Tuesday, 22 April 2014

இஸ்லாம் மதத்துக்கு மாறவில்லை! ஜெய்



இளையராஜாவின் மகனான யுவன் ஷங்கர் ராஜா, முஸ்லீம் மதத்துக்கு மாறியதை அடுத்து, கோடம்பாக்கத்தில் மேலும் சில நடிகர்களும் அந்த மதத்தில் மாறயிருப்பதாக செய்திகள் பரவின. ஆனால், பின்னர் அதுபற்றிய தகவல் ஏதும் இல்லை. அதனால் அவை அனைத்தும் வதந்திகளாகி விட்டன. இந்தநிலையில், திருமணம் என்னும் நிக்கா படத்தில் நடித்ததில் இருந்து அப்படத்தில் அறிமுகமான முஸ்லீம் நடிகை நஸ்ரியாவுடன் காதல் கிசுகிசுக்களில் சிக்கியிருநத நடிகர் ஜெய்யும் இப்போது முஸ்லீம் மதத்தில் தன்னை இணைத்துக்கொண்டிருப்பதாக கடந்த ஒரு வாரமாக செய்திகள் பரவிக்கொண்டிருக்கின்றன.

அதையடுத்து, ஜெய்யை தொடர்பு கொண்டு கேட்டபோது, நான் இசையமைப்பளர் தேவாவின் சகோதரர் சம்பத்தின் மகன். பிறப்பால் இந்துதான். ஆனால், முஸ்லீம் மதத்தின் கொள்கைகள் எனக்கு பிடித்திருந்தது. அதனால் அதை பின்பற்றினேன். அவ்வளவுதான். மற்றபடி நான் முஸ்லீமாகி விட்டதாக வெளியான செய்திகள் உண்மையில்லை என்று மறுக்கிறார் ஜெய்.

ஆனால், இஸ்லாம் மதத்தில மாறுவதற்கு அதிக ஆர்வமாக இருக்கும் ஜெய்க்கு அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்களாம். அதனால்தான் மனசுக்குள் அந்த மார்க்கம் பிடித்திருந்தும், அதை நடைமுறைப்படுத்த முடியாமல் அவர் திணறிக்கொண்டிருப்பதாக, அவருக்கு நெருங்கிய வட்டாரம் தகவல் தருகிறது.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger