Monday, 23 June 2014

நீ அழகாக இல்லை எனக்கூறி புதுப்பெண்ணை சித்ரவதை செய்த கணவன் கைது

நீ அழகாக இல்லை எனக்கூறி புதுப்பெண்ணை சித்ரவதை செய்த கணவன் கைது husband arrested for woman torture

திருவண்ணாமலை, ஜூன் 22–

திருவண்ணாமலை அருகே உள்ள கீழ்கரிப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயமோகன் (வயது29). விவசாயி. திருவண்ணாமலை பே கோபுர தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள் மகள் துர்காதேவி(22). ஜெயமோகனுக்கும், துர்கா தேவிக்கும் 2 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன் மனைவி இருவரும் கடந்த ஒரு மாதமாக சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக, நீ அழகாக இல்லை, எனக்கு பொருத்தமானவள் இல்லை உன் வீட்டிற்கு சென்றுவிடு எனக்கூறி ஜெயமோகன், மனைவி துர்காதேவியை கொடுமைப்படுத்தியுள்ளார். மேலும் உடல் ரீதியாக துன்புறுத்தியதாக தெரிகிறது.

இதற்கு ஜெயமோகனின் தாய் பச்சையம்மாளும் உடந்தையாக இருந்துள்ளார். இதனால் விரக்தியடைந்த துர்காதேவி திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயமோகனை கைது செய்தனர்.

...

 

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger