மத்திய பிரதேசத்தில் இளம்பெண்ணை கற்பழித்து நிர்வாண ஊர்வலம் Young girl molested in Madhya Pradesh
போபால், ஜூன். 15–
நினைத்தாலே நெஞ்சம் பதறும் இந்த கொடூர சம்பவம் மத்திய பிரதேசத்தில் அரங்கேறி உள்ளது.
கந்த்வா மாவட்டவம் பிலைகெடா கிராமம். தலைநகர் போபாலில் இருந்து 300 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.
இந்த கிராமத்தை சேர்ந்தவர் மலாயா (35). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தலித் வகுப்பை சேர்ந்த இந்த பெண்ணுக்கு திருமணமாகி 10 வயதில் ஒரு மகனும் இருக்கிறான்.
மலாயாவின் கணவர் அடிக்கடி குடித்து விட்டு தகராறு செய்து அடித்து உதைப்பார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த சண்டையின் போது கூர்மையான ஆயுதத்தால் மலாயாவை தாக்கினார். பலத்த காயம் அடைந்த மலாயா பிப்லாடு போலீஸ் நிலையத்தில் கணவர் மீது புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மலாயாவின் கணவரை கைது செய்தனர்.
போலீஸ் நடவடிக்கைக்கு ஆளான மலாயாவின் கணவர் கடும் கோபம் அடைந்தார். போலீசில் சிக்க வைத்த மனைவிக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று திட்டமிட்டார். அவரது திட்டத்துக்கு நண்பர்களும் தூபம் போட்டனர்.
தனது திட்டத்தை நிறைவேற்ற மலாயாவின் கணவர் தருணம் பார்த்து காத்து இருந்தார். கடந்த 10–ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இரவில் தனது நண்பர்கள் வட்டாரத்தை சேர்ந்த 10 பேரை விருந்துக்கு தயாராக இருங்கள் என்று வயல்வெளியில் காத்திருக்க சொன்னார்.
வீட்டுக்கு சென்று மலாயாவிடம் 'நீ என் மீது கொடுத்த புகார் தொடர்பாக போலீசார் உன்னை விசாரணைக்கு அழைத்து வரும்படி கூறினார்கள். உடனே போக வேண்டும் வா என்று அழைத்தார்.
கணவர் சொன்னதை நம்பி தனது மகனுடன் மலாயா கிளம்பினார். ஊருக்கு வெளியே வயல்வெளி வழியாக நடந்து சென்றனர். அங்கு ஏற்கனவே தயாராக இருந்த நண்பர்கள் கூட்டத்தை பார்த்ததும் மலாயா திடுக்கிட்டார். ஏதோ நடக்கப் போகிறது என்று பயந்த மலாயா கணவரிடம் 'இங்கிருந்து போய் விடுவோம்'' உன்று கூறினார்.
அதை கேட்டு சிரித்த கணவரும், நண்பர்களும் கொஞ்சம் பொறு என்ற படி எல்லோரும் மது அருந்தினார்கள்.
போதை தலைக்கேறியதும் வெறி கொண்ட மிருகங்களாய் ஒவ்வொருவரும் மலாயா மீது பாய்ந்தனர். ஒருவர் மாறி ஒருவர் என்று 10 பேரும் ஆசை தீரும் வரை அந்த அபலை பெண்ணை கற்பழித்தனர்.
காமுகர்களின் பிடியில் சிக்கி சிதைந்த வேதனையில் துடித்த மலாயா கணவரிடம் என்னை காப்பாற்றுங்கள் என்று கெஞ்சினார். இறக்கமில்லாத அந்த அரக்க கணவன் தனது மனைவி மாற்றார்களால் கற்பழிக்கப்படுவதை பார்த்து ரசித்து கொண்டிருந்தான்.
உயிர் வலியோடு தவித்த மலாயா சோர்ந்து கிடந்தாள். தாகத்தில் நாவு வறண்டது. தண்ணீர் தண்ணீர் என்று பரிதாபமாக கெஞ்சினார். அவளது பரிதாப கெஞ்சலை பார்த்து பரிகாசம் செய்து குடிப்பதற்கு சிறுநீரை கொடுத்தார்கள் அந்த மகா பாவிகள்.
நடக்கவும் சக்தியற்று வயல் காட்டில் வீழ்ந்து கிடந்த மலாயாவை அதோடு விடுவதற்கும் அவர்களுக்கு மனம் இல்லை.
அடித்து துவைத்து எழுப்பினார்கள். உடலில் ஒரு பொட்டு ஆடையில்லாமல் அவிழ்த்து வீசினார்கள். கதறி துடித்த மலாயாவை அங்கிருந்து நிர்வாணமாக ஊர் முழுவதும் ஊர்வலமாக அழைத்து சென்றனர்.
பெற்ற தாய் தன் கண் முன்னால் சீரழிக்கப்பட்டு பரிதாபமாக கதறியதை பார்த்து அவரது 10 வயது மகனும் பரிதாபமாக கதறினான். அப்பா, அம்மாவை விட்டு விடுங்கள் என்று அந்த சின்னஞ்சிறுவன் கெஞ்சியதையும் யாரும் காதில் வாங்கவில்லை.
காப்பாற்ற யாரும் இல்லாமல், உதவிக்கரம் நீட்ட ஒருவர் கூட வராத நிலையில் என்னை விட்டு விடுங்கள் என்று கையெடுத்து கும்பிட்டாள். ஆனால் அந்த வெறி பிடித்த மனித மிருகங்கள் அப்பாவி மலாயாவை அடித்து, அடித்து ஊரை சுற்றி நிர்வாணமாக நடக்க வைத்து பழி தீர்த்து கொண்டனர்.
தகவல் அறிந்து போலீசார் அந்த கிராமத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மலாயாவின் கணவரையும், இதை கொடூர செயலில் ஈடுபட்ட அவரது நண்பர்கள் 10 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
...
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?