Sunday, 26 January 2014

ஓரினச்சேர்க்கையாளரான எனது மகளை கவரும் ஆண்மகனுக்கு ரூ.815 கோடி: ஹாங்காங்க் தொழில் அதிபர் அறிவிப்பு Hong Kong businessman to offer 815 crore to man marries his gay daughter

Img ஓரினச்சேர்க்கையாளரான எனது மகளை கவரும் ஆண்மகனுக்கு ரூ.815 கோடி: ஹாங்காங்க் தொழில் அதிபர் அறிவிப்பு Hong Kong businessman to offer 815 crore to man marries his gay daughter
 ஹாங்காங், ஜன. 26-ஹாங்காங்கின் மிகப் பிரபல கட்டுமானக் கம்பெனியின் முதலாளியான செசில் சாவ், ஓரினச்சேர்க்கையாளரான தனது செல்ல மகள் கிகியை (33) திருமணம் செய்துகொள்பவருக்கு 815 கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இதுபோன்று 65 மில்லியன் டாலர் வழங்கப்படும் என்று கூறியதை அடுத்து உலக பத்திரிகைகளின் தலைப்பு செய்தியில் செசில் இடம்பிடித்தார்.எனது மகளின் மனதை கவரும் அந்த ஆண்மகனுக்கான தொகையை மேலும் அதிகரித்து நூறுகோடி ஹாங்காங் டாலர் பணம் தரப்படும் என்று தற்போது அவர் கூறிவருகிறார். எனது மகளின் சுதந்திரமான வாழ்க்கையில் நான் தலையிட விரும்பவில்லை. இருந்தும் எனது தொழிலை வழிவழியாக நடத்த எனது வாரிசின் மூலம் குழந்தைகள் தேவை. ஆகையால் எனது மகளுக்கு ஒரு அழகான திருமணம் செய்துவைக்க விரும்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார். இந்த செய்தியால், கிகியின் 9 ஆண்டுகால பார்ட்னர் சீன் ஏவ் விரக்தியடைந்துள்ளார். எனது தகப்பனாரின் விருப்பப்படி என்னை வசீகரிக்கும் ஒரு ஆண் மகன் கிடைப்பார் என்ற நம்பிக்கை எனக்கில்லை என்று கிகியும் கூறியுள்ளார். கிகி கடந்த 2012-ம் ஆண்டு சீன் ஏவ் என்ற பெண்ணை பிரான்சில் திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த அறிவிப்பை அடுத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. இருந்தும் அவரது மகள் கிகி தனது மனதை மாற்றிக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. ஹாங்காங் பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் செசில் சாவ், கடைசியாக ஒரு இளம்பெண்ணுடன் சேர்ந்து காணப்பட்டார். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுடன் படுக்கையை பகிர்ந்துகொண்டவன் என்று கூறும் செசில் சாவுக்கு, ஆண் துணை தேவை இல்லை என்று கூறும் பெண்ணை நினைத்தால் வியப்புதான் ஏற்படுகிறது.  ... 

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger