Saturday, 7 June 2014

எங்கே எனது கவிதை - Kandukonden kandukonden - Enge enathu Kavithai Song lyrics

எங்கே எனது கவிதை - Kandukonden kandukonden - Enge enathu Kavithai Song lyrics

 

(1) எங்கே எனது கவிதை

 கனவிலே எழுதி மடித்த கவிதை

 எங்கே எனது கவிதை

 கனவிலே எழுதி மடித்த கவிதை

 

Engae enadhu kavidai

kanavilae ezhudhi maditha kavidai

Engae enadhu kavidai

kanavilae ezhudhi maditha kavidai

 

Do you know where my poem is?

The one that I wrote and folded in my dream.

Do you know where my poem is?

The one that I wrote and folded in my dream.

 

(2) விழியில் கரைந்துவிட்டதோ

 அம்மம்மா விடியல் அழித்துவிட்டதோ

 கவிதை தேடித்தாருங்கள்

 இல்லை என் கனவை மீட்டு தாருங்கள்

 

vizhiyil karaindhu vitadho

ammamaa, vidiyal azhithu vittadho

kavidai thedi taarungal

illai yen kanavai meetu thaarungal

 

Did it melt away in my eyes?

or, did the dawn clear off my dream?

could you please search my poem for me?

else could you recover my dream back to me?

 

(3) மாலை அந்திகளில் மனதின் சந்துகளில்

 தொலைந்த முகத்தை மனம் தேடுதே

 வெயில் தாரொழுகும் நகர வீதிகளில்

 மையல் கொண்டு மலர் வாடுதே

maalai andhigalil manadin sandhugalil

tholaindha mugaththai manam thedudey

veyil thaarozhugum nagara veedhigalil

maiyal kondu malar vaadudey

 

During the evening twilight, in the crevices of my heart,

my heart is searching for a lost face.

In the streets of the city where sun beats down

a flower wilts away waiting.

 

(4) மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில்

 துருவித் துருவி உனைத் தேடுதே

 உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை

 உருகி உருகி மனம் தேடுதே

megam sindhum iru thuliyin idai veliyil

thuruvi thuruvi unnai thedudey

udaiyum nuraigalilum tholaintha kaadhalannai

urugi urugi manam thedudey

 

In between the rain drops (tears) shed by the cloud (eyes)

my eyes constantly searches you.

Amidst the bursting bubbles,

my heart melts and searches for the lost lover.

 

(5) அழகிய திருமுகம் ஒரு தரம் பார்த்தால்

 அமைதியில் நிறைந்திருப்பேன்

 நுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்டு

 நூறு முறை பிறந்திருப்பேன்

azhagiya thirumugam oru daram paarthaal,

amaidiyil niraindirupaen

nuni viral kondu oru murai teendu

nooru murai pirandhirupaen

 

If I could see your lovely face even once,

I will be filled with peace.

If I feel the touch of your finger tip even once,

I will feel like I have born a hundred times at that very moment.

 

Chorus:

 

(6) பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன்

 நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்

 நிழல் கண்டவுடன் நீயென்று

 இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்

pirai vandhavudan nila vandhavudan

nila vandhadendru ullam thullum

nizhal kandavudan nee yendru

indha nenjam nenjam vimmum

 

When the moon comes out following the crescent,

my heart pumps in joy that the moon has come.

The moment I see the shadow,

My heart is ecstatic expecting it to be you.

 

(7) ஒரே பார்வையடா ஒரே வார்த்தையடா

 ஒரே தொடுதல் மனம் வேண்டுதே

 முத்தம் போடும் அந்த மூச்சின் வெப்பம்

 அது நித்தம் வேண்டும் என்றும் வேண்டுதே

ore paarvaiyada ore vaarthaiyada

ore thodudhal manam vaendudey

mutham podum andha moochin veppam

adhu nitham veendum endru vaendudey

 

My heart longs for just a look, or just a word

or just a touch of yours.

The warmth from your breadth when you kiss me,

is what my heart prays to have forever.

 

(8) வேர்வை பூத்த உந்தன் சட்டை வாசம்

 என்று ஒட்டும் என்று மனம் ஏங்குதே

 முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு

 குத்தும் இன்பம் கண்ணம் கேட்குதே... கேட்குதே

vaervai pootha undhan sattai vaasam

yendru ottum endru manam eangudey

mugam poothirukkum mudiyil ondrirandu

kuthum inbhum kannam kaetkudey… kaetkudey

 

My heart yearns for moment when the smell of  your

sweat-filled shirt would embrace me

My cheek asks for the pleasure that when bristles from

your stubbled face caress me

 

(9) பாறையில் செய்தது என் மனம் என்று

 தோழிக்கு சொல்லியிருந்தேன்

 பாறையின் இடுக்கில் வேர் விட்ட கொடியாய்

 நீ நெஞ்சில் முளைத்து விட்டாய்

paaraiyil seidhadhu en manam yendru

thozhikku solli irundaen

paaraiyin idukkil vaer vitta kodiyaai

nee nenjil mulaithu vitaai.

 

I had told my friend (girl) that

my heart is made of stone.

But like a creeper that roots between the cracks of the rock,

you have grown into my heart.

 

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger