தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை Thenpennai river floods warning for coastal people கிருஷ்ணகிரி, ஜூன் 3– கர்நாடக மாநிலம் நந்தி ஹில்ஸ் மலையில் தென்பெண்ணை ஆறு உற்பத்தியாகிறது. இது கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டம் வழியாக சென்று கடலூரில் கடலில் கலக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணை மற்றும் கிருஷ்ணகிரி அருகே உள்ள பெரியமுத்தூர் பகுதியில் கே.ஆர்.பி. அணை ஆகிய இடங்களில் அணை கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து பெய்து வரும் கனமழை காரணமாக கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக 44 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 41.5 அடியாக உயர்ந்து உள்ளது. மேலும் தொடர்ந்து அணைக்கு 500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து தென்பெண்ணை யாற்றில் 360 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் மழை தீவிரம் அடைந்து வருவதால் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது. இதன் காரணமாக தென் பெண்ணை ஆற்றில் அந்த தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டால் வெள்ளப்பெருக்கு ஏற்படும். எனவே ஓசூர் பகுதியில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டு இருக்கிறது. தென்பெண்ணை ஆற்றில் அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டு இருப்பதால் கே.ஆர்.பி. அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ... |
Bobs Haircuts Images
-
[image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image:
Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs
Haircuts][...
9 years ago
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?