Thursday, 12 June 2014

ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்தியால் மர்ம உறுப்பை வெட்டி நபர் படுகொலை

ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்தியால் மர்ம உறுப்பை வெட்டி நபர் படுகொலை man murder forcing homophobia

 

குன்னம், ஜூன் 12–

பீகார் மாநிலம் ஜம்மு மாவட்டம் தக்கல் அருகே உள்ள ராஜகர்னா காடு பகுதியை சேர்ந்தவர் குஜார் பண்டிட். இவரது மகன் நாராயன் பண்டிட் (வயது 36). இவரது நண்பர் அதே ஜம்மு மாவட்டம் தக்கல் அருகே உள்ள கரும்புத்து கிராமத்தை சேர்ந்த ஜெனார்த்தன பண்டிட் மகன் குபேந்திரன் பண்டிட் (36).

இவர்கள் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் மேட்டுத் தெரு பகுதியில் அறை எடுத்து தங்கி கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கொத்தனார் வேலை செய்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் நாராயன் பண்டிட்டும், குபேந்திரன் பண்டிட்டும் தங்கி இருந்த அறையில் இருந்து திடீரென அலறல் சத்தம் கேட்டது. இவர்களது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஏராளமானோர் அங்கு ஓடி வந்தனர்.

அவர்கள் தங்கியிருந்த அறைக்குள் சென்று பார்த்த போது நாராயன் பண்டிட் மர்ம உறுப்பு அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அருகில் படுத்திருந்த குபேந்திர பண்டிட்டும் கழுத்தில் லேசான காயங்களுடன் கிடந்தார். உடனே அங்கு கூடியிருந்தவர்கள் அவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயற்சி செய்தனர்.

இதற்கிடையே நாராயன் பண்டிட் பரிதாபமாக துடி துடித்து இறந்தார். இதுகுறித்து அந்த பகுதியினர் குன்னம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். குன்னம் போலீசார் உயர் அதிகாரிகளுக்கு கொடுத்த தகவலின் பேரில் பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி. சோனல் சந்திரா, டி.எஸ்.பி. கோவிந்தராஜன், குன்னம் இன்ஸ்பெக்டர் சிவராஜ், சப்இன்ஸ்பெக்டர் மலர் அழகன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் நாராயன் பண்டிட் உடலை போலீசார் மீட்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து, கழுத்தில் காயங்களுடன் கிடந்த குபேந்திர பண்டிட்டிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மர்ம நபர்கள் 2 பேர் நள்ளிரவில் புகுந்து நாராயன் பண்டிட்டின் மர்ம உறுப்பை அறுத்து கொலை செய்ததாக குபேந்திரன் பண்டிட் கூறினார். மேலும் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த போலீசார் குபேந்திர பண்டிட்டிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது நாராயன் பண்டிட், குபேந்திர பண்டிட்டை நள்ளிரவில் ஓரின சேர்க்கைக்கு அழைத்து தினமும் வற்புறுத்துவாராம். நேற்றும் நள்ளிரவில் வழக்கம் போல ஓரின சேர்க்கைக்கு வற்புறுத்தி உள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த குபேந்திர பண்டிட், நாராயன் பண்டிட்டின் மர்ம உறுப்பை கத்தியால் அறுத்துள்ளார். மேலும் ஆத்திரம் தீராத அவர் கத்தியால் தலையில் சரமாரியாக குத்தியுள்ளார்.

இதில் நாராயன் பண்டிட் இறந்து போனதும் இதை மறைக்க 2 மர்ம நபர்கள் நள்ளிரவில் தங்கள் அறைக்கு வந்து நாராயன் பண்டிட்டை கொலை செய்து விட்டு தன்னையும் கழுத்தில் கத்தியால் அறுத்து விட்டு தப்பியதாக கூறி அவர் நாடகமாடியதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் குபேந்திர பண்டிட்டை கைது செய்தனர். இந்த சம்பவம் குன்னம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

...

 

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger