சூர்யா- சமந்தா நடிப்பில் லிங்குசாமி இயக்கி வந்த அஞ்சான் படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு மும்பையில் நடந்து வந்த நிலையில், இறுதிகட்டமாக கோவாவில் நடந்து வந்தது. அங்கு பாடல் காட்சியை படமாக்கிய பிறகு க்ளைமாக்ஸ் சண்டை காட்சியும் படமானது. அப்போது எதிர்பாராதவிதமாக சூர்யாவுக்கு விபத்து ஏற்பட்டது. ஆனால், அது பெரிய அளவில் இல்லை. சிறிய காயங்களோடு தப்பினார். அதனால் படப்பிடிப்புக்கு எந்தவித இடையூறும் ஏற்படவில்லை. அதன்காரணமாக திட்டமிட்டபடி படப்பிடிப்பை நடத்திய லிங்குசாமி, நேற்றோடு மொத்த படக்காட்சிகளையும் முடித்து விட்ட நிலையில் பூசணிக்காய் உடைத்து விட்டாராம்.
இன்னும் ஒரேயொரு பாடல் காட்சி மட்டுமே பேலன்ஸ் உள்ளதாம். அந்த பாடலில் மரியம் சகாரியா, சித்ரங்கதா சிங் போன்ற கவர்ச்சி புயல்கள் இடம்பெறுகிறார்களாம். அந்த பாடல் காட்சி ஜூன் மாதம் படமாக்கப்படுகிறது. இந்த பாடலுக்குத்தான் இந்தி நடிகை கரீனா கபூரை கேட்டு, அவர் நடனமாட மறுத்து விட்டதாக கூறுகிறார்கள்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?