Tuesday, 22 April 2014

சிவகார்த்திகேயனுக்கு சிக்கல்...! கமிஷனர் அலுவலகத்தில் அவர் மீது புகார்!



சர்ச்சையில் சிக்குவதே சிவகார்த்திகேயனுக்கு வாடிக்கையாகப் போய்விட்டது. கடந்த சில நாட்களாகத்தான் சிவகார்த்திகேயன் பற்றி சர்ச்சை செய்திகள் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் அவர் மீது, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிவகார்த்திகேயன், ஹன்சிகா நடித்த படம் மான் கராத்தே. புதுமுக இயக்குநர் திருக்குமரன் இயக்கிய இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் மதன் இருவரும் இணைந்து தயாரித்திருந்தார்கள். அனிருத் இசையமைத்து இருந்தார். ஏப்ரல் 4 ஆம் தேதி வெளியான மான் கராத்தே வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருக்கிறார். "சமீபத்தில் திரைக்கு வந்துள்ள 'மான் கராத்தே' படம் குத்துச்சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. அந்தப் படத்தில் குத்துச்சண்டையை இழிவுப்படுத்தும் வகையில் நிறைய காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அந்தக் காட்சிகள் நீக்கப்பட வேண்டும். தமிழ்நாடு குத்துச்சண்டை கழகத்திடம் உரிய அனுமதியும், ஆலோசனையும் பெற்று, குத்துச்சண்டை தொடர்பான காட்சிகளை எடுத்திருக்கலாம். ஆலோசனை எதுவும் பெறவில்லை. உரிய அனுமதியும் பெற வில்லை. இது சட்டத்திற்கு புறம்பான செயல். எனவே 'மான் கராத்தே' படத்தின் தயாரிப்பாளர் மற்றும் கதாசிரியர் ஏ.ஆர்.முருகதாஸ், இயக்குநர் திருக்குமரன், நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். 'மான் கராத்தே' படத்தை தடை செய்யவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று அம்மனுவில் கூறியிருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி.

இம்மனு தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger