அந்த வகையில், சூர்யாவைக்கொணடு அஞ்சான் படத்தை இயக்கி வரும் லிங்குசாமியும் பாட்ஷா படத்தை தழுவிதான் அஞ்சான் படத்தை இயக்கி வருவதாக கூறப்படுகிறது. அதன்காரணமாகவே பாட்ஷாவைப்போன்று மும்பையில் கதைக்களத்தை வைத்திருக்கிறாராம். அப்படத்தில் நண்பனுக்காக ரஜினி பழி வாங்குவது போன்று இப்படத்திலும் தனது நண்பனுக்காக சூர்யா பழி வாங்குவதுதான் கதையாம்.
அதோடு, பாட்ஷாவில் மறைந்த ரகுவரன் வில்லனாக நடித்த வேடத்தில் இப்போது இந்தி நடிகர் மனோஜ் பஜ்பாய் நடிக்க, சூர்யாவின் உயிர் நண்பராக வித்யு ஜம்வால் நடிக்கிறார். இவர்தான் ப்பாக்கியில் விஜய்யுடன மோதிய வில்லன் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?