வசந்தமாய் வந்தாள்
என்னைத்தேடி....
பூக்களை அள்ளி தெளித்தாள்
என்மீது.....
மலர்களின் நறுமணத்தில்
மயங்கிப்போனேன்....
மலர்களின் இளவரசி நீ
உன்னை விட பூக்கள் அழகு அல்ல எனக்கு...
பூந்தோட்டத்தில் ராஜாங்கம்
நடத்தும் மகாராணி நீ...
பூவின் உடல் பளபளப்பின்
கண்ணாடியில் என்னை மறந்தேன்...
பூங்காவிற்கு அழைத்து சென்றாய்
கடற்கரைக்கு அழைத்து சென்றாய்...
காதல் மொழிபேசி
என்னை உன்னில் சாய்த்தாய்...
பூ இதழ்களால் என்னை வருடி
மணம் கோர்த்து மகிழசெய்தாய்...
பாய்ந்து வரும் நதிக்கு
கடலும் வழிவிட்டு சங்கமித்தது....
ஏனடி பூ"ந்"தேவதையே
கனவில் மட்டும் வந்து, ஏன் என்னை இம்சிக்கிறாய்...!!!
டிஸ்கி : வெஸ்டன் யூனியன் பேங்கில் எனக்கு லாட்டரி அடித்து, பல்பு வாங்கியதை நாளை சொல்றேன் ஹி ஹி எலேய் தக்காளி, நீ சிரிக்கிறது இங்கே வரை கேக்குது ராஸ்கல்...
http://dinasarinews.blogspot.com
http://tamil-message.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?