மோடி-ரஜினிக்கு இடையே பரஸ்பர நட்பு உண்டு என்றாலும், அதை அவர்கள் இருவரும் இதுவரை வெளிச்சம் போட்டுக்காட்டியதில்லை. ஆனால், சமீபத்தில் யாருமே எதிர்பார்க்காத வகையில், அவர்கள் சந்தித்துக்கொண்டது பரபரப்புக்குள்ளானது. அதுவும் தேர்தல் நேரம் என்பதால், தமிழகத்திலுள்ள பிரதான கட்சிகளை அது அதிர்ச்சியடையச் செய்தது.
இந்தநிலையில், மோடிக்கும், தனக்குமிடையிலான நட்பு தொடர நினைக்கும் ரஜினி, மகள் செளந்தர்யா இயக்கத்தில் தான் நடித்துள்ள கோச்சடையான் படம் மே 9-ந்தேதி உலகமெங்கும் ரிலீசாக இருப்பதால், முன்னதாக, அதை சில முக்கியஸ்தர்களுக்கு பிரிமியர் ஷோ போட்டு காட்ட திட்டமிட்டுள்ளார். அதில் முதல் நபராக மோடிதான் இடம்பெற்றுள்ளாராம். அவருக்காக மே 8-ந்தேதி அன்று மும்பையிலுள்ள ஒரு தியேட்டரில் ஸ்பெஷல் ஷோ காண்பிக்கயிருக்கிறார்கள்.
இதையடுத்து, தனது படத்தை பார்த்து ரசிக்க வரவேண்டும் என்று மோடிக்கு ரஜினி அழைப்பு விடுத்ததும், உங்களது படத்தை காண ஆவலுடன் இருக்கிறேன் என்று உடனடியாக செய்தி அனுப்பி விட்டாராம் மோடி. இருப்பினும் அவரை முறையாக அழைக்க வேண்டும் என்பதற்காக விரைவில் குஜராத் செல்லவிருக்கிறாராம் கோச்சடையான் டைரக்டர் செளந்தர்யா.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?