Wednesday, 4 June 2014

ஆன் லைன் மூலம் வலைவிரிப்பு: அதிகரிக்கும் மசாஜ் கிளப் விபசாரம் massage club prostitute increase via online

ஆன் லைன் மூலம் வலைவிரிப்பு: அதிகரிக்கும் மசாஜ் கிளப் விபசாரம் massage club prostitute increase via online

 

சென்னை, ஜூன் 4–

சென்னையில் செயல்படும் சில மசாஜ் கிளப்புகளுக்கு ஆன் லைன் மூலம் வாடிக்கையாளர்களை வரவழைத்து விபசார தொழில் நடப்பதாக புகார்கள் வந்தன.

இதையடுத்து துணை கமிஷனர் ஜெயக்குமார், உதவி கமிஷனர் கணபதி ஆகியோர் மேற்பார்வையில் விபசார தடுப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான தனிப்படை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னை அண்ணா நகரில் சொகுசு வீட்டில் மசாஜ் கிளப் என்ற பெயரில் விபசார தொழில் செய்து வந்த பானு என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

அந்த வீட்டில் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட வட மாநில பெண்கள் 5 பேர் மீட்கப்பட்டனர்.

நீலாங்கரையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் மசாஜ் கிளப் தொடங்கி விபசாரம் நடத்திய சுராஜ் என்பவர் கைதானார். அங்கிருந்து 3 பெண்களும் மீட்கப்பட்டனர். இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கடந்த 6 மாதத்தில் மட்டும் 40 மசாஜ் கிளப்புகளில் சோதனை நடத்தி 40 விபசார புரோக்கர்களை போலீசார் பிடித்துள்ளனர். இவர்களில் 20 புரோக்கர்கள் பெண்கள் ஆவர்.

இவர்கள் ஆன்லைன் மூலம் விளம்பரம் செய்து மசாஜ் செய்யப்படும் என்று அழைப்பார்கள். பின்னர் மசாஜ் செய்ய வரும் ஆண்களுக்கு ஆசையை தூண்டி விட்டு விபசாரத்துக்கு அழைப்பார்கள்.

விபசாரத்தில் ஈடுபடுத்துவதற்காக மும்பை, பெங்களூரில் இருந்து அழகிகளை வரவழைப்பார்கள்.

சென்னையில் மட்டும் சட்ட விதிகளை மீறி 80–க்கும் மேற்பட்ட மசாஜ் கிளப்புகள் செயல்படுகின்றன. அந்த மசாஜ் கிளப்புகள் அவ்வப் போது கண்காணிக்கப்பட்டு வருகின்றன. 35–க்கும் மேற்பட்ட வெளி மாநில பெண்கள் மீட்கப்பட்டனர்.

முன்பு விபசாரத்தில் ஈடுபடும் பெண்களை கைது செய்வது வழக்கம். தற்போது அவர்களை பாதிக்கப்பட்ட பெண்ணாக கருதி காப்பகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. எனவே அவர்களை கைது செய்வதில்லை. மருத்துவ பரிசோதனை நடத்தி காப்பகத்தில் ஒப்படைக்கின்றனர்.

காப்பகத்தில் இருந்து வெளியே வரும் பெண்கள் மீண்டும் விபசாரத்தில் ஈடுபடுகின்றனர். மசாஜ் கிளப்பை கட்டுப்படுத்தும் அதிகாரம் எங்களுக்கு இல்லை. அந்த அதிகாரம் மாநகராட்சிக்குத்தான் உள்ளது. எனவே தகுந்த சட்டவிதிகளை வகுத்து மசாஜ் கிளப்புக்கு அனுமதி கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

...

 

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger