Img மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவேன்: தேவயானி கோப்ரகடேயின் தந்தை அறிவிப்பு Devyani Khobragade father to contest Lok Sabha elections
புதுடெல்லி, ஜன. 15-
அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தேவயானி கோப்ரகடேயின் தந்தையும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான உத்தம் கோப்ரகடே வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும், சில கட்சிகளுடன் இது தொடர்பாக பேசி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த தகவலை இதுவரை உறுதி செய்யாமல் இருந்த உத்தவ் கோப்ரகடே, இப்போது மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். பணியில் இருந்து ஓய்வு பெற்றபிறகு இதுபற்றிய பேச்சு தொடங்கிவிட்டதாக குறிப்பிட்டுள்ள கோப்ரகடே எந்த கட்சியில் இணைவது என்ற தகவலை வெளியிட மறுத்துவிட்டார்.
பல்வேறு கட்சிகளுடன் பேசி வருவதாக குறிப்பிட்ட கோப்ரகடே, எந்த கட்சியில் சேருவது என்பதை சரியான நேரத்தில் அறிவிப்பதாகவும் கூறியுள்ளார்.
தனது மகள் தேவயானியின் இரண்டு குழந்தைகளை இந்தியாவிற்கு கொண்டு வருவது பற்றி கேட்டபோது, அடுத்த மாதம் டெல்லி வரும் குழந்தைகள் டெல்லியில் படிப்பை தொடருவார்கள் என்று பதிலளித்தார்.
...
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?