியை சேர்ந்தவர் குஜார் பண்டிட். இவரது மகன் நாராயன் பண்டிட் (வயது 36). இவரது நண்பர் அதே ஜம்மு மாவட்டம் தக்கல் அருகே உள்ள கரும்புத்து கிராமத்தை சேர்ந்த ஜெனார்த்தன பண்டிட் மகன் குபேந்திரன் பண்டிட் (36).

இவர்கள் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் மேட்டுத் தெரு பகுதியில் அறை எடுத்து தங்கி கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கொத்தனார் வேலை செய்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் நாராயன் பண்டிட்டும், குபேந்திரன் பண்டிட்டும் தங்கி இருந்த அறையில் இருந்து திடீரென அலறல் சத்தம் கேட்டது. இவர்களது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஏராளமானோர் அங்கு ஓடி வந்தனர்.

அவர்கள் தங்கியிருந்த அறைக்குள் சென்று பார்த்த போது நாராயன் பண்டிட் மர்ம உறுப்பு அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அருகில் படுத்திருந்த குபேந்திர பண்டிட்டும் கழுத்தில் லேசான காயங்களுடன் கிடந்தார். உடனே அங்கு கூடியிருந்தவர்கள் அவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயற்சி செய்தனர்.

இதற்கிடையே நாராயன் பண்டிட் பரிதாபமாக துடி துடித்து இறந்தார். இதுகுறித்து அந்த பகுதியினர் குன்னம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். குன்னம் போலீசார் உயர் அதிகாரிகளுக்கு கொடுத்த தகவலின் பேரில் பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி. சோனல் சந்திரா, டி.எஸ்.பி. கோவிந்தராஜன், குன்னம் இன்ஸ்பெக்டர் சிவராஜ், சப்இன்ஸ்பெக்டர் மலர் அழகன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் நாராயன் பண்டிட் உடலை போலீசார் மீட்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து, கழுத்தில் காயங்களுடன் கிடந்த குபேந்திர பண்டிட்டிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மர்ம நபர்கள் 2 பேர் நள்ளிரவில் புகுந்து நாராயன் பண்டிட்டின் மர்ம உறுப்பை அறுத்து கொலை செய்ததாக குபேந்திரன் பண்டிட் கூறினார். மேலும் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த போலீசார் குபேந்திர பண்டிட்டிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது நாராயன் பண்டிட், குபேந்திர பண்டிட்டை நள்ளிரவில் ஓரின சேர்க்கைக்கு அழைத்து தினமும் வற்புறுத்துவாராம். நேற்றும் நள்ளிரவில் வழக்கம் போல ஓரின சேர்க்கைக்கு வற்புறுத்தி உள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த குபேந்திர பண்டிட், நாராயன் பண்டிட்டின் மர்ம உறுப்பை கத்தியால் அறுத்துள்ளார். மேலும் ஆத்திரம் தீராத அவர் கத்தியால் தலையில் சரமாரியாக குத்தியுள்ளார்.

இதில் நாராயன் பண்டிட் இறந்து போனதும் இதை மறைக்க 2 மர்ம நபர்கள் நள்ளிரவில் தங்கள் அறைக்கு வந்து நாராயன் பண்டிட்டை கொலை செய்து விட்டு தன்னையும் கழுத்தில் கத்தியால் அறுத்து விட்டு தப்பியதாக கூறி அவர் நாடகமாடியதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் குபேந்திர பண்டிட்டை கைது செய்தனர். இந்த சம்பவம் குன்னம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

...

 

[Continue reading...]

Wednesday, 11 June 2014

நடிகை சமந்தாவை மணப்பதாக வதந்தி: சித்தார்த் Rumored to be marrying actress Samantha Siddharth

- 0 comments

நடிகை சமந்தாவை மணப்பதாக வதந்தி: சித்தார்த் Rumored to be marrying actress Samantha Siddharth

Error! Filename not specified.

நடிகை சமந்தாவை மணப்பதாக வதந்தி பரவி உள்ளது என்று சித்தார்த் கூறினார். சமந்தாவும் சித்தார்த்தும் காதலிப்பதாக செய்தி பரவின. இருவரும் தெலுங்கு பட மொன்றில் ஜோடியாக நடித்த போது நெருக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இருவரும் ஜோடியாக கோவில்களுக்கு சென்று சாமி கும்பிட்டனர். பட விழாக்களுக்கும் சேர்ந்தே வந்தார்கள்.

ரகசிய திருமணம் செய்து கொண்டார்கள் என்றும் கிசுகிசுக்கப்பட்டது. இதுகுறித்து சித்தார்த்திடம் கேட்ட போது மறுத்தார். சமந்தாவை நான் மணப்பதாக சொல்வது வெறும் வதந்திதான் என்றார். மேலும் அவர் கூறியதாவது:

நான் நடித்த இரண்டு படங்கள் ரிலீசுக்கு தயாராகிறது. அதில் ஒரு படம் தெலுங்கு. இன்னொரு படம் தமிழில் தயாராகியுள்ள ஜிகிர்தண்டா. இந்தி படங்களில் நடிக்கும் திட்டம் இல்லை. தென் இந்திய மொழி படங்களில் நடிக்கவே ஆர்வம் காட்டுகிறேன்.

...

 

[Continue reading...]

நீங்கள் ஏதேனும் சூழ்நிலையில் கைது செய்யப்பட்டால் அந்த சமயம் உங்கள் உரிமை என்ன..?

- 0 comments

நீங்கள் ஏதேனும் சூழ்நிலையில் கைது செய்யப்பட்டால் அந்த சமயம் உங்கள் உரிமை என்ன..?

 

கைது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் 11 கட்டளைகள்.

 

1. கைது செய்கின்ற அதிகாரி அடையாள அட்டை பொருத்தியிருக்கவேண்டும்.

 

2. கைது செய்தவுடன் அந்த இடத்திலே கைது குறிப்பு தயாரிக்க வேண்டும்.

 

3. கைது செய்யப்படும் தகவலை உறவினர், நண்பர், தெரிந்தவருக்குத் தெரிவிக்க வேண்டும்.

 

4. கைது செய்யப்பட்ட விபரம் 8 மணி முதல் 12 மணி நேரத்திற்குள் உறவினருக்கு அறிவிக்க வேண்டும்.

 

5. தான் விரும்பும் ஒருவருக்கு தகவல் தெரிவிப்பதற்கான உரிமை உண்டு என்பதை கைது செய்யப்பட்டவருக்குத் தெரிவிக்க வேண்டும்

 

6. காவலில் உள்ள இடத்தில் கைது விபரம், கைது குறித்தத் தகவல் தெரிவிக்கப்பட்டவிபரம் மற்றும் எந்த அதிகாரியின் பொறுப்பில் இருக்கிறார் என்ற விபரங்களை பதிவேட்டில் குறிக்க வேண்டும்

 

7. கைது செய்யப்பட்டவர் உடல் நிலையைப் பரிசோதித்துச் சோதனைக் குறிப்பு தயார் செய்ய வேண்டும்.

 

8. கைது செய்யப்பட்டவரை 48 மணி நேரத்திற்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும்.

 

9. கைது செய்யப்பட்ட ஆவணங்களைக் குற்றவியல் நடுவருக்கு அனுப்ப வேண்டும்.

 

10. கைது செய்யப்பட்டவரை விசாரிக்கும்போது வழக்கறிஞர் உடனிருக்க வேண்டும்.

 

11. கைது பற்றிய தகவல் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்.

 

[Continue reading...]

Saturday, 7 June 2014

மலேசிய பெண்ணை கற்பழித்த வர்த்தக ஆலோசகர் கைது Malaysian woman raped business consultant held

- 0 comments

மலேசிய பெண்ணை கற்பழித்த வர்த்தக ஆலோசகர் கைது Malaysian woman raped business consultant held

 

ஜெய்ப்பூர், ஜூன் 7-

ராஜஸ்தானில் 30 வயதான மலேசிய பெண்ணை கற்பழித்த வர்த்தக ஆலோசகரை போலீசார் கைது செய்தனர்.

