திருவள்ளூர். ஜன.23-
திருவள்ளூரை அடுத்த பொன்னேரி அண்ணா நகர் சோம்பட்டு பகுதியை சேர்ந்தவர், நாகதாஸ் (வயது 35). எம்.ஏ பட்டதாரியான இவர் தனது மூன்றாவது வீட்டில் வசிக்கும் மீரா (பெயர் மாற்றப்பட்டு உள்ளது.) என்ற 25 வயது பெண்ணை காதலித்து வந்தார். கடந்த 4-9-2002 அன்று மீரா தனது வீட்டில் உடல் நலக்குறைவு காரணமாக படுத்து இருந்தார்.
அப்போது அங்கு வந்த நாகதாஸ் அவரிடம் உடல் நலம் பற்றி விசாரித்தார். அப்போது மீராவின் பெற்றோர் வீட்டில் இல்லை. இதனை பயன்படுத்திக்கொண்ட நாகதாஸ், மீராவின் பெற்றோர் கொடுத்ததாக கூறி, ஒரு மாத்திரையை சாப்பிடும்படி கூறி இருக்கிறார். அது மயக்க மாத்திரை என்று அறியாமல் சாப்பிட்ட மீரா சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்தார். அப்போது மீராவை நாகதாஸ் கற்பழித்துவிட்டார்.
பின்னர் மயக்கம் தெளிந்து எழுந்த மீரா தான் கற்பழிக்கப்பட்டதை அறிந்து நாகதாசிடம் கேட்டார். அதற்கு அவர் மீராவை திருமணம் செய்துகொள்வதாக கூறி சமாளித்துவிட்டார். இந்நிலையில் மீரா கர்ப்பமாகி ஆண் குழந்தை பெற்றெடுத்தார். குழந்தை பிறந்த பின்னரும் தன்னை திருமணம் செய்து கொள்ள நாகதாஸ் மறுத்து விட்டதால் பொன்னேரி போலீஸ் நிலையத்தில் மீரா புகார் செய்தார். பூந்தமல்லியில் உள்ள கோர்ட்டில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கு பின்னர் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனால் மனவேதனையடைந்த மீரா தொடர்ந்து போராடி சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அதை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கை திருவள்ளூரில் உள்ள மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முருகன், நாகதாஸ் மீதான கற்பழிப்பு குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 7 வருடம் கடுங்காவல் ஜெயில் தண்டணையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து போலீசார் நாகதாசை சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீலாக பி.எஸ்.ஆர்.சவுந்தர்ராஜன் ஆஜராகி வாதாடினார்.
Rape |

0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?