தோஷ்தி படத்தின் மூலம் இந்தி சினிமாவுக்கு அறிமுகமானவர் ஷெர்லின் சோப்ரா. டைம்பாஸ், ஜவானி திவானி, உள்பட பல படங்களில் கவர்ச்சி வேடத்தில் நடித்துள்ளார். கடைசியாக காமசூத்ரா 3டி இந்திப் படத்தில் நடித்து பரபரப்பை கிளப்பி உள்ளார். ஷெர்லின் தற்போது பேட் கேர்ள் என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் சமீபத்தில் உலக புகழ் பெற்ற செலீனா என்ற படத்தின் தழுவல் ஆகும். விரைவில் படம் ரிலீசாக இருக்கிறது. இந்தப் படத்தின் புரமோஷனுக்காக சென்னை வந்திருந்த ஷெர்லின் சோப்ரா நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கினார். பின்னர் அவர் மீடியாக்களை சந்தித்தார்.
பத்திரிகையாளர்கள் அவரை சந்திக்க சென்றபோது அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அந்த நேரத்தில் அவர் நீச்சல்குளத்தில் பிகினி டிரஸ்சில் குளியல் போட்டுக் கொண்டிருந்தார். அதை படம் எடுத்துக் கொள்ளலாமா என்று மீடியாக்கள் கேட்டபோது கொஞ்சமும் தயக்கம் இன்றி போஸ் கொடுத்தார். பின்னர் உடை மாற்றி வந்து மீடியாக்களுக்கு பேட்டி கொடுத்ததோடு ஒவ்வொருவரையும் அழைத்து அவர்களோடு நின்று போட்டா எடுத்து மற்றுமொரு அதிர்ச்சியையும் கொடுத்தார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?