மதுரையில் நகைக் கடையில் 46 பவுன் நகை கொள்ளை: போலீசில் புகார் 46 pounds jewelry robbery in jewel shop in Madurai மதுரை, ஜூன் 3– மதுரை தெற்குமாசி வீதியில் லலிதா ஜூல்லர்ஸ் என்ற பிரபல நகைக்கடை உள்ளது. இந்த கடையில் தற்போது மராமத்து பணிகள் நடந்து வருகின்றன. எனவே இரவு 9 மணியுடன் விற்பனையை நிறுத்தி விட்டு நகைகளை பாதுகாப்பு பெட்டகத்தில் ஊழியர்கள் வைத்து வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு நகைகளை சரிபார்க்கும் போது கை செயின் (பிரேஸ்லெட்) அடங்கிய ஒரு பெட்டி திடீரென மாயமாகி விட்டது தெரியவந்தது. அதில் மொத்தம் 46 பவுன் நகை இருந்தது. அந்த நகை பெட்டியை யார் எடுத்து சென்றார்கள் என தெரியவில்லை. நேற்று இரவு மின்தடை ஏற்பட்டதால் கண்காணிப்பு காமிராவும் வேலை செய்யவில்லை. இதனை பயன்படுத்திதான் யாரோ மர்ம நபர்கள் 46 பவுன் நகை பெட்டியை அபேஸ் செய்து இருக்கலாம் என்று தெரிகிறது. இந்த துணிகர சம்பவம் குறித்து விளக்குத்தூண் போலீஸ் நிலையத்தில் நகைக் கடை மானேஜர் அமீர்பாட்சா புகார் செய்துள்ளார். போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து 46 பவுன் நகைகளை அபேஸ் செய்த மர்ம ஆசாமிகள் யார்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். ... |
Bobs Haircuts Images
-
[image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image:
Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs
Haircuts][...
9 years ago
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?