"அப்பா! நான் விமானப் படையில் சேர ஆசைப்படுகிறேன்"-மகன்'
"ஐயோ! வேண்டாம் .உன்னை அங்கு அனுப்பி விட்டு நாங்க கவலைப் பட்டுக் கொண்டே இருக்க முடியாது." பெற்றோர்
இன்னுமோர் காட்சி.
"சார்!இந்த இடம் ரொம்ப நல்ல இடம்.வசதியான குடும்பம்.பிக்கல் பிடுங்கல் கிடையாது.பையன் ஆர்மியில் மேஜரா இருக்கான். பொண்ணுக்குப் பொருத்தமா இருப்பான்." தரகர்.
"வேண்டவே வேண்டாம்.உயிருக்கு உத்திரவாதமில்லாத உத்தியோகம்"
பெற்றோர்.
இதுபெரும்பான்மையான இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சி.
ஜாதகப் பொருத்தம் பார்த்துதான் கல்யாணம் செய்யப் போகிறார்கள். பையனுக்கு தீர்க்காயுள் ஜாதகமா,தோஷங்கள் எதுவும் இல்லையா என்பதெல்லாம் பார்க்கத்தான் போகிறார்கள்.ஆயினும் ஒரு பயம்.இந்த மாதிரிப் பணிகளில் ஆபத்து அதிகமே என்று.உயிருக்கு உத்திரவாதம் இல்லையே என்று.
உயிருக்கு உத்திரவாதம் எங்கேயிருக்கிறது ?
சமீபத்திய ஒரு சோக சம்பவம்.
அந்த இளஞன் தனது 16வது வயதில் விமானப் படையில் சேர்ந்தான்.
1999 இல் கார்கில் போரில் கலந்து கொண்டான்.
ராமேஸ்வரத்தில் சுனாமியின்போது நிவாரண உதவி செய்த பிரிவில் இருந்தான்,பல உயிர்களைக் காத்தான்.
மும்பாயில் 26-11-2008 இல் நடந்த தீவிரவாதத் தாக்குதலின் போது அங்கு N.S.G. கமாண்டோவாகப் பணி புரிந்தான்.
2010 இல் பணி ஒய்வு பெற்றுத் திரும்பி வந்தான்.
இந்த ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி சென்னையில் ஒரு சாலை விபத்தில் மரணமடைந்தான்.
எங்கு உயிருக்கு உத்திரவாதம் இல்லையென அஞ்சுகிறோ,அங்கு வரவில்லை மரணம்.
அது காத்துக் கொண்டிருந்து சென்னையில் ஒரு சாலை விபத்து வடிவில்.
மரணம் எங்கு எந்த வடிவில் வரும் என்பது யாருக்குத் தெரியும்?
இது பற்றிய ஒரு குட்டிக் கதை ஒன்று என் பழைய பதிவில் சொல்லியிருந்தேன்.
"ஊழிற் பெருவலி யாவுள?"
http://cmk-mobilesms.blogspot.com
http://tamil-friend.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?