மலேசியாவைச் சேர்ந்த அந்த பெண் தொழில் விஷயமாக கடந்த மே மாதம் ஜோத்பூருக்கு வந்துள்ளார். அங்கிருந்து மே 21-ம் தேதி ஜெய்ப்பூர் வந்த அவர், தனது தொழில் திட்டம் தொடர்பாக புனித் ஜெயின் (30) என்பவரை சந்தித்துள்ளார். அப்போது முதல் எங்கு சென்றாலும் இருவரும் சேர்ந்தே சென்றுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை இரவு சாப்பிட்ட பின்னர் புனித் ஜெயின் அந்த பெண்ணை நீண்ட தூரம் காரில் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் நள்ளிரவில் குளிர்பானத்தில் போதை மருந்து கலந்து கொடுத்த புனித் ஜெயின், காருக்குள் வைத்தே அந்த பெண்ணை கற்பழித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் புனித் ஜெயின் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரது காரில் இருந்து துப்பாக்கி ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

...

 

[Continue reading...]

எங்கே எனது கவிதை - Kandukonden kandukonden - Enge enathu Kavithai Song lyrics

- 0 comments

எங்கே எனது கவிதை - Kandukonden kandukonden - Enge enathu Kavithai Song lyrics

 

(1) எங்கே எனது கவிதை

 கனவிலே எழுதி மடித்த கவிதை

 எங்கே எனது கவிதை

 கனவிலே எழுதி மடித்த கவிதை

 

Engae enadhu kavidai

kanavilae ezhudhi maditha kavidai

Engae enadhu kavidai

kanavilae ezhudhi maditha kavidai

 

Do you know where my poem is?

The one that I wrote and folded in my dream.

Do you know where my poem is?

The one that I wrote and folded in my dream.

 

(2) விழியில் கரைந்துவிட்டதோ

 அம்மம்மா விடியல் அழித்துவிட்டதோ

 கவிதை தேடித்தாருங்கள்

 இல்லை என் கனவை மீட்டு தாருங்கள்

 

vizhiyil karaindhu vitadho

ammamaa, vidiyal azhithu vittadho

kavidai thedi taarungal

illai yen kanavai meetu thaarungal

 

Did it melt away in my eyes?

or, did the dawn clear off my dream?

could you please search my poem for me?

else could you recover my dream back to me?

 

(3) மாலை அந்திகளில் மனதின் சந்துகளில்

 தொலைந்த முகத்தை மனம் தேடுதே

 வெயில் தாரொழுகும் நகர வீதிகளில்

 மையல் கொண்டு மலர் வாடுதே

maalai andhigalil manadin sandhugalil

tholaindha mugaththai manam thedudey

veyil thaarozhugum nagara veedhigalil

maiyal kondu malar vaadudey

 

During the evening twilight, in the crevices of my heart,

my heart is searching for a lost face.

In the streets of the city where sun beats down

a flower wilts away waiting.

 

(4) மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில்

 துருவித் துருவி உனைத் தேடுதே

 உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை

 உருகி உருகி மனம் தேடுதே

megam sindhum iru thuliyin idai veliyil

thuruvi thuruvi unnai thedudey

udaiyum nuraigalilum tholaintha kaadhalannai

urugi urugi manam thedudey

 

In between the rain drops (tears) shed by the cloud (eyes)

my eyes constantly searches you.

Amidst the bursting bubbles,

my heart melts and searches for the lost lover.

 

(5) அழகிய திருமுகம் ஒரு தரம் பார்த்தால்

 அமைதியில் நிறைந்திருப்பேன்

 நுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்டு

 நூறு முறை பிறந்திருப்பேன்

azhagiya thirumugam oru daram paarthaal,

amaidiyil niraindirupaen

nuni viral kondu oru murai teendu

nooru murai pirandhirupaen

 

If I could see your lovely face even once,

I will be filled with peace.

