ஒரு நண்பனுக்கு நிகழ்ந்த சம்பவம் இது, பத்து வருஷம் முன்பு நண்பனின் படிப்பறிவு இல்லாத அவன் தாயிடம் தாய்மாமன் ஏமாற்றிய கதை...
இவன் தாய் கூட பிறந்தவர்கள் மொத்தம் ஆறுபேர், நான்கு பெண்கள் இரண்டு ஆண்கள், இதில் படித்தவர்கள் ரெண்டுபேர் மீதி ஒன்றும் படிக்காதவர்கள், ஒரு மாமன் வாத்தியார், ஒரு சித்தி ஹெட்மாஸ்டர், மீதி உள்ளவர்கள் விவசாயம் பார்த்து இவர்களை படிக்க வைத்திருக்கிறார்கள்.
இன்னொரு மாமன் சவூதி போயிட்டு வந்து பெரும் பணக்காரனாக இருக்கிறான், தகப்பனாரின் சொத்து எல்லாமே ஆண் மக்கள் எடுத்துக்கொள்ள, பெண் மக்களுக்கு ஒன்றுமே இவர்கள் கொடுக்கவில்லை, அதைபற்றி பெண்மக்களும் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை...
ஆனால் தாயின் சொத்தாக ஒரு நிலம் இருந்திருக்கிறது, நாகர்கோவிலில் இருந்து கூடங்குளம் போகும் வழியின் இடையில் கூட்டப்புளி'க்கும் செட்டிகுளத்துக்கும் நடுவே கடல்கரை ஓரம் அந்த நிலம் இருக்கிறது....!!!
இது பெண்மக்கள்மாருக்கு தெரிஞ்சும் கண்டுகொள்ளவில்லை அப்போது, மொத்தம் அறுபது சென்ட் பூமி இப்பிடி இருக்க, அவர்களின் பிள்ளைகள் வளர்ந்து படித்து கல்யாணம் கட்டி குடும்பமாகிவிட்டார்கள்...இப்படி இருக்க ஒருநாள்...
படித்த [[அதான் வாத்தி]] தாய்மாமன் யாருமில்லாத நாள்பார்த்து நண்பனின் வீட்டுக்கு வந்து, அக்கா உன் கையால் மீன்கறி சாப்பிட ஆசையாக இருக்கிறது என்று பாசமாக பாசமலரை பொழிய பாவம் நண்பனின் தாயார் பாசத்தில் உருகிப்போனார்....
சடசடவென மீன்கறி சமைத்து பாசமாக பரிமாறியிருக்கிறார், நல்லா சாப்பிட்டுட்டு, உண்ட மயக்கத்தில் நல்ல ஒரு உறக்கமும் உறங்கிவிட்டு, அக்கா நான் கிளம்புறேன் என சொல்லிவிட்டு, கொஞ்சம் பேப்பரை நீட்டி கையெழுத்து போடச்சொல்லி இருக்கிறான், அக்கா நீ இதில் கையெழுத்து போட்டதுக்கு நான் உனக்கு பத்தாயிரம் ரூபாய் கொஞ்சகொஞ்சமா தருவேன் என்று சொல்லி இருக்கிறான்...
கையெழுத்தை போட்டபின்தான் தாயாருக்கு கொஞ்சம் சுருக் என டவுட் வரவே, கேட்டுருக்கிரார்கள் அப்போதான் அந்த நிலத்தை பற்றி சொல்லி இருக்கிறான், கையெழுத்து போட்டாச்சே என அதிர்ந்த தாயார், இதை வெளியே யாரிடமும் சொல்லாமல் தனக்குள் அடக்கி வைத்துக்கொண்டார்...
அதே தாய்மாமன் மற்ற படிக்காத இரண்டு பேரிடமும் இப்படியே பாசமலரை பொழிந்து கையெழுத்து வாங்கி இருக்கிறான், ஆக மூன்று படிக்காதவர்களை ஏமாற்றி ரெண்டு ஆண்மக்களும் படித்த அந்த பெண்ணுமாக கூட்டணி போட்டு தனதாக்கி கொண்டார்கள்...
இப்படி இருக்க நண்பன் வெளிநாட்டில் இருந்து வந்தபோது, நல்லா ஜாலியாக குடும்பத்தை பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது, அவன் தாய் தெரியாமல் மேட்டரை பற்றி உளறிவிட, விவகாரம் புரிந்து நண்பன் எரிமலையானான்....
அவன் மற்ற சகோதரர்களையும் அழைத்து விஷயத்தை சொல்ல, எல்லாருமாக அம்மாவை விசாரிக்க அம்மா எல்லா விஷயத்தையும் சொல்லி இருக்கிறார்கள், வளர்ந்த பிள்ளைகள் நாங்கள் இருக்கும் போது எங்களிடம் எதுவும் கேட்காமல் எப்படி நீங்கள் கையெழுத்து போட்டீர்கள் என சத்தம் போட்டுவிட்டு....
மாமனுக்கு போனை போட்டு கேட்க, எங்க அக்காளாச்சு நாங்களாச்சு என்று பூசி மெழுகி இருக்கிறார், நண்பன் மேற்கொண்டு அவரோடு தகராறு பண்ண விரும்பாததால் மவுனமாகி விட்டான்......
ஆனால் இப்போ புது சட்டமே ஜெயலலிதா கொண்டு வந்துருக்காரே, நிலமோசடி சட்டம் நேரே அந்தந்த மாவட்ட எஸ் பி ஆபீசில் தனி பிரிவே இருப்பதாக அண்ணன் அனில் சொன்னார், இப்படி ஏமாற்றி நிலம் மோசடி செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கபடுகிறது அதுவும் உடனடியா என சொன்னார்....!!!
இதைபற்றி இன்னும் விவரம் தேவைப்படுகிறது தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் அல்லது மெயில் அனுப்புங்கள் [[ manaseytrmanasey525@gmail.com ]]
ஏமாற்றிய தாய்மாமனுக்கு வலைவிரிப்போம் நண்பர்களே.........
பத்து வருஷத்துக்கு முன்பே அங்கே காற்றாலைகள் வந்து அந்த இடம் தