Home » Archives for January 2014
Sunday, 26 January 2014
விந்தணு உற்பத்தியை பாதிக்கும் காரணிகள் tamil sex news
ஓரினச்சேர்க்கையாளரான எனது மகளை கவரும் ஆண்மகனுக்கு ரூ.815 கோடி: ஹாங்காங்க் தொழில் அதிபர் அறிவிப்பு Hong Kong businessman to offer 815 crore to man marries his gay daughter
Img ஓரினச்சேர்க்கையாளரான எனது மகளை கவரும் ஆண்மகனுக்கு ரூ.815 கோடி: ஹாங்காங்க் தொழில் அதிபர் அறிவிப்பு Hong Kong businessman to offer 815 crore to man marries his gay daughter
ஹாங்காங், ஜன. 26-ஹாங்காங்கின் மிகப் பிரபல கட்டுமானக் கம்பெனியின் முதலாளியான செசில் சாவ், ஓரினச்சேர்க்கையாளரான தனது செல்ல மகள் கிகியை (33) திருமணம் செய்துகொள்பவருக்கு 815 கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இதுபோன்று 65 மில்லியன் டாலர் வழங்கப்படும் என்று கூறியதை அடுத்து உலக பத்திரிகைகளின் தலைப்பு செய்தியில் செசில் இடம்பிடித்தார்.எனது மகளின் மனதை கவரும் அந்த ஆண்மகனுக்கான தொகையை மேலும் அதிகரித்து நூறுகோடி ஹாங்காங் டாலர் பணம் தரப்படும் என்று தற்போது அவர் கூறிவருகிறார். எனது மகளின் சுதந்திரமான வாழ்க்கையில் நான் தலையிட விரும்பவில்லை. இருந்தும் எனது தொழிலை வழிவழியாக நடத்த எனது வாரிசின் மூலம் குழந்தைகள் தேவை. ஆகையால் எனது மகளுக்கு ஒரு அழகான திருமணம் செய்துவைக்க விரும்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார். இந்த செய்தியால், கிகியின் 9 ஆண்டுகால பார்ட்னர் சீன் ஏவ் விரக்தியடைந்துள்ளார். எனது தகப்பனாரின் விருப்பப்படி என்னை வசீகரிக்கும் ஒரு ஆண் மகன் கிடைப்பார் என்ற நம்பிக்கை எனக்கில்லை என்று கிகியும் கூறியுள்ளார். கிகி கடந்த 2012-ம் ஆண்டு சீன் ஏவ் என்ற பெண்ணை பிரான்சில் திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த அறிவிப்பை அடுத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. இருந்தும் அவரது மகள் கிகி தனது மனதை மாற்றிக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. ஹாங்காங் பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் செசில் சாவ், கடைசியாக ஒரு இளம்பெண்ணுடன் சேர்ந்து காணப்பட்டார். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுடன் படுக்கையை பகிர்ந்துகொண்டவன் என்று கூறும் செசில் சாவுக்கு, ஆண் துணை தேவை இல்லை என்று கூறும் பெண்ணை நினைத்தால் வியப்புதான் ஏற்படுகிறது. ...
மதுரையில் நரேந்திரமோடி பெயரில் பலசரக்கு– டீக்கடைகள்: பா.ஜனதாவினர் நூதன பிரசாரம்
Img மதுரையில் நரேந்திரமோடி பெயரில் பலசரக்கு– டீக்கடைகள்: பா.ஜனதாவினர் நூதன பிரசாரம்
மதுரை, ஜன. 26–மோடி பெயரில் டீக்கடை, பலசரக்கு கடைகளை தொடங்கி பாரதீய ஜனதாவினர் நூதன முறையில் பிரசாரத்தை தொடங்கி உள்ளனர்.பாராளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து பாரதீய ஜனதா பிரசாரத்தை தொடங்கி உள்ளது. நாடு முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் செய்து நரேந்திரமோடியும் ஆதரவு திரட்டி வருகிறார்.இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி மணிசங்கர் அய்யர் பாரதீய ஜனதா குறித்து கூறுகையில், நரேந்திர மோடி டீ வியாபாரி போல் உள்ளதாக கருத்து தெரிவித்தார். அவரது இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.இருப்பிலும் மணிசங்கர் அய்யர் கூறியது அவரது சொந்த கருத்து என்றும், காங்கிரசின் கூற்று அல்ல என்றும் காங்கிரஸ் அறிவித்தது. ஆனால் இந்த விஷயத்தை பாரதீய ஜனதாவினர் தீவிரமாக எடுத்துக் கொண்டு அதையே தங்களது தேர்தல் பிரசார யுக்தியாக கடைபிடிக்க தொடங்கியுள்ளனர்.நரேந்திரமோடி பெயரில் டீக்கடை, பலசரக்குக்கடை, நகைக்கடை என பலவற்றை தொடங்கி நூதன முறையில் பாரதீய ஜனதாவின் சாதனைகளை விளக்கி பிரசாரம் செய்து வருகின்றனர்.மதுரையில் நரேந்திர மோடி பேரவை சார்பில் மோடி பெயரில் டீக்கடை, சிகை அலங்காரக்கடை போன்றவை ஊரக பகுதிகளில் தொடங்கப்படுகின்றன. மதுரை நகர் பகுதிகளிலும் கீரைத்துறை, செல்லூர், பச்சரிக்காரத் தெரு, ஆரப்பாளையம் ஆகிய பகுதிகளில் இந்த கடைகள் திறக்கப்படுகின்றன.இவற்றின் மூலம் பாரதீய ஜனதாவின் கொள்கைகள், குஜராத்தில் நரேந்திரமோடியின் செயல் திட்டங்கள், அதனால் ஏற்பட்டுள்ள வெற்றிகள் போன்றவற்றை துண்டு பிரசுரங்களாக வெளியிட்டு மக்களிடம் ஆதரவு திரட்ட திட்டமிட்டுள்ளனர்....
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம்: பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி parliament election admk party support panruti ramachandran interview
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம்: பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி parliament election admk party support panruti ramachandran interview
சென்னை, ஜன 26–
தே.மு.தி.க. அவைத் தலைவராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகினார். எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்தார்.
இதற்கிடையே, தமிழக அரசு அவருக்கு அண்ணா விருது வழங்குவதாக அறிவித்து இருந்தது. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி தலைமை செயலகத்தில் இன்று நடந்தது. முதல்–அமைச்சர் ஜெயலலிதா அவருக்கு பேறிஞர்அண்ணா விருது வழங்கி கவுரவித்தார். விருது பெற்ற பண்ருட்டி ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:–
''அண்ணா மீது ஈடுபாடு கொண்டிருந்ததால் அரசியல் வாழ்விற்கு உந்தப்பட்டேன். இதனால் நான் வேலை பார்த்து வந்த உதவிப் பொறியாளர் பதவியை 1964–ம் ஆண்டிலேயே ராஜினாமா செய்தேன்.
அண்ணா தலைமை ஏற்று அரசியலில் ஈடுபட்டேன். அவரது எண்ணங்களுக்கும் செயல் வடிவம் கொடுக்கும் வகையில் பாடுபட்டேன். இதற்கு மதிப்பளிக்கும் வகையில் அண்ணா விருது எனக்கு கிடைத்துள்ளது.
அண்ணாவை நம்பி வந்தவர்களை கைவிட மாட்டோம் என்ற வகையில் முதல்– அமைச்சர் ஜெயலலிதா எனக்கு இந்த விருதை வழங்கியுள்ளார். என்னைப் போன்ற எண்ணற்ற அண்ணாவின் தம்பிகளுக்கு முதல்–அமைச்சர் நம்பிக்கை ஒளி ஏற்றுவார் என நம்புகிறேன்.
எந்தெந்த லட்சியங்களுக்காக அண்ணா தன் வாழ்க்கையை அர்ப்பணித்தாரோ அதேபோல் முதல்–அமைச்சரும் தனது வாழ்வை அர்ப்பணித்து பணியாற்றுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–
கேள்வி:– அண்ணா விருது கிடைத்துள்ளதால் இதற்கு அரசியல் சாயம் பூசுவார்கள் என்று கருதுகிறீர்களா?
பதில்:– எதற்கும் அரசியல் சாயம் பூசத்தான் செய்வார்கள். பேரறிஞர் அண்ணா எல்லோருக்கும் பொதுவானவர். அவரது வழியில் அரசியல் நடத்திய எனக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
கே:– அண்ணாவின் கொள்கைகளை எப்படி பரப்புவீர்கள்?
ப:– 1967 பொங்கல் மலரில் அண்ணா ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் அவர் கூறும் போது, வெள்ளம் எல்லோரையும் அழிக்க கூடியது. ஆனால் வாய்க்கால் தண்ணீர் அனைவருக்கும் வளம் அளிக்க கூடியது.
இந்த வாய்க்கால் போன்ற சிந்தனையால் அனைவருக்கும் செல்வ செழுமை கிடைக்க பாடுபட வேண்டியது நமது கடமை. இதற்கு சம தர்ம லட்சியத்தை உருவாக்கிட வேண்டும். செல்வம் ஒரே இடத்தில் சேர்ந்தால் அது வெள்ளம் போன்று அழிக்க கூடியது.
இந்திய மக்கள் தொகையில் பாதிபேரின் வருமானத்தை மேல் மட்டத்தில் உள்ள 3 சதவீதம் பேர் பெறக் கூடியது சூழல் உள்ளது. அந்த அளவுக்கு ஏற்றத்தாழ்வு உள்ளது. இந்த நிலை மாற முற்போக்கு கூட்டணியை ஆதரிக்க வேண்டும்.
அதை குறிக்கோலாக கொண்டு இயங்க வேண்டும் என்று அண்ணா ஏற்கனவே கூறியுள்ளார். அந்த வகையில் தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளது. அந்த கூட்டணி கட்சிகள் முற்போக்கு கொள்கைக்காக பாடுபடுகிறது. யார் நல்ல கொள்கைகளை கொண்டு வருகிறார்களோ அவர்களை ஆதரிக்க வேண்டும்.
கே:– அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வீர்களா?
ப:– ஆமாம். நம்மால் முடிந்த ஆதரவை செய்ய வேண்டும் இந்திய அரசியலில் ஒரு மாற்றம் உருவாகக் கூடிய சூழ்நிலை உள்ளது. தேசிய அளவில் அண்ணாவின் முற்போக்கு கொள்கை ஏற்பட என்னால் முடிந்த ஆதரவு உண்டு. எண்ணை சட்டியில் இருந்து தப்பிக்க எரி நெருப்பில் விழுந்த கதையாக ஆகி விடக் கூடாது. எனவே ஏழை எளிய மக்களுக்காக யார் பாடு படுகிறார்களோ அவர்களை ஆதரிக்க அனைவரும் முன் வரவேண்டும், இந்திய அரசியலில் நல்ல மாற்றம் அமைய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
...
Friday, 24 January 2014
குடிகாரனை எல்லாம் தலைவனாக ஏற்று கொள்ள முடியாது. தி.மு.க. தோற்கும்: மு.க.அழகிரி பேட்டி Today Chennai mk azhagiri interview dmk election failed
குடிகாரனை எல்லாம் தலைவனாக ஏற்று கொள்ள முடியாது. தி.மு.க. தோற்கும்: மு.க.அழகிரி பேட்டி Today Chennai mk azhagiri interview dmk election failed
Wednesday, 22 January 2014
பொன்னேரியில் மயக்க மாத்திரை கொடுத்து காதலியை கற்பழித்த பட்டதாரி வாலிபருக்கு 7 ஆண்டு ஜெயில் Men arrested for To give the sleeping tablet and raped the girl near ponneri
Rape |
திருவள்ளூரை அடுத்த பொன்னேரி அண்ணா நகர் சோம்பட்டு பகுதியை சேர்ந்தவர், நாகதாஸ் (வயது 35). எம்.ஏ பட்டதாரியான இவர் தனது மூன்றாவது வீட்டில் வசிக்கும் மீரா (பெயர் மாற்றப்பட்டு உள்ளது.) என்ற 25 வயது பெண்ணை காதலித்து வந்தார். கடந்த 4-9-2002 அன்று மீரா தனது வீட்டில் உடல் நலக்குறைவு காரணமாக படுத்து இருந்தார்.
அப்போது அங்கு வந்த நாகதாஸ் அவரிடம் உடல் நலம் பற்றி விசாரித்தார். அப்போது மீராவின் பெற்றோர் வீட்டில் இல்லை. இதனை பயன்படுத்திக்கொண்ட நாகதாஸ், மீராவின் பெற்றோர் கொடுத்ததாக கூறி, ஒரு மாத்திரையை சாப்பிடும்படி கூறி இருக்கிறார். அது மயக்க மாத்திரை என்று அறியாமல் சாப்பிட்ட மீரா சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்தார். அப்போது மீராவை நாகதாஸ் கற்பழித்துவிட்டார்.
பின்னர் மயக்கம் தெளிந்து எழுந்த மீரா தான் கற்பழிக்கப்பட்டதை அறிந்து நாகதாசிடம் கேட்டார். அதற்கு அவர் மீராவை திருமணம் செய்துகொள்வதாக கூறி சமாளித்துவிட்டார். இந்நிலையில் மீரா கர்ப்பமாகி ஆண் குழந்தை பெற்றெடுத்தார். குழந்தை பிறந்த பின்னரும் தன்னை திருமணம் செய்து கொள்ள நாகதாஸ் மறுத்து விட்டதால் பொன்னேரி போலீஸ் நிலையத்தில் மீரா புகார் செய்தார். பூந்தமல்லியில் உள்ள கோர்ட்டில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கு பின்னர் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனால் மனவேதனையடைந்த மீரா தொடர்ந்து போராடி சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அதை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கை திருவள்ளூரில் உள்ள மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முருகன், நாகதாஸ் மீதான கற்பழிப்பு குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 7 வருடம் கடுங்காவல் ஜெயில் தண்டணையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து போலீசார் நாகதாசை சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீலாக பி.எஸ்.ஆர்.சவுந்தர்ராஜன் ஆஜராகி வாதாடினார்.
யுவன்சங்கர் ராஜா இசையில் பாடல் எழுதுவது காலத்தின் விருப்பம்: கவிஞர் வைரமுத்து பேட்டி Yuvan Shankar Raja to compose music for the lyrics of the option period Interview with poet Vairamuthu
இளையராஜாவை பிரிந்து வந்த 28 ஆண்டுகளுக்குப்பின், கவிஞர் வைரமுத்து அவரது மகன் யுவன்சங்கர்ராஜாவுடன் இணைந்து பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது. படத்தில் இடம்பெறும் 5 பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதுகிறார்.
இதுபற்றி வைரமுத்து அளித்த பேட்டி விவரம் வருமாறு:
கேள்வி:- யுவன்சங்கர்ராஜாவுடன் நீங்கள் இணைவது காலத்தின் கட்டாயமா?
பதில்: இல்லை. காலத்தின் விருப்பம்.
கேள்வி:தந்தையோடு சேராத நீங்கள் மகனோடு எப்படி சேர்கிறீர்கள்?
பதில்: தந்தை என்று சொல்லிப்பாருங்கள். உதடுகள் சேர்வதில்லை. மகன் என்று சொல்லிப்பாருங்கள். முதல் எழுத்திலேயே உதடுகள் சேரும்.
கேள்வி:திடீரென்று எப்படி இந்த முடிவெடுத்தீர்கள்?
பதில்: வைரம் திடீரென்று பிறப்பதில்லை. அது கரியாக கிடந்து கனிந்த காலம் நம் கண்ணுக்கு தெரிவதில்லை. 10 ஆண்டுகளுக்கு முன்பே தம்பி யுவன்சங்கர் ராஜா இரு முறை என்னை தொலைபேசியில் அழைத்து, எனக்கு பாட்டு எழுதுங்கள் அங்கிள் என்று பாசத்தோடு கேட்டார். எனக்கு கண்கலங்கி விட்டது.என்னோடு சேர்வதால் உனக்கு ஒரு பாதிப்பும் வந்து விடக்கூடாது. கட்டாயம் சேர்வோம். காலம் கனியட்டும் என்று சொல்லியிருந்தேன். இப்போது அந்த காலம் கனிந்திருக்கிறது. இடம் பொருள் ஏவல் கூடி வந்திருக்கிறது.
கேள்வி: இளைய தலைமுறையோடு சேர்கிற நீங்கள் இளையராஜாவோடு ஏன் சேரக்கூடாது?
பதில்: இந்த கேள்விக்கு நான் இதுவரை சொன்ன பதிலை நீட்டினால், பூமி உருண்டைக்கு அரைஞாண் கயிறு கட்டலாம். அவ்வளவு சொல்லியாகி விட்டது. இனிமேல் கெட்டிப்பட்ட மவுனத்தைப் பார்த்து இந்த கேள்வியை கேளுங்கள்.
கேள்வி: உங்களுக்கு யுவன்சங்கர் ராஜா தேவைப்படுகிறாரா? யுவன்சங்கர் ராஜாவுக்கு நீங்கள் தேவைப்படுகிறீர்களா?
பதில்: பூமிக்கு தண்ணீர் தேவைப்படுகிறதா? தண்ணீருக்கு பூமி தேவைப்படுகிறதா? ஒன்று, இன்னொன்றுக்கு ஆதாரம். மனித உறவுகளே சார்ந்து இயங்குவதுதானே? எனது மூத்த தமிழோடு இளமையான இசை சேரும்போது, புதிய மின்சாரம் உண்டாகும். இளையராஜா இப்போது என்ன செய்ய வேண்டுமென்றால் தனது மூத்த இசையோடு இளைய தமிழை இணைத்துக்கொள்ள வேண்டும். மதன் கார்க்கி, கபிலன் போன்றவர்களோடு அவர் பணியாற்ற வேண்டும்.
கேள்வி:இந்த புதிய கூட்டணி வெற்றி பெறுமா?
பதில்: ஒருவர் வெற்றிக்காக மற்றவர் உழைக்கும் கூட்டணிதான் வெற்றி பெறும். இது, கலைக்கும் பொருந்தும். கட்சிக்கும் பொருந்தும். சக கலைஞர்களை வெற்றி பெற வைத்து, நாங்கள் வெற்றி பெறுவோம்.
கேள்வி:லிங்குசாமி, சீனுராமசாமி இருவரும் இந்த இணைப்புக்கு காரணமா? பதில்: ஆமாம். சந்தர்ப்பங்கள் சாதிக்க முடியாததை சாமிகள் சாதித்து விட்டார்கள்.தமிழுக்கும், இசைக்கும் லிங்சாமி ஆகிவிட்டார், லிங்குசாமி.
இவ்வாறு கவிஞர் வைரமுத்து கூறினார்.
Tuesday, 21 January 2014
தென்னிந்திய அரசியல் தலைவர்களில் ஜெயலலிதாவுக்கு முதல் இடம் Jayalalitha tops mostly searched south indian political leader
உலகம் முழுவதிலும் இருந்து கூகுள் வழியாக தேடப்பட்ட தென்னிந்திய அரசியல் தலைவர்களில் ஜெயலலிதாவுக்கு முதல் இடம் Jayalalitha tops mostly searched south indian political leader through Google
அவ்வகையில், உலகளாவிய அளவில் இணயதளங்களுக்கான சர்ச் என்ஜின் களில் ஜாம்பவானாக கூகுள் திகழ்ந்து வருகிறது.
இதற்கிடையில், இணையதள பயன்பாட்டாளர்களில் யார், யார், எந்தெந்த இணையத்தின் பெயரை அதிகமாக தேடி பயனடைந்துள்ளனர் என்ற நுழைவு (லாக்-இன்) கணக்குகளை பெட்டா என்ற நிறுவனம் தினந்தோறும் பதிவு செய்து வருகிறது.
இவ்வகையில், உலகின் அதிக மக்கள் தேடிய பெயராக கூகுள் தேடு இயந்திரமும், இரண்டாவது இடத்தை பிரபல மனிதர்கள், பொருட்கள், சம்பவங்களை சிறுகுறிப்பாக இணயத்தில் பதிவு செய்து வைத்துள்ள விக்கிபீடியா வும் பெட்டா வில் இடம் பிடித்துள்ளது.
இதன் அடிப்படையில், உலகின் பிரபல மனிதர்கள், நிறுவனங்கள் தொடர்பான தகவல்களில் அதிகமாக தேடப்பட்ட பெயர்களையும் பெட்டா பதிவு செய்து வருகிறது. இந்த பதிவுகளின் சமீபத்திய தொகுப்பின்படி, உலகம் முழுவதிலும் இருந்து அதிகமாக தேடப்பட்ட இந்திய அரசியல் தலைவர்களின் பட்டியலில் குஜராத் முதல் மந்திரியும், பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியின் பெயர் முதல் இடத்தை பிடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அவருக்கு அடுத்த இரண்டாவது இடத்தை காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, மூன்றாவது இடத்தை காங்கிரஸ் கட்சி மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவரான சோனியா காந்தி, நான்காவது இடத்தை இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் பெற்றுள்ளனர்.
இந்த பட்டியலில், ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் ஆறாவது இடத்திலும், உத்தரபிரதேச முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் ஏழாவது இடத்திலும், பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் எட்டாவது இடத்திலும், காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான திக்விஜய் சிங் ஒன்பதாவது இடத்திலும், பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் பத்தாவது இடத்திலும் உள்ளனர்.
இந்த வரிசையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல் அமைச்சருமான ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அடுத்த ஐந்தாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Monday, 20 January 2014
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி தொடங்கியது teacher qualifying exam verifying started working
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக கிடக்கும் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம்
ஆசிரியர் தகுதி தேர்வை நடத்தியது. அதில் அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்க பள்ளி
கல்வித்துறை முடிவு செய்தது.
இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு தனியாகவும், பட்டப்படிப்புடன் பி.எட். படித்தவர்களுக்கு தனியாகவும்
ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் விடைத்தாள்கள்
மறு மதிப்பீடு செய்யப்பட்டு முடிவு வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு அந்தந்த
மாவட்டங்களில் 20–ந் தேதி முதல் 27–ந் தேதி வரை நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து
இருந்தது.
அதன்படி நேற்று தமிழ்நாடு முழுவதும் சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்கியது. சென்னையில் அசோக் நகர் அரசு மகளிர்
மேல்நிலைப்பள்ளியில் சான்றிதழ் சரிபார்த்தல் நடைபெற்றது.
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு சலுகை வழங்கப்படுகிறது. எனவே அவர்கள் அதற்கான சான்றிதழை படித்த
நிறுவனத்தில் இருந்து பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
இது குறித்து ஒரு பட்டதாரி கூறுகையில், நான் பட்டப்படிப்பை ஆங்கிலத்தில் படித்தேன். பி.எட். படிப்பை தமிழில்
படித்தேன். அதற்கு மதிப்பெண் உண்டா, சலுகை உண்டா என்ற விவரத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கமாக
தெரிவிக்கவில்லை என்று புகார் கூறினார்.
ஆனைமலை அருகே காதலிக்க மறுத்ததால் பெண்ணை கடத்தி கற்பழித்த கார் டிரைவர் கைது love refused to girl youth molested near aanimalai
ஆனைமலையை அடுத்துள்ள செட்டிமல்லன் புதூரை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகள் அங்காள பரமேஸ்வரி (வயது 18). மில் தொழிலாளி. இவரை அதே பகுதியை சேர்ந்த கார் டிரைவர் ஹரிசங்கர் (25) என்ற வாலிபர் ஒருதலையாக காதலித்து வந்தார்.
தனது காதலை அங்காள பரமேஸ்வரிடம் பலமுறை சொன்னார். ஆனால் அங்காள பரமேஸ்வரி மறுப்பு தெரிவித்தார். ஆனாலும் தினமும் காலையும், மாலையும் அங்காள பரமேஸ்வரி வேலைக்கு செல்லும்போது ஹரி பின் தொடர்ந்து வந்து காதல் தொல்லை கொடுத்து வந்தார்.
இதுகுறித்து அங்காள பரமேஸ்வரி தனது பெற்றோரிடம் புகார் தெரிவித்தார். இதைகேட்டு கோபமடைந்த கருப்பசாமி தனது மகளுக்கு காதல் தொல்லை கொடுத்த ஹரி சங்கரை கண்டித்தார். ‘‘என் மகளுக்கு இனிமேல் தொல்லை செய்தால் நடப்பதே வேறு’’ என்று எச்சரித்தார்.
இதனால் ஹரிசங்கர் ஆத்திரமடைந்து அங்காள பரமேஸ்வரியை அடைய நினைத்தார். இதற்காக சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தார். நேற்று இரவு அங்காள பரமேஸ்வரி வீட்டில் இருந்து தோட்டத்திற்கு சென்றார்.
அப்போது அவரை பின் தொடர்ந்து சென்ற ஹரிசங்கர் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அங்காள பரமேஸ்வரின் வாயை பொத்தி அருகிலுள்ள காட்டுக்குள் கடத்தி சென்றார். அங்கு வலுக்கட்டாயமாக அங்காள பரமேஸ்வரியை கற்பழித்தார்.
ஹரிசங்கரின் பிடியில் இருந்து தப்பிக்க அங்காள பரமேஸ்வரி கடுமையாக போராடினார். ஆனால் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.
நீண்ட நேரமாகியும் வெளியில் சென்ற மகள் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த கருப்பசாமி தனது உறவினர்களுடன் மகளை தேடி அந்த பகுதிக்கு வந்தார். அப்போது அங்கு ஹரிசங்கரின் பிடியிலிருந்த அங்காள பரமேஸ்வரி கதறி அழுத சத்தம் கேட்டது.
பதறியடித்த கருப்பசாமி சத்தம் போட்டபடியே அங்கு வந்தார். கருப்பசாமியும் அவரது உறவினர்களும் அங்கு வருவதை பார்த்த ஹரிசங்கர் அங்கிருந்து தப்பியோடினார். மகள் அலங்கோலமாக கிடப்பதை கண்டு கருப்பசாமி பதறினார்.
மகளை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கருப்பசாமி ஆனைமலை போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியம் மற்றும் சப்–இன்ஸ்பெக்டர் செல்வராஜ், தனிப்பிரிவு சப்–இன்ஸ்பெக்டர் கதிர்வேல் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் ஹரிசங்கரை காட்டுப்பகுதியில் தேடினர்.
இன்று காலை சிங்கா நல்லூர் காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்த ஹரிசங்கர் கைது செய்யப்பட்டார். மருத்துவ பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு ஹரிசங்கர் அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை முடிந்ததும் ஆனைமலை போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து வந்தனர். அங்கு அவரிடம் தொடர்ந்த விசாரணை நடைபெற்று வருகிறது
Friday, 17 January 2014
பெங்களூர் அருகே பெற்ற மகளை மிரட்டி கற்பழித்த தந்தை கைது father who molested daughter near Bangalore
Img பெங்களூர் அருகே பெற்ற மகளை மிரட்டி கற்பழித்த தந்தை கைது father who molested daughter near Bangalore
பெங்களூர், ஜன, 18-
பெங்களூர் அருகே கும்பலுகூடு போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட புவனேஷ்வரி நகரில் வசித்து வருபவர் முத்துராஜ் (வயது 55). இவரது மனைவி லீலாவதி. இவர்களுடைய மகள் ஷோபா (17), (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
இவர் கல்லூரி ஒன்றில் பி.யூ.சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். முத்துராஜ் தச்சு தொழிலாளியாகவும், லீலாவதி ஆயத்த ஆடை தொழிற்சாலையிலும் வேலை செய்கிறார்கள். தினமும் காலையில் வேலைக்கு செல்லும் லீலாவதி இரவில் தான் வீடு திரும்புவார்.
ஆனால் கல்லூரிக்கு போகும் ஷோபா, மதியமே வீட்டிற்கு வந்து விடுவார். அப்போது முத்துராஜ் வீட்டில் இருப்பது வழக்கம். இந்த நிலையில், வீட்டில் தனியாக இருக்கும் ஷோபாவை, பெற்ற மகள் என்று கூட பார்க்காமல் முத்துராஜ் வலுக்கட்டாயப்படுத்தி கற்பழித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இதனை வெளியே சொன்னால் உன்னையும் (ஷோபா) தாய் லீலாவதியையும் கொலை செய்து விடுவதாக முத்துராஜ் மிரட்டல் விடுத்து வந்ததாகவும் தெரிகிறது.
இதனால் பயந்து போன ஷோபா, தனது தந்தை பற்றி வெளியில் யாரிடமும் சொல்லாமல் இருந்தார். இதற்கிடையில், ஷோபாவுக்கு திடீரென்று நேற்று முன்தினம் உடல் நிலை கோளாறு ஏற்பட்டது. உடனே தனது மகளை இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரிக்கு லீலாவதி அழைத்து சென்றார்.
அங்கு ஷோபாவை பரிசோதித்த டாக்டர், அவர் கர்ப்பம் அடைந்திருப்பதாக கூறினார்கள். இதனை கேட்ட லீலாவதி அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி ஷோபாவிடம் லீலாவதி துருவி துருவி விசாரித்தார். அப்போது தான் தந்தை முத்துராஜ் கடந்த 3 மாதங்களாக கொலை செய்து விடுவதாக மிரட்டி தன்னை கற்பழித்து வந்ததாகவும், தன்னுடைய கர்ப்பத்திற்கு அவரே காரணம் என்றும் தனது தாயிடம் அழுதபடியே ஷோபா கூறினார். இதை கேட்ட லீலாவதியும், ஆஸ்பத்திரி டாக்டர்களும் மேலும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சம்பவம் பற்றி இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரி டாக்டர்கள் கும்பலுகூடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்கள். உடனே போலீசார் விரைந்து வந்து மாணவி ஷோபா மற்றும் அவரது தாய் லீலாவதியிடம் விசாரித்தார்கள். அதன்பிறகு, தனது கணவர் முத்துராஜ் மீது கும்பலுகூடு போலீஸ் நிலையத்தில் லீலாவதி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துராஜை கைது செய்தார்கள்.
அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பெற்ற மகளையே மிரட்டி 3 மாதங்களாக தந்தை கற்பழித்து, கர்ப்பம் ஆக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
...
Wednesday, 15 January 2014
மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவேன்: தேவயானி கோப்ரகடேயின் தந்தை அறிவிப்பு Devyani Khobragade father to contest Lok Sabha elections
Img மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவேன்: தேவயானி கோப்ரகடேயின் தந்தை அறிவிப்பு Devyani Khobragade father to contest Lok Sabha elections
புதுடெல்லி, ஜன. 15-
அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தேவயானி கோப்ரகடேயின் தந்தையும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான உத்தம் கோப்ரகடே வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும், சில கட்சிகளுடன் இது தொடர்பாக பேசி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த தகவலை இதுவரை உறுதி செய்யாமல் இருந்த உத்தவ் கோப்ரகடே, இப்போது மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். பணியில் இருந்து ஓய்வு பெற்றபிறகு இதுபற்றிய பேச்சு தொடங்கிவிட்டதாக குறிப்பிட்டுள்ள கோப்ரகடே எந்த கட்சியில் இணைவது என்ற தகவலை வெளியிட மறுத்துவிட்டார்.
பல்வேறு கட்சிகளுடன் பேசி வருவதாக குறிப்பிட்ட கோப்ரகடே, எந்த கட்சியில் சேருவது என்பதை சரியான நேரத்தில் அறிவிப்பதாகவும் கூறியுள்ளார்.
தனது மகள் தேவயானியின் இரண்டு குழந்தைகளை இந்தியாவிற்கு கொண்டு வருவது பற்றி கேட்டபோது, அடுத்த மாதம் டெல்லி வரும் குழந்தைகள் டெல்லியில் படிப்பை தொடருவார்கள் என்று பதிலளித்தார்.
...
டெல்லியில் 51 வயது வெளிநாட்டு பெண் கற்பழிப்பு: 15 பேர் கைது 51 year old Danish tourist Gang seduced in Delhi
Img டெல்லியில் 51 வயது வெளிநாட்டு பெண் கற்பழிப்பு: 15 பேர் கைது 51 year old Danish tourist Gang seduced in Delhi
புது டெல்லி, ஜன. 15-
டென்மார்க் நாட்டை சேர்ந்த 51 வயது பெண் இந்தியாவை கண்டு களிப்பதற்காக புது டெல்லி வந்தார். பர்கஞ்ச் பகுதியில் உள்ள ஓட்டலில் அறை எடுத்து தங்கிய அவர், நேற்றிரவு கன்னவ்ட் பேலஸ் பகுதியை சுற்றிப் பார்த்துவிட்டு ஓட்டலுக்கு திரும்பினார்.
ஓட்டலுக்கு போகும் வழியை மறந்துவிட்ட அந்த பெண், திக்கு திசை தெரியாமல் தடுமாறினார். புது டெல்லி ரெயில் நிலையம் அருகே நின்றிருந்த சிலரிடம் ஓட்டலின் பெயரை கூறி எந்த வழியாக போக வேண்டும்? என்று விசாரித்தார்.
தாங்களே அழைத்து சென்று விடுவதாக தெரிவித்த அந்த கும்பல், அவரை அழைத்து சென்றது. இருட்டான ஒரு வீதி வழியாக சென்றபோது கத்தியை காட்டி தனிமையான ஓரிடத்துக்கு அழைத்து சென்றது.
7 பேர் கொண்ட கும்பலால் கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்ட அந்த சுற்றுலா பயணி, இச்சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்தார்.
தனது கைப்பையையும் அவர்கள் பறித்து கொண்டு ஓடி விட்டதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக, வழக்குப் பதிவு செய்த போலீசார், இதுவரை 15 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். டெல்லியில் உள்ள டென்மார்க் நாட்டின் தூதரத்திலும் இந்த கொடிய அனுபவம் தொடர்பாக புகார் அளித்து உடனடியாக நாடு திரும்ப தனக்கு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
...
Tuesday, 14 January 2014
சென்னை ரெயிலில் ஜெர்மனி ஆசிரியைக்கு ‘செக்ஸ்’ தொல்லை: பீகார் வாலிபர் கைது Chennai train to Germany teacher molested harassment
Img சென்னை ரெயிலில் ஜெர்மனி ஆசிரியைக்கு 'செக்ஸ்' தொல்லை: பீகார் வாலிபர் கைது Chennai train to Germany teacher molested harassment
சென்னை, ஜன. 15–
மங்களூரில் இருந்து சென்னை வந்த வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வெளி நாட்டை சேர்ந்த இளம் ஆசிரியைக்கு 'செக்ஸ்' தொல்லை கொடுத்த வாலிபர் சிக்கினார்.
அதுபற்றிய விவரம் வருமாறு:–
ஜெர்மனியை சேர்ந்தவர் சுரேகா (20) (பெயர் மாற்றப் பட்டுள்ளது). கர்நாடக மாநிலம் உடுப்பியில் பள்ளிக்கூடம் ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வரும் இவர் சமூக சேவைகளிலும் ஆர்வம் காட்டி வந்துள்ளார்.
இந்நிலையில் சுரேகா, சென்னையில் உள்ள தனது தோழி ஒருவரை பார்ப்பதற்காக வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை வந்தார். தூங்கும் வசதி கொண்ட 2–வது வகுப்பு பெட்டியில் சுரேகாவுக்கு அமர்ந்தபடியே பயணம் செய்யும் வசதி (ஆர்.ஏ.சி.) கிடைத்தது. இவருக்கு எதிரில் பீகாரை சேர்ந்த சந்தன்குமார் (22) என்ற வாலிபர் அமர்ந்திருந்தார்.
இரவு 10 மணிக்கு பின்னர் 2 இருக்கைகளையும் ஒன்றாக்கி 'பெர்த்' ஆக மாற்றிய சுரேகா, அதில் படுத்து தூங்கினார். அதே படுக்கையில் சந்தன்குமாரும் ஓரமாக படுத்திருந்தார்.