If I feel the touch of your finger tip even once,

I will feel like I have born a hundred times at that very moment.

 

Chorus:

 

(6) பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன்

 நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்

 நிழல் கண்டவுடன் நீயென்று

 இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்

pirai vandhavudan nila vandhavudan

nila vandhadendru ullam thullum

nizhal kandavudan nee yendru

indha nenjam nenjam vimmum

 

When the moon comes out following the crescent,

my heart pumps in joy that the moon has come.

The moment I see the shadow,

My heart is ecstatic expecting it to be you.

 

(7) ஒரே பார்வையடா ஒரே வார்த்தையடா

 ஒரே தொடுதல் மனம் வேண்டுதே

 முத்தம் போடும் அந்த மூச்சின் வெப்பம்

 அது நித்தம் வேண்டும் என்றும் வேண்டுதே

ore paarvaiyada ore vaarthaiyada

ore thodudhal manam vaendudey

mutham podum andha moochin veppam

adhu nitham veendum endru vaendudey

 

My heart longs for just a look, or just a word

or just a touch of yours.

The warmth from your breadth when you kiss me,

is what my heart prays to have forever.

 

(8) வேர்வை பூத்த உந்தன் சட்டை வாசம்

 என்று ஒட்டும் என்று மனம் ஏங்குதே

 முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு

 குத்தும் இன்பம் கண்ணம் கேட்குதே... கேட்குதே

vaervai pootha undhan sattai vaasam

yendru ottum endru manam eangudey

mugam poothirukkum mudiyil ondrirandu

kuthum inbhum kannam kaetkudey… kaetkudey

 

My heart yearns for moment when the smell of  your

sweat-filled shirt would embrace me

My cheek asks for the pleasure that when bristles from

your stubbled face caress me

 

(9) பாறையில் செய்தது என் மனம் என்று

 தோழிக்கு சொல்லியிருந்தேன்

 பாறையின் இடுக்கில் வேர் விட்ட கொடியாய்

 நீ நெஞ்சில் முளைத்து விட்டாய்

paaraiyil seidhadhu en manam yendru

thozhikku solli irundaen

paaraiyin idukkil vaer vitta kodiyaai

nee nenjil mulaithu vitaai.

 

I had told my friend (girl) that

my heart is made of stone.

But like a creeper that roots between the cracks of the rock,

you have grown into my heart.

 

[Continue reading...]

Friday, 6 June 2014

ரூ.200 கோடியில் தயாராகும் எந்திரன் 2–ம் பாகம் Rs 200 crore Preparing Endhiran 2nd Part

- 0 comments

ரூ.200 கோடியில் தயாராகும் எந்திரன் 2–ம் பாகம் Rs 200 crore Preparing Endhiran 2nd Part

Error! Filename not specified.

ரஜினியின் 'எந்திரன்' படம் 2010–ல் வெளிவந்தது. ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடித்து இருந்தார். இதில் ரஜினி 'விஞ்ஞானி', 'ரோபோ' என இரு கேரக்டரில் வந்தார். ஷங்கர் இயக்கினார். கிராபிக்ஸ் அனிமேஷனில் பிரமாண்ட படமாக இது பேசப்பட்டது. உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடி வசூலையும் குவித்தது.

இதன் இரண்டாம் பாகம் 'எந்திரன்–2' என்ற பெயரில் எடுக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளார். இதற்கான பணிகள் விறுவிறுப்பாக துவங்கியுள்ளன. படத்துக்கான கதை மற்றும் திரைக்கதையை ஷங்கர் தயார் செய்து ரஜினியிடம் சொல்லி ஒப்புதல் வாங்கி விட்டதாக கூறப்படுகிறது. இப்படத்தை எடுக்க ரூ.200 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.

ஷங்கர் தற்போது விக்ரமை வைத்து '' படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து 'டப்பிங்' ரீரிக்கார்டிங், கிராபிக்ஸ், மிக்சிங் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபோல் ரஜினியும் 'லிங்கா' படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு மைசூரில் நடந்து முடிந்து, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஐதரபாத்தில் துவங்கியுள்ளது.

இப்படங்களை முடித்து விட்டு இருவரும் 'எந்திரன்–2' படத்துக்கு வருகிறார்கள்.

ஐஸ்வர்யாராயையே எந்திரன்–2 படத்தில் நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கின்றன. இதற்காக அவரிடம் பேச்சு நடப்பதாக தெரிகிறது.

...

 

[Continue reading...]

Wednesday, 4 June 2014

72 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த ரெயில்வே டிக்கெட் பரிசோதகர் 72 married women cheating a railway ticket inspector

- 0 comments

 

 72 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த ரெயில்வே டிக்கெட் பரிசோதகர் 72 married women cheating a railway ticket inspector

 

பாட்னா, ஜூன் 4–

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் முகமது சிஜாம். ரெயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக பணிபுரிகிறார். இவர் 72 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். அவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பான தகவல்கள் வெளியாகின.

முகமது சிஜாம் டிப்டாப் ஆக உடை அணிந்து மிகவும் வசீகரமாக இருப்பார். அதை பயன்படுத்தி கிராமத்து இளம்பெண்களை திருமணம் செய்துள்ளார். தான் ரெயில்வேயில் வேலை பார்ப்பதால் கை நிறைய சம்பளம் கிடைக்கும். அதன் மூலம் உல்லாச வாழ்க்கை வாழலாம் என ஆசைவார்த்தை கூறி திருமணத்துக்கு சம்மதிக்க வைப்பார்.

நிறைய வரதட்சணை மற்றும் சீர் வரிசைகளுடன் திருமணம் முடிந்ததும் அவர்களுடன் சிறிது நாட்கள் குடும்பம் நடத்துவார். பின்னர் அவர்களை ஏமாற்றி பணம் மற்றும் நகைகளை அபகரித்துக் கொள்வார்.

அதன் பிறகு, தனக்கு வேறு ஊருக்கு வேலை மாற்றலாகி விட்டது. எனவே சிறிது நாட்கள் கழித்து அழைத்து செல்கிறேன் என கூறி அப்பெண்களை நிர்கதியாக விட்டு விட்டு அங்கிருந்து தப்பி விடுவார். இதுபோன்று தான் 72 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார்.

இவர் பீகாரில் உள்ள மேற்கு சாம்பரான், சிதாமர்கி, முசாபர் பூர், பகல்பூர், பகுசாரை, பூர்ணியா, மாதேபுரா, கிடின் கஞ்ச் பகுதியிலும், மேற்குவங்காளத்தில் மிட்னாபூர், அசன்கால், மால்டா, சீல்டா மற்றும் அவுரா பகுதிகளிலும் பெண்களை திருமணம் செய்துள்ளார்.

இவர் திருமணம் செய்யும்போது இந்து பெண்களை திருமணம் செய்ய இந்துவாகவும், முஸ்லிம் பெண்களை திருமணம் செய்ய முஸ்லிம் ஆகவும் மாறி இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

...

 

[Continue reading...]

ஆன் லைன் மூலம் வலைவிரிப்பு: அதிகரிக்கும் மசாஜ் கிளப் விபசாரம் massage club prostitute increase via online

- 0 comments

ஆன் லைன் மூலம் வலைவிரிப்பு: அதிகரிக்கும் மசாஜ் கிளப் விபசாரம் massage club prostitute increase via online

 

சென்னை, ஜூன் 4–

சென்னையில் செயல்படும் சில மசாஜ் கிளப்புகளுக்கு ஆன் லைன் மூலம் வாடிக்கையாளர்களை வரவழைத்து விபசார தொழில் நடப்பதாக புகார்கள் வந்தன.

இதையடுத்து துணை கமிஷனர் ஜெயக்குமார், உதவி கமிஷனர் கணபதி ஆகியோர் மேற்பார்வையில் விபசார தடுப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான தனிப்படை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னை அண்ணா நகரில் சொகுசு வீட்டில் மசாஜ் கிளப் என்ற பெயரில் விபசார தொழில் செய்து வந்த பானு என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

அந்த வீட்டில் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட வட மாநில பெண்கள் 5 பேர் மீட்கப்பட்டனர்.

நீலாங்கரையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் மசாஜ் கிளப் தொடங்கி விபசாரம் நடத்திய சுராஜ் என்பவர் கைதானார். அங்கிருந்து 3 பெண்களும் மீட்கப்பட்டனர். இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கடந்த 6 மாதத்தில் மட்டும் 40 மசாஜ் கிளப்புகளில் சோதனை நடத்தி 40 விபசார புரோக்கர்களை போலீசார் பிடித்துள்ளனர். இவர்களில் 20 புரோக்கர்கள் பெண்கள் ஆவர்.

இவர்கள் ஆன்லைன் மூலம் விளம்பரம் செய்து மசாஜ் செய்யப்படும் என்று அழைப்பார்கள். பின்னர் மசாஜ் செய்ய வரும் ஆண்களுக்கு ஆசையை தூண்டி விட்டு விபசாரத்துக்கு அழைப்பார்கள்.

விபசாரத்தில் ஈடுபடுத்துவதற்காக மும்பை, பெங்களூரில் இருந்து அழகிகளை வரவழைப்பார்கள்.

சென்னையில் மட்டும் சட்ட விதிகளை மீறி 80–க்கும் மேற்பட்ட மசாஜ் கிளப்புகள் செயல்படுகின்றன. அந்த மசாஜ் கிளப்புகள் அவ்வப் போது கண்காணிக்கப்பட்டு வருகின்றன. 35–க்கும் மேற்பட்ட வெளி மாநில பெண்கள் மீட்கப்பட்டனர்.

முன்பு விபசாரத்தில் ஈடுபடும் பெண்களை கைது செய்வது வழக்கம். தற்போது அவர்களை பாதிக்கப்பட்ட பெண்ணாக கருதி காப்பகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. எனவே அவர்களை கைது செய்வதில்லை. மருத்துவ பரிசோதனை நடத்தி காப்பகத்தில் ஒப்படைக்கின்றனர்.

காப்பகத்தில் இருந்து வெளியே வரும் பெண்கள் மீண்டும் விபசாரத்தில் ஈடுபடுகின்றனர். மசாஜ் கிளப்பை கட்டுப்படுத்தும் அதிகாரம் எங்களுக்கு இல்லை. அந்த அதிகாரம் மாநகராட்சிக்குத்தான் உள்ளது. எனவே தகுந்த சட்டவிதிகளை வகுத்து மசாஜ் கிளப்புக்கு அனுமதி கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

...

 

[Continue reading...]

Tuesday, 3 June 2014

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை Thenpennai river floods warning for coastal people

- 0 comments

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை Thenpennai river floods warning for coastal people

 

கிருஷ்ணகிரி, ஜூன் 3–

கர்நாடக மாநிலம் நந்தி ஹில்ஸ் மலையில் தென்பெண்ணை ஆறு உற்பத்தியாகிறது. இது கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டம் வழியாக சென்று கடலூரில் கடலில் கலக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணை மற்றும் கிருஷ்ணகிரி அருகே உள்ள பெரியமுத்தூர் பகுதியில் கே.ஆர்.பி. அணை ஆகிய இடங்களில் அணை கட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து பெய்து வரும் கனமழை காரணமாக கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக 44 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 41.5 அடியாக உயர்ந்து உள்ளது. மேலும் தொடர்ந்து அணைக்கு 500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து தென்பெண்ணை யாற்றில் 360 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேலும் மழை தீவிரம் அடைந்து வருவதால் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது. இதன் காரணமாக தென் பெண்ணை ஆற்றில் அந்த தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டால் வெள்ளப்பெருக்கு ஏற்படும். எனவே ஓசூர் பகுதியில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டு இருக்கிறது.

தென்பெண்ணை ஆற்றில் அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டு இருப்பதால் கே.ஆர்.பி. அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

...

 

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger