"கடவுளே! என்னை ஏன் இச்சுமையைச் சுமக்கச் செய்தாய்?இது நான் சாப்பிடும் பொருளல்ல.மிகக் கனமாகவும் இருக்கிறது.ஆனால் இதுதான் நீ விரும்புவது என்றால்,உனக்காக நான் இதை நிச்சயம் செய்வேன். "
படத்தில் ஒரு எறும்பு கனமான ஒரு பொருளைத் தூக்கிச் செல்கிறது.அது ஒரு விழி வில்லையைச்(contact lens) சுமந்து செல்கிறது.மேலே உள்ள வாக்கியம் அது சொல்வதாக அமைக்கப்பட்டிருக்கிறது.
இது என்ன?
இதன் பின்னே ஒரு சம்பவம் இருக்கிறது.
அந்தப் பெண் சிரமப்பட்டு மலையேறிக் கொண்டிருந்தாள்.பாதிக்கு மேல் கடந்த பின் ஒரு பாறையில் நின்று இளைப்பாறினாள்.அவளுக்கு மூச்சு வாங்கியது.
அப்போது அவள் பாதுகாப்புக் கயிறு கண்ணில் பட்டு விழி வில்லை கீழே விழுந்து விட்டது.அவள் பயந்தாள்.ஏனெனில் அதுவின்றி அவள் பார்வை தெளிவாக இருக்காது.பாறை மேல் விழுந்திருக்குமா என்று பார்த்தாள்.தெரியவில்லை.
அவள் பிரர்த்தனை செய்துகொண்டே ஒருவாறாக உச்சியை அடைந்தாள். அங்கு சென்றபின் அவள் உடையில் எங்காவது ஒட்டியிருக்கிறதா எனப் பார்த்தாள்.இல்ல,அவளுக்கு மிக வருத்தமாக இருந்தது.மலை உச்சியிலிருந்து அழகிய இயற்கையை நன்கு அனுபவித்துப் பார்க்க முடியவில்லையே என்று.
பின் நண்பர்களுடன் கீழே இறங்க ஆரம்பித்தாள்,"கடவுளே!இந்த மலையின் இண்டு இடுக்குகளைக் கூட நீ அறிவாய்.என் விழி வில்லை எங்கே இருக்கிறது என்றும் நீ அறிவாய்.அது கிடைக்க அருள் செய்"எனப் பிரார்த்தித்தவாறே .
அவர்கள் பாதிதூரம் இறங்கியதும்,எதிரே ஒரு குழு வரக் கண்டார்கள். அக்குழுவில் ஒருவன் இவர்களைப் பார்த்து உங்களில் யாராவது விழி வில்லையைத் தவற விட்டு விட்டீர்களா எனக்கேட்டான்.பெண்ணுக்கு மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.அதை விட அதிசயம் அவன் சொன்ன செய்தி.
அவன் சொன்னான்"ஒரு பாறை மீதிருந்த குச்சியின் மேல் ஒரு கட்டெறும்பு இதைச் சுமந்தபடி ஊர்ந்து கொண்டிருந்தது!"
இந்த நிகழ்ச்சியை அப்பெண் சித்திரக்காரரான் தன் தந்தையிடம் சொல்ல அவர் வரைந்த சித்திரம்தான் இது.
இந்நிகழ்விலிருந்து வாழ்க்கையின் தத்துவம் ஏதாவது புரிபடுகிறதா?
http://cmk-mobilesms.blogspot.com
http://tamil-friend.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?