நள்ளிரவு ஒரு மணி அளவில் பயணிகள் அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, சந்தன்குமார், திடீரென சுரேகாவை கட்டிப் பிடித்து 'செக்ஸ்' தொல்லை கொடுத்துள்ளார்.
இதனை தட்டிக் கேட்டு கூச்சல் போட்டு பரபரப்பை ஏற்படுத்தினால் சந்தன்குமார் தப்பி விடுவார் என்று சுரேகா கருதினார்.
இதனால் அமைதியாக இருந்த அவர் ரெயில் சென்னை வந்ததும் ரெயில்வே போலீசில் புகார் செய்தார். எழும்பூர் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சந்தன்குமார் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரை போலீசார் கைது செய்தனர். இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படும் சந்தன் குமார் புழல் சிறையில் அடைக்கப்படுகிறார்.
இச்சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:–
கடந்த 10–ந்தேதி அன்று நள்ளிரவில் சந்தன் குமார், ஜெர்மனியை சேர்ந்த பெண்ணிடம் தவறாக நடந்துள்ளார். மறுநாள் (11–ந்தேதி) அதிகாலையில் அப் பெண் எழுத்துப்பூர்வமாக அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
ரெயிலில் தனியாக பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். பயணிகள் புகார் தெரிவிப்பதற்காக 9962500500 என்ற அவர உதவி செல்போன் நம்பர் கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் ஏராளமான புகார்கள் வருகின்றன. ஒவ்வொரு நாளும் 500–க்கும் மேற்பட்ட பயணிகள் போன் செய்து ரெயில் பெட்டிகளில் நடைபெறும் முறைகேடான சம்பவங்கள் பற்றி புகார் செய்து கொண்டே இருக்கிறார்கள்.
தனியாக பயணம் செய்யும் பெண்களிடம் அத்து மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த அவசர உதவி எண் ரெயில் டிக்கெட்டிலும் அச்சிடப்பட்டு வருகிறது. 24 மணி நேர சேவை கொண்ட இந்த செல்போன் எண்ணில் எப்போது வேண்டுமானாலும் பயணிகள் உதவிக்கு அழைக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
...
நடுரோட்டில் குளியல் போட்டு ஆசிரியை ஆதங்க போராட்டம் Road concerns the struggle between the teacher put in the bath
Img நடுரோட்டில் குளியல் போட்டு ஆசிரியை ஆதங்க போராட்டம் Road concerns the struggle between the teacher put in the bath
சாலைகள் மிகவும் பழுதடைந்து சேறும், சகதியுமாக கிடந்தால் இந்த அவலத்தை நிர்வாகத்துக்கு வலியுறுத்தும் விதமாக நாற்று நட்டு போராட்டம் நடத்துவதை கேள்விப்படுகிறோம்.
இதையே இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஆசிரியை ரோசி மோர்சன் வித்தியாசமான கோணத்தில் வெளியிட்டு தனது ஆதங்கத்தை கொட்டித்தீர்த்தார். இவர் சமீபத்தில் சமுதாய சேவை பணிக்காக தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றார். அப்போது அவர் பயணம் செய்த கிராமப்புற சாலைகள் படுமோசமாக கிடப்பதை கண்டார்.
ஒரு இடத்தில் சாலையில் நடுவே பெரிய பள்ளம் ஏற்பட்டு தண்ணீர் நிரம்பி நின்றது. இந்த அவலநிலையை பிறருக்கு அம்பலப்படுத்த அவருக்கு ஒரு எண்ணம் உதயமானது.
நடுரோட்டில் தேங்கி நின்ற தண்ணீரில் அவர் படுத்து உருண்டு குளியல் போட்டு அதை படமும் பிடித்தார். பிறகு இங்கிலாந்து திரும்பியது அந்த காட்சியை இணையதளத்தில் வெளியிட்டு தான் கண்ட சாலை அவலங்களையும் விவரித்து கருத்து வெளியிட்டார்.
குண்டும், குழியுமான சாலைகளால் 20 நிமிடத்தில் பயணிக்க வேண்டிய தூரத்தை கடக்க 1¼ மணிநேரத்தை செலவிட்டேன் என்று குறிப்பிட்டார்.
...
Monday, 13 January 2014
அஜீத் ரசிகர்களை சூடேத்தி விட்ட நஸ்ரியா!!
ஆனால், தற்போது, அஜீத்துடன் டூயட் பாட சான்ஸ் கிடைக்கவில்லை என்றாலும், அவர் படத்தில் அவருக்கு தங்கையாகவோ அல்லது மகளோகவோ நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் நடிப்பேன் என்று தனது மனதில் இருப்பதை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த செய்தி அஜீத் ரசிகர்களை சூடேத்தி விட்டுள்ளாதாம்.
காரணம், தற்போது 42 வயதே ஆகும், அஜீத்துக்கு 6 வயதில் மகள் அனோஷ்கா இருக்கிறார். இந்நிலையில், 20 வயதுடைய நஸ்ரியா எப்படி அவருக்கு மகளாக நடிக்க முடியும். அப்படி இவர் நினைப்பதறகு அஜீத் என்ன அப்பா வயது கொண்ட நடிகரா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். அதையடுத்து சமூகவளைதளங்களில் அஜீத் ரசிகர்கள் நஸ்ரியாவுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இதனால், ஏற்கனவே தொப்புள் சர்ச்சையில் சிக்கிய நஸ்ரியா, இப்போது தேவையே இல்லாமல் அஜீத் ரசிகர்களால் மீண்டுமொரு சர்ச்சையில் சிக்கி சிதைந்து கொண்டிருக்கிறார்.
சாதனை புத்தகத்தில் பிளாட்பாரம்
உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூர் ரயில் நிலைய பிளாட்பாரம் உலகின் மிக நீளமான பிளாட்பாரம் என இடம் பிடித்துள்ளது. கோரக்பூர் சுற்றுலாதலத்திற்கு ஏராளமான வெளிநாட்டு பயணிகள் வருகை தருகின்றனர். இதற்காக அதிக பெட்டிகளை கொண்ட ரயில்கள் இயக்கப்பட வேண்டி இருப்பதால் கடந்த ஆண்டு பிளாட்பாரங்களை நீட்டிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதன்படி சீரமைக்கப்பட்ட பிளாட்பாரம் ஆயிரத்து 355.40 மீட்டராகும். இது உலகிலேயே மிக நீளமான பிளாட்பாரமாகும். இந்த பிளாட்பாரம் உலகிலேயே மிக நீளமான பிளாட்பாரம் என லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
Sunday, 12 January 2014
Ajith Veeram Movie review - ‘வீரம்’ மாவீரம்
மொத்தத்தில் ‘வீரம்’ மாவீரம்.
மதுரையில் காய்கறி கடை வைத்திருக்கிறார் அஜீத். இவருக்கு நான்கு தம்பிகள். குடும்பத்தின் ஒற்றுமைக்காகவும் தனது தம்பிகளுக்காகவும் திருமணம் செய்துகொள்ளாமலேயே வாழ்ந்து வருகிறார். இவருடைய குடும்ப வக்கீலாக வருகிறார் சந்தானம். அஜீத்தின் வீட்டில் வேலையாளாக வருகிறார் அப்புக்குட்டி. இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் ஒரு குடும்பமாக வாழ்ந்து வருகிறார்கள்.
Saturday, 11 January 2014
கால ஓட்டத்தில் காணமல் போன பொங்கல் வாழ்த்து அட்டைகள்..!
கால ஓட்டத்தில் காணமல் போன பொங்கல் வாழ்த்து அட்டைகள்..!
சிறுவயதில் வீட்டுக்கு கடிதம் வருகிறதோ இல்லையோ, பொங்கல் திருவிழாவின் போது நண்பர்களின் வாழ்த்து அட்டை வரும். நாங்களும் எனது நெருங்கிய நண்பர்களுக்கு வாழ்த்து அட்டைகள் பெட்டிக்கடையில் வாங்கி ஊர் நடுவில் ஆலமரத்தில் தொங்கும் தபால் பெட்டியில் போடும் போது தான் எத்தனை மகிழ்ச்சி.
இன்று ஆயிரம் நண்பர்களுக்கு ஒரே நேரத்தில் ஒரு மெயில் தட்டினால் எல்லோருக்கும் போய்விடும். ஆனால், இதை விட அன்று ஒவ்வொரு நண்பனான அவன் பெயரையும் ஊர்ப்பெயரையும் எழுதும் போது அவனும் அவன் ஊரும் குடும்பமும் மனதில் ஒளிக்கும்..
பள்ளிகளில் பொங்கல் சமயத்தில் தபால் பெட்டி ஒன்றை தற்காலிகமாக நிறுவி நண்பர்களுக்கு வார்த்து அட்டை அனுப்ப சொல்வார்கள். நாம் நிறைய நண்பர்களுக்கு அனுப்பினாலும், நமக்கு ஒன்னு ரெண்டு வாழ்த்து தான் வரும். நம் பெயருக்கு நிறைய வரவேண்டும் என்று 10 அட்டைகளில் என் பெயரையே எழுதி எனக்கு நிறைய நண்பர்கள் உண்டு என்று 6 ம் வகுப்பிலேயே செய்த அலப்பறைகள் எல்லாம்... இந்த பொங்கல் வாழ்த்து அட்டையால்... கொசுவர்த்தியாக சுற்றுகிறது.
நன்றி - சதீஷ் சங்கவி
Friday, 10 January 2014
ஜில்லா படத்திற்கு தடையில்லை: திட்டமிட்டபடி நாளை ரிலீசாகிறது no ban for jilla movie tomorrow release
Img ஜில்லா படத்திற்கு தடையில்லை: திட்டமிட்டபடி நாளை ரிலீசாகிறது no ban for jilla movie tomorrow release
சென்னை சேலையூரில் வசிப்பவரான ஆர். மகேந்திரன் நேற்று சென்னையிலுள்ள 16-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் விஜய் நடித்த ஜில்லா படத்தை ரிலீஸ் செய்ய தடைவிதிக்குமாறு கோரி மனு தாக்கல் செய்தார்.
அவர் தனது மனுவில், தான் சவுமிதா ஸ்ரீ ஆர்ட்ஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருவதாகவும், நடிகர் பிரகாஷ்ராஜ், நடிகை ஸ்ரேயா ஆகியோர் தெலுங்கில் நடித்த 'பகீரதா' என்ற படத்தை தமிழில் 'ஜில்லா' என்ற பெயரில் மொழியாக்கம் செய்ததாகவும், இப்படத்தின் தலைப்பை தென்னிந்திய திரைப்படம் மற்றும் டி.வி. தொடர் தயாரிப்பாளர் கில்டில் 2008-ம் ஆண்டு பதிவு செய்ததாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த தமிழாக்கம் செய்யப்பட்ட ஜில்லா படத்தை திரையரங்குகளில் வெளியிட தணிக்கை சான்றிதழை 28-5-2008 அன்று பெற்றுள்ளதாகவும், படத்தை வெளியிட தகுந்த நேரத்தை எதிர்பார்த்து காத்திருந்ததாகவும் மேலும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜில்லா' என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட படம் வருகிற 10-ந்தேதி வெளியாகப் போவதாக பத்திரிகையில் விளம்பரம் வெளியாகியுள்ளது. எனவே விஜய் நடித்துள்ள ஜில்லா என்ற பெயரில் படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும் என கோரியிருந்தார்.
இன்றைய நீதிமன்ற விசாரணையின் முடிவில் இம்மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். எனவே ஜில்லா படம் திட்டமிட்டபடி நாளை வெளிவரும் என தெரிகிறது.
...
சில்லரை விற்பனையாளர் பணிக்கு இலவச பயிற்சி: 8 ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் Free training for retailers to work 8 Apply educated class
Img சில்லரை விற்பனையாளர் பணிக்கு இலவச பயிற்சி: 8 ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் Free training for retailers to work 8 Apply educated class
சென்னை, ஜன. 9-
சில்லரை விற்பனைச் சார்ந்த பிரிவுகளில் வேலைவாய்ப்புகள் அதிகளவில் உள்ளதை கருத்திற்கொண்டு தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டுக் கழகம் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்துடன் இணைந்து 10,000 இளைஞர்களுக்கு சில்லரை விற்பனையாளர் பணிக்கான குறுகியகால 21 நாள் திறன் பயிற்சியினை வழங்கிட திட்டமிட்டுள்ளது.
இப்பயிற்சியானது தமிதூச்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிறுவனங்களில் அளிக்கப்படும். இப்பயிற்சி தமிழக அரசால் முழுக்க முழுக்க இலவசமாக வழங்கப்படுகிறது.
இப்பயிற்சிக்கான விண்ணப்பங்கள் சென்னை, தஞ்சாவூர், வேலூர், திருநெல்வேலி, மதுரை, சேலம், விருதுநகர், கடலூர், காஞ்சிபுரம், தர்மபுரி, நாகர்கோவில், சிவகங்கை, விழுப்புரம், நாமக்கல், திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, திருவாரூர், திருவண்ணாமலை, ஈரோடு மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில், 10.1.2014 முதல் வழங்கப்படும்.
இப்பயிற்சியில் சேர குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 வயது முதல் 45 வயது வரையான ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான கால அளவு 3 வார காலமாகும். பயிற்சி தினமும் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும்.
இப்பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் தங்களது அசல் கல்வி சான்று, சாதி சான்று, இருப்பிட முகவரிக்கான சான்றாக குடும்ப அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், கடவு சீட்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றின் ஏதேனும் ஒன்றின் அசல் மற்றும் சமீபத்தில் எடுக்கப்பட்ட இரண்டு புகைப்படங்கள் கொண்டு வர வேண்டும். மேலும் இப்பயிற்சியில் சேர இச்சான்றுகளின் 2 நகல்களுடன், பயிற்சி நிலையத்தில் அளிக்கப்படும் விண்ணப்பத்தினையும் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட கல்வித்தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு தமிழகத்திலுள்ள மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள 20 கூட்டுறவு மேலாண்மை நிலையங்களிலும் 21 நாள் இலவச பயிற்சி வழங்கப்படும். இப்பயிற்சியின் முடிவில் தனியார் துறை சில்லரை விற்பனை சேவை நிறுவனங்களில் பணிபுரிய ஏதுவாக வேலைவாபுச்ப்பு முகாம்கள் நடைபெறும்.
இப்பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் தமிழகத்திலுள்ள 20 கூட்டுறவு மேலாண்மை நிலையங்கள் மற்றும் சென்னை அண்ணா நகரில் உள்ள நடேசன் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் உரிய விண்ணப்பங்கள் பெற்று பயிற்சியில் சேருமாறு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக இயக்குனர் முத்துவீரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
...
Wednesday, 8 January 2014
Jillaa Movie Story tamil Review
Jillaa Movie Story
பிரகாஷ்ராஜ், மோகன்லால் நெருங்கிய நண்பர்கள். இருவரும் காவல்துறையில் பணியாற்றுகிறார்கள். பிரகாஷ்ராஜின் வாரிசு விஜய். வில்லனால் கொல்லப்படுகிறார் பிரகாஷ்ராஜ். சாகும் வேளையில் தன் மகனை தன்னை போல் போலீஸ் ஆக்க வேண்டும் என்று சத்தியம் வாங்கிக்கொண்டு சாகிறார்.
லாலின் மகன் தான் மகத். லால் விஜயை தத்தெடுக்கிறார். மகத்துக்கு விஜய்யின் மீது பொறாமை. "தலைவா" படம் போல், காஜல் 'Undercover' போலீஸ். லாலை பிடிக்க விஜயை காதலிக்கிறார். அப்போது தான் லால் நல்லவர் என்பதும், தான் உண்மயிலேயே விஜய்யை காதலிப்பதும் தெரிய வருகிறது. இறுதியில் லால் மற்றும் விஜய் இணைந்து வில்லன் Pradeep Rawat-ஐ அழிக்கிறாற்கள்.
க்ளைமாக்ஸில் விஜய்யும், காஜலும் போலீஸ் உடையில் வலம் வருகிறார்கள் என்பது கூடுதல் தகவல்...
Tuesday, 7 January 2014
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை காலை 10 மணிக்கு தொடங்க வேண்டும்: அரசுக்கு சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை SSLC will start at 10 am State Assembly Members Request
Img எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை காலை 10 மணிக்கு தொடங்க வேண்டும்: அரசுக்கு சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை SSLC will start at 10 am State Assembly Members Request
சென்னை, ஜன.8-
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை காலை 9-15 மணிக்கு பதிலாக காலை 10 மணிக்கு தொடங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதாவுக்கு ஈரோடு சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார்.
எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு மார்ச் மாதம் 26-ந்தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 9-ந்தேதி முடிவடைகிறது. தேர்வுகள் காலை 10 மணிக்கு பதிலாக இந்த வருடம் முதல் முதலாக காலை 9-15 மணிக்கு தொடங்கும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்டம் பவானி சாகர் சட்டமன்ற உறுப்பினர்(இந்திய கம்யூனிஸ்டு) பி.எல்.சுந்தரம் பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதாவுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
இந்த கல்வியாண்டில் நடைபெற உள்ள எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு காலை 9-15 மணிக்கு தொடங்கும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த நேர மாற்றம் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு மிகுந்த சிரமத்தை கொடுக்கும் என கருதுகிறேன்.
தேர்வு நேரம் எஸ்.எஸ்.எல்.சி.க்கு மட்டும்தான் மாற்றப்பட்டுள்ளது. இதுபொருத்தமானதாக இல்லை என நினைக்கிறேன்.
மாணவ-மாணவிகள் காலை 9-15 மணிக்கு தேர்வுக்கு வர அதிகாலையில் எழுந்து புறப்பட தயாராக வேண்டி உள்ளது. அதனால் மாணவர்களுக்கு படிப்பதற்கான காலம் குறைவதோடு பதற்றத்திற்கும் ஆளாவார்கள்.
ஆகவே எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வின் நேர மாற்றத்தை திரும்ப பெற்று ஏற்கனவே இருந்தபடி காலை 10 மணிக்கு தேர்வினை தொடங்க உத்தரவிட வேண்டுகிறேன்.
இவ்வாறு சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.சுந்தரம் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
...
ஆசிரியர் அடித்ததால் பள்ளி மாடியிலிருந்து குதித்த மாணவி teacher beat student try to suicide
Img ஆசிரியர் அடித்ததால் பள்ளி மாடியிலிருந்து குதித்த மாணவி teacher beat student try to suicide
கள்ளக்குறிச்சி, ஜன. 7–
கள்ளக்குறிச்சி அருகே உள்ள ஏமப்பேர் பகுதியை சேர்ந்தவர் பச்சையப்பன். வியாபாரி. இவரது மகள் பாரதி (வயது 17). இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பிளஸ்–2 படித்து வருகிறார். அவர் அதே பள்ளியில் உள்ள கணக்கு ஆசிரியரிடம் டியூசன் படித்தார். அவருக்கு பாரதி டியூசன் பீஸ் சரியாக கொடுக்க வில்லை என்று தெரிகிறது. இதனால் கணக்கு ஆசிரியர் கோபமடைந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாணவியை தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று மதியம் அந்த கணக்கு ஆசிரியரின் பாடவேளை வந்தது. அந்த ஆசிரியர் மாணவி பாரதியை மீண்டும் திட்டியதாக சொல்லப்படுகிறது.
இந்தநிலையில் மாணவி பாரதி திடீரென்று பள்ளியின் 2–வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் அவர் படுகாயமடைந்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
...
Two girls fighting on the bus - Tamil Jokes
Two girls fighting on the bus.
Open the window to close the window and the other one was saying ..!
பஸ்ஸில் இரண்டு பெண்கள் சண்டை போட்டு கொடிருந்தார்கள் *.
Monday, 6 January 2014
ஆபாச வலைத்தளங்களை அடுத்து பேஸ்புக் , டுவிட்டர் பயன்படுத்தவும் கர்நாடக அரசு ஊழியர்களுக்கு தடை Karnataka Government blocks social media sites in official computers
Img ஆபாச வலைத்தளங்களை அடுத்து பேஸ்புக் , டுவிட்டர் பயன்படுத்தவும் கர்நாடக அரசு ஊழியர்களுக்கு தடை Karnataka Government blocks social media sites in official computers
பெங்களூர், ஜன. 7-
கர்நாடக அரசின் அதிகாரப்பூர்வ இணையத்தின் வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் தங்களது அலுவலக கம்ப்யூட்டர் மூலம் ஆபாச வலைத்தளங்களுக்கு சென்று சிற்றின்ப காட்சிகளை கண்டு ரசிப்பதாக சி.பி.ஐ. ரகசிய போலீசாருக்கு தெரிய வந்தது.
குறிப்பாக, கர்நாடக அரசின் தலைமை செயலகத்தில் பணியாற்றும் முக்கிய அதிகாரிகள் கோப்புகளை ஆய்வு செய்யும் பணிகளை மறந்து விட்டு, இந்த ஆபாச வலைத்தளங்களே கதியாக கிடக்கின்றனர் என்பதை கண்டுபிடித்த சி.பி.ஐ., இது தொடர்பாக கர்நாடக மாநில தலைமை செயலாளருக்கு ரகசிய தகவல் அனுப்பியது.
இதனையடுத்து, கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் அரசின் இணைய இணைப்பின் வாயிலாக மேற்கண்ட வலைத்தளங்களுக்குள் நுழைவதை தடை செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எனினும், இரும்பு அடித்தவன் கையும்-சிரங்கு பிடித்தவன் கையும் சும்மா இருக்காது என்ற பழமொழிக்கேற்ப, தங்களது பணி நேரத்தில் அலுவலக கம்ப்யூட்டர்களின் வழியாக 'பேஸ்புக்', 'டுவிட்டர்' போன்ற சமூக வலைத்தளங்களில் அரசு ஊழியர்கள் அரட்டை அடித்து பொழுதை கழிக்க தொடங்கினார்கள்.
இதுவும் தலைமை செயலாளரின் கவனத்துக்கு சென்றதால் 'பேஸ்புக்', டுவிட்டர்' மற்றும் 'ஆன் லைன் ஷாப்பிங்' இணைய தளங்களுக்குள்ளும் நுழைய முடியாதபடி 'ஃபயர் வால்' (தடுப்பு சுவர்) மென்பொருளை கர்நாடக அரசுக்கு சொந்தமான கம்ப்யூட்டர்களில் பொருத்த அரசு உத்தரவிட்டது,
இதில் முதல் கட்டமாக தலைமை செயலகமான 'விதான் சவுதா', விகாச சவுதா போன்ற ஆயிரக்கணக்கான அரசு பணியாளர்கள் வேலை செய்யும் இடங்களில் இந்த தடுப்பு நடவடிக்கை செயல்படுத்தப்பட்டுள்ளது.
...
காதலிக்கு அதிர்ச்சி அளிக்க நிர்வாணமாக வாஷிங் மெஷினில் ஒளிந்தவர் சிக்கி தவிப்பு Girlfriend shocks naked and hiding in washing machine stuck Anxiety
Img காதலிக்கு அதிர்ச்சி அளிக்க நிர்வாணமாக வாஷிங் மெஷினில் ஒளிந்தவர் சிக்கி தவிப்பு Girlfriend shocks naked and hiding in washing machine stuck Anxiety
மெல்போர்ன், ஜன.7
ஆஸ்திரேலியாவின் வடக்கு மெல்போர்னில் வாலிபர் ஒருவர் தனது காதலிக்காக வீட்டில் காத்திருந்தார். காதலிக்கு அதிர்ச்சி அளிக்குமாறு செய்ய வாஷிங் மெஷினுக்குள் நிர்வாணமாக ஒளிந்து கொண்டுள்ளார்.
பின்னர் அவரால் அங்கிருந்து வெளியே வரமுடியவில்லை. பலமாக சிக்கி கொண்டார். இதனை அடுத்து அந்நாட்டு தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் வந்து முகம் சுழித்தனர். பின்னர் எண்ணெய் உதவியுடன் வாலிபரை உயிருடன் வெளியே கொண்டு வந்தனர்.
விளையாட்டுக்காக வாஷிங் மெஷினுக்குள் சென்ற வாலிபர் பலமாக சிக்கி தவித்துள்ளார். தீயணைப்பு வீரர்களின் போராட்டத்தினால் 20 நிமிடங்கள் கழித்து மீட்கப்பட்டுள்ளார்.
...
Sunday, 5 January 2014
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி பெண் அமைச்சர் கார் மீது தாக்குதல் unkown men attacked aam aadmi lady minister car
Img டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி பெண் அமைச்சர் கார் மீது தாக்குதல் unkown men attacked aam aadmi lady minister car
புதுடெல்லி, ஜன.5-
புதுடெல்லியில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது. கெஜ்ரிவால் கட்சியில் 6 மந்திரிகள் இடம் பெற்றுள்ளனர். 6 பேரில் ஒருவர் ராக்கி பிர்லா என் பெண்ணும் ஒருவர். இவர் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருக்கிறார்.
இன்று இவர் டெல்லியின் மங்கோல்புரி பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் சென்ற கார் பொதுமக்களால் முற்றுகையிடப்பட்டது. அப்போது கூடட்டதில் இருந்த அடையாளம் தெரியாத நபர்களால் அவர் கார் தாக்கப்பட்டது.
இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, இந்த தாக்குதலால் நாங்கள் பின்வாங்க மாட்டோம். போலீஸ் பாதுகாப்பு எனக்கு தேவையில்லை என்று கூறினார்.
ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்தவுடன் ஆடம்பர செலவுகளை குறைக்கும் வகையில் மந்திரிகளுக்கு அதிகப்படியான போலீஸ் காவல் தேவையில்லை என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
...
Saturday, 4 January 2014
மும்பையில் குப்பை பொறுக்கிய 55 வயது பெண்ணை கற்பழித்து three drug addicts held for rape murder of ragpicker
Three drug addicts held for rape murder of ragpicker மும்பையில் குப்பை பொறுக்கிய 55 வயது பெண்ணை கற்பழித்து கொன்ற போதை இளைஞர்கள் கைது Three drug addicts held for rape murder of ragpicker
மும்பை, ஜன. 5-
மும்பை காட்கோபர் பகுதியின் ஒரு ஓரமாக கடந்த 1-ம் தேதி அன்று குப்பை பொறுக்கும் 55 வயது பெண்மணி இறந்துகிடந்தார். முதலில் போலீசார் இதை தற்செயலான இறப்பு என்று எண்ணினர். பின்னர், பிரேத பரிசோதனை அறிக்கையானது அவர் கற்பழிக்கப்பட்டு அடித்துக்கொல்லப்பட்டுள்ளார் என்று கூறியது.
இதையடுத்து குற்றவாளிகளை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. அப்பகுதியிலுள்ள அனைத்து குப்பை பொறுக்குபவர்களையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் ஆரிப் ஷேக் என்ற ஒரு குப்பை பொறுக்கும் இளைருக்கும் அந்த பெண்மணிக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இந்நிலையில் நேற்று ஆரிப் ஷேக் (21), தனது நண்பர்களான ராஜூ ஜெய்சுவால் (22), மிலிந்த் டாய்டே (22) ஆகியோருடன் காட்கோபர் பகுதியில் மது அருந்திகொண்டிருந்தபோது போலீசாரிடம் சிக்கினர். இவர்களிடம் நடந்த விசாரணையில் போலீசார் கூறியதாவது: -
போதைக்கு அடிமையான இந்த குப்பை பொறுக்கும் மூன்று இளைஞர்களும் கடந்த டிசம்பர் 31-ம் தேதி இரவு மது அருந்தியுள்ளனர். பின்னர் அந்த 55 வயது குப்பை பொறுக்கும் பெண்மணி படுத்திருந்த இடத்திற்கு சென்று ஆரிப் ஷேக் முதலில் கட்டாயப்படுத்தியிருக்கிறான். இதைத்தொடர்ந்து மூவரும் பலவந்தமாக அந்த பெண்ணை கெடுத்து இருக்கிறார்கள்.
பின்னர் அந்த பெண் போலீசில் புகார் தெரிவித்து விடுவார் என்று பயந்த அவர்கள், அந்த பெண்ணின் தலையில் கல்லால் அடித்துக்கொன்றுள்ளனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
இக்குற்றத்தை உறுதிபடுத்த டி.என்.ஏ. மற்றும் மருத்துவ அறிக்கைக்காக போலீசார் காத்திருக்கின்றனர்.
...
ஜூனியர் ஆசியக் கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் Junior Asia Cup Cricket india win
Img ஜூனியர் ஆசியக் கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் Junior Asia Cup Cricket india win
சார்ஜா, ஜன. 4-
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்டில் நடந்தது. இதில் சார்ஜாவில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 314 ரன்கள் குவித்தது. கேப்டன் விஜய் ஜோல், சஞ்ஜு சாம்சன் ஆகியோர் சதம் அடித்து அணியின் ஸ்கோர் உயர வழிவகுத்தனர். இவர்கள் இருவரும் இணைந்து 3-வது விக்கெட்டுக்கு 180 ரன்கள் சேர்த்தனர். துவக்க வீரர் பெயின்ஸ் 47 ரன்கள் அடித்தார்.
இதையடுத்து 315 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் துவக்க வீரராக களமிறங்கிய சமி அஸ்லம் 87 ரன்கள் குவித்து நம்பிக்கை அளித்தார். டாப் ஆர்டரில் மற்ற வீரர்கள் சோபிக்காத நிலையில், கம்ரான் குலாம் அணியின் ஸ்கோரை உயர்த்த கடும் முயற்சி மேற்கொண்டார். நெருக்கடியான சூழ்நிலையிலும் பொறுப்புடன் ஆடிய கம்ரான் குலாம் சதம் அடித்தார்.
ஆனால் அவருடன் இணைந்த பின்கள வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்ததால், பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்களே சேர்த்தது. கம்ரான் குலாம் 89 பந்துகளில் 102 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார்.
இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.
கடந்த ஆண்டும் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. ஆனால் போட்டி டையில் முடிந்ததால் சாம்பியன் பட்டத்தை இரு அணிகளும் பகிர்ந்துகொண்டன.
...
My Blog List
-
-
Navy veterans of the case Italian Governments petition in the Supreme Court - Navy veterans of the case Italian Governments petition in the Supreme Court New Delhi , Jan . 15 - 2 Indian fishermen and sailors were killed in the incid...11 years ago
-
Ramya Nambeeshan Stunning Model Stills 2013 - Cute Actress shared a link. Ramya Nambeeshan Stunning Model Stills 2013 PhotoShoots - Actress HD Gallery | Stills | Photos |... Ramya Nambeeshan Stunning ...11 years ago
-
Shri Narendra Modi has been the most talked about person on Facebook, in India, for the year 2013 - *Shri Narendra Modi has been the most talked about person on Facebook, in India, for the year 2013* *According to the social networking giant’s top India...11 years ago
-
மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம்: ஜெயலலிதா நாளை தொடங்கி வைக்கிறார் Metro rail test run will be starting tomorrow - *மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம்: ஜெயலலிதா நாளை தொடங்கி வைக்கிறார் Metro rail test run will be starting tomorrow* சென்னை, நவ.5- சென்னையில் ரூ.14 ஆயிரத்து 600...11 years ago
Popular Posts
-
நண்பனின் மனைவியை உஷார் பண்ணி எல்லாவற்றையும் ‘முடித்த’ நண்பன்! தமிழகத்தின் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வரதராஜன் பே...
-
' அது ' முடியும்... ஆனால அதுதான் முடியாது...! ஒரு தாத்தா வாக்கிங் போய்க் கொண்டிருந்தார். வழியில் ஒரு பிராத்தல் விடுதி இருந்த...
-
கொஞ்சல்.. காதலில் மட்டுமில்லை, காமத்திலும் கூட ரொம்ப சுவாரஸ்யமான விஷயம்.. கொஞ்சுவது பலவகை.. ஒவ்வொன்றிலும் ஒரு புது சுகம் இருக்கத்தான் ச...
-
பிரபல இயக்குனரின் படுக்கையறையில் தமிழ் முன்னணி நடிகை by abtamil Tamil newsYesterday, எதுகை மோனை இயக்குனரின் படத்தில் அறிமுகமாகி, தமிழி...
-
சொல்வதெல்லாம் உண்மை. நடிகையின் கள்ளத்தொடர்பால் விவாகரத்து வரை செல்லும் கணவர். by abtamil ஆண் நண்பருடனான ... - Tamil newsToday, தனியார்...
-
இயற்கைக்கு மாறாக உறவுகொள்ள வற்புறுத்தி துன்புறுத்துகிறார் என்று கூறி தன் கணவர் மீது புகார் கொடுத்துள்ளார் நடிகை யுக்தா முகி. 1999-ல் உலக அ...
-
மனைவியை விவாகரத்து செய்கிறார் நடிகர் தனுஷ் – ரஜினி குடும்பம் அதிர்ச்சி by abtamil ஆண் நண்பருடனான ... - Tamil newsToday, மனைவியுடன் தனு...
-
துணை நடிகைகளை வைத்து விபச்சார தொழிலில் ஈடுபட்ட பிரபல அம்மா நடிகை சென்னையில் கைது செய்யப்பட்டார். சென்னை நகரில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கி...
-
முதலிரவு அறை First night tamil sex jokes புதுமணத் தம்பதிகள் சடங்குகள் முடிந்து முதலிரவு அறைக்குள் நுழைந்தனர். எதுக்கு கண்ணே இனி ஆட...
-
காத்துநின்ற பள்ளி மாணவியை புதருக்குள் வைத்து இரு வாலிபர்கள் கற்பழிப்பு ஆந்திர மாநிலம் ஆதிலா பாத் மாவட்டம் வெல்லம் பள்ளி கிராமத்தை சே...
Popular Posts
-
பெங்களூரை சேர்ந்த நந்தகுமார் என்ற வாலிபர், ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த இளம்பெண்ணை இன்டர்நெட் மூலம் சாட் செய்து திருமணம் செய்துக்கொண...
-
பிரபல நடிகை சினேகா உல்லலின் ஆபாச வீடியோக்கள் இணையதளங்களில் உலா வந்து கொண்டு இருக்கிறது. இதனை அவரை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிரபல...
-
முதலிரவு அறை First night tamil sex jokes புதுமணத் தம்பதிகள் சடங்குகள் முடிந்து முதலிரவு அறைக்குள் நுழைந்தனர். எதுக்கு கண்ணே இனி ஆட...
-
கடந்த தீபாவளிக்கு ஜெயன்ட் நிறுவன தயாரிப்பில் , முருகதாஸ் இயக்கத்தில் , சூர்யா நடித்து வெளிவந்து , தமிழினத்திற்கே பெருமை ச...
-
சொல்வதெல்லாம் உண்மை. நடிகையின் கள்ளத்தொடர்பால் விவாகரத்து வரை செல்லும் கணவர். by abtamil ஆண் நண்பருடனான ... - Tamil newsToday, தனியார்...
-
மனைவியை விவாகரத்து செய்கிறார் நடிகர் தனுஷ் – ரஜினி குடும்பம் அதிர்ச்சி by abtamil ஆண் நண்பருடனான ... - Tamil newsToday, மனைவியுடன் தனு...
-
பிரபல இயக்குனரின் படுக்கையறையில் தமிழ் முன்னணி நடிகை by abtamil Tamil newsYesterday, எதுகை மோனை இயக்குனரின் படத்தில் அறிமுகமாகி, தமிழி...
-
Gallery Tamil Actress - Malavika Hot South Indian Actress Tags :malavika hot photos,malavika hot pictures,malavika singer,singer mala...
-
The turbine of the Kudankulam Nuclear Power Project's first reactor which was resynchronized with the southern gridlast Friday, was stop...
-
' அது ' முடியும்... ஆனால அதுதான் முடியாது...! ஒரு தாத்தா வாக்கிங் போய்க் கொண்டிருந்தார். வழியில் ஒரு பிராத்தல் விடுதி இருந்த...