Sunday, 15 June 2014

சென்னை பெண் டாக்டர் கொலை: கார் டிரைவர்–வேலைக்காரி கைது

 

சென்னை பெண் டாக்டர் கொலை: கார் டிரைவர்வேலைக்காரி கைது chennai woman doctor murder car driver servant arrested

 

சென்னை, ஜூன்.16–

சென்னை முகப்பேர் ஏரித்திட்டம் பகுதியை சேர்ந்தவர் மல்லிகா (வயது 63), டாக்டர். தனது இளைய மகள் ரோகிணி பிரியாவுடன் வசித்து வந்த இவர் திருப்போரூரில் உள்ள சொந்த நிலத்தை விற்பதற்காக கடந்த 12–ந் தேதி தனது காரில் சென்றார்.

சென்னை நொளம்பூரை சேர்ந்த டிரைவர் கார்த்தி காரை ஓட்டினார். மல்லிகா வீட்டு வேலைக்கார பெண்ணும், கார்த்தியின் கள்ளக்காதலியுமான சத்யாவும் உடன் சென்றார்.

நள்ளிரவு வரை மல்லிகா வீடு திரும்பவில்லை. உடன் சென்ற டிரைவர் கார்த்தி, வேலைக்காரி சத்யா ஆகியோரும் மாயமாகி இருந்தனர். நொளம்பூர் இன்ஸ்பெக்டர் கர்ணன் தலைமையிலான போலீசார் தனிப்படை அமைத்து டாக்டர் மல்லிகாவை தேடி வந்தனர்.

இதற்கிடையே விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே மல்லிகா கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பது தெரிய வந்தது. டிரைவர் கார்த்தியும், அவரது கள்ளக்காதலி சத்யாவும் சேர்ந்து டாக்டர் மல்லிகாவை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

மல்லிகா அணிந்திருந்த ரூ. 3 லட்சம் மதிப்பிலான நகைகள், அவர் வைத்திருந்த ரூ.1 கோடி மதிப்பிலான நிலப்பத்திரம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இந்த நகைகள் சென்னையில் அடகு வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதற்கு சிலர் உதவி செய்திருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து கார்த்தி, சத்யாவுடன் சேர்ந்து டாக்டர் மல்லிகாவை கொலை செய்ய மேலும் பலர் திட்டமிட்டு செயல்பட்டிருப்பது அம்பலமானது. இந்த கோணத்தில் போலீஸ் விசாரணை முடுக்கி விடப்பட்டது.

கார்த்தியின் செல்போன் நம்பரை வைத்து அவரையும், கள்ளக்காதலி சத்யாவையும் பிடிக்க போலீசார் வலைவிரித்தனர். கொலையாளிகள் 2 பேரும் காரில் சுற்றிக் கொண்டிருக்க வாய்ப்பில்லை என்று போலீசார் கருதினர்.

காரை எங்காவது நிறுத்தி வைத்து விட்டு கார்த்தியும், சத்யாவும் தப்பிச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது. இதற்கு பலன் கிடைத்தது.

திண்டிவனம் பகுதி முழுவதும் போலீசார் சல்லடை போட்டு தேடியதில் டாக்டர் மல்லிகாவின் கார் அப்பகுதியில் சாலையோரமாக நிறுத்தப்பட்டி ருந்தது. அதனை போலீசார் கைப்பற்றினர்

இதற்கிடையே கார்த்தியும், சத்யாவும் தமிழகத்தை விட்டு ஆந்திர மாநிலத்துக்கு தப்பிச் சென்றது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து மயிலம் மற்றும் நொளம்பூர் போலீசார் 2 பேரையும் கைது செய்வதற்கு கூட்டாக இணைந்து செயல்பட்டனர்.

மேற்கு சென்னை இணை கமிஷனர் சண்முகவேல், விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் ஆகியோரது மேற்பார்வையில் தனிப்படை போலீசார் களத்தில் இறங்கினர். கார்த்தியின் செல்போன் நம்பரை வைத்து கண்காணித்ததில் அவர் திருப்பதியில் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் கார்த்தியை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். அவரது கள்ளக்காதலி சத்யாவும் பிடிபட்டார்.

சென்னைக்கு இருவரும் இன்று அதிகாலை 3 மணி அளவில் சென்னை கொண்டு வரப்பட்டனர். நொளம்பூர் போலீஸ் நிலையத்தில் வைத்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது 2 பேரும் அளித்த வாக்குமூலத்தில் திண்டிவனம் மயிலத்தில் டாக்டர் மல்லிகாவை கொலை செய்து நகைகளையும், நிலப் பத்திரத்தையும் கொள்ளை அடித்ததாக தெரிவித்தனர்.

சென்னையில் காணாமல் போன டாக்டர் மல்லிகா கொலை செய்யப்பட்டது மயிலத்தில் என்பதால் அங்குள்ள போலீசாரே கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் இந்த வழக்கில் அடுத்தக்கட்ட விசாரணையையும் அவர்களே மேற்கொள்வார்கள். இதன் காரணமாக கைது செய்யப்பட்ட கார்த்தியும், சத்யாவும் மயிலம் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இற்கிடையே இந்த வழக்கில் சத்யாவின் உறவுக்கார பெண்ணான ஆதிலட்சுமி என்பவரும், நில புரோக்கர் கணேசும் கைது செய்யப்பட்டனர்.

டாக்டர் மல்லிகாவிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை ஆதிலட்சுமிதான் சென்னையில் அடகு வைத்து பணம் வாங்கி கொடுத்துள்ளார். அதே நேரத்தில் மல்லிகாவின் சொத்தை அபகரிப்பதற்காக நில புரோக்கர் உடந்தையாக செயல்பட்டுள்ளார்.

இதனால் இவர்களும் இந்த கொலை வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். கைதான 4 பேரும் இரவோடு இரவாக மயிலத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். இன்று அங்குள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப் படுகிறார்கள்.

இந்த வழக்கில் இவர்கள் 4 பேரை தவிர மேலும் பலருக்கு தொடர்பு இருக்கிறதா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பெண் டாக்டர் ஒருவரை கொலை செய்வதற்கு 2 பெண்களே சதித்திட்டம் தீட்டி செயல்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

...

 

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger