Home
»Unlabelled
» ரூ.200 கோடியில் தயாராகும் எந்திரன் 2–ம் பாகம் Rs 200 crore Preparing Endhiran 2nd Part
ரூ.200 கோடியில் தயாராகும் எந்திரன் 2–ம் பாகம் Rs 200 crore Preparing Endhiran 2nd Part
ரூ.200 கோடியில் தயாராகும் எந்திரன் 2–ம் பாகம் Rs 200 crore Preparing Endhiran 2nd Part Error! Filename not specified. ரஜினியின் 'எந்திரன்' படம் 2010–ல் வெளிவந்தது. ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடித்து இருந்தார். இதில் ரஜினி 'விஞ்ஞானி', 'ரோபோ' என இரு கேரக்டரில் வந்தார். ஷங்கர் இயக்கினார். கிராபிக்ஸ் அனிமேஷனில் பிரமாண்ட படமாக இது பேசப்பட்டது. உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடி வசூலையும் குவித்தது. இதன் இரண்டாம் பாகம் 'எந்திரன்–2' என்ற பெயரில் எடுக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளார். இதற்கான பணிகள் விறுவிறுப்பாக துவங்கியுள்ளன. படத்துக்கான கதை மற்றும் திரைக்கதையை ஷங்கர் தயார் செய்து ரஜினியிடம் சொல்லி ஒப்புதல் வாங்கி விட்டதாக கூறப்படுகிறது. இப்படத்தை எடுக்க ரூ.200 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. ஷங்கர் தற்போது விக்ரமை வைத்து 'ஐ' படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து 'டப்பிங்' ரீரிக்கார்டிங், கிராபிக்ஸ், மிக்சிங் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோல் ரஜினியும் 'லிங்கா' படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு மைசூரில் நடந்து முடிந்து, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஐதரபாத்தில் துவங்கியுள்ளது. இப்படங்களை முடித்து விட்டு இருவரும் 'எந்திரன்–2' படத்துக்கு வருகிறார்கள். ஐஸ்வர்யாராயையே எந்திரன்–2 படத்தில் நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கின்றன. இதற்காக அவரிடம் பேச்சு நடப்பதாக தெரிகிறது. ... |
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?