ஜெயம்ரவி நடித்துள்ள பூலோகம் படத்தையடுத்து வட சென்னையில உள்ள பாக்சர்களைப்பற்றிய கதையில் உருவாகியுள்ள இன்னொரு படம் நாங்கெல்லாம் ஏடாகூடம். புதுமுகங்கள் மனோஜ்- வீணா நாயர் நடித்துள்ள இந்த படத்தை விஜயகுமார் என்ற புதியவர் இயக்கியுள்ளார். குருந்துடையார் புரொடக்சன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.
இப்படத்தில் புதுமுக நடிகை வீணா நாயர் அறிமுகமாகியுள்ளார். கேரளத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக இருந்த இவரை, இந்த மாதிரியான ஒரு நடிகைதான் இந்த படத்துக்கு வேண்டும் என்று அழைத்து வந்திருக்கிறார்கள். படத்திலும் அவருக்கு சாப்ட்வேட் இன்ஜினியர் வேடம்தானாம். அதனால் தான் அலுவலகத்தில் வேலை செய்வது போன்ற நடிப்பையே யதார்த்தமாக கொடுத்துள்ளாராம் வீணா நாயர்.
இதுபற்றி அவர் கூறுகையில், எனது நிஜ பெயர் பார்வதி. ஏற்கனவே கேரளாவில் இருந்து வந்த பார்வதி மேனன் என்ற நடிகை தமிழில் நடித்துக்கொண்டிருப்பதால், என்னை வீணா நாயராக்கி விட்டனர். கேரளாவில் இருந்து அசின், நயன்தாரா, அமலாபால், லட்சுமிமேனன் என ஏராளமான நடிகைகள் தமிழ் சினிமாவில் சைன் பண்ணியிருப்பதால், எனக்கும் ஒரு பெரிய இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்த படத்தின் மூலம் என்ட்ரியாகியுள்ளேன்.
மேலும், இந்த படத்தில் நடித்தபோது கேமராமேன் என்னை ரொம்ப டார்ச்சர் பண்ணி விட்டார். அப்படி திரும்பி நில், இப்படி லுக் கொடு என்று ஒரு வழி பண்ணி விட்டார். அதனால் படப்பிடிப்பு முடியுற நேரத்தில் எனக்கும், அவருக்குமிடையே ஒரு நாள் சண்டையாகி விட்டது. அந்த அளவுக்கு என்னை கோபப்படுத்தி விட்டார் என்று கூறும் வீணா நாயர், ஆனால் இப்போது அவருடன் நான் சமரசமாகி விட்டேன். அதோடு, அவர் மூலமாக நடிப்பில் இருக்கிற நெழிவு சுழிவுகளையும் கற்று விட்டேன் என்கிறார் வீணா நாயர்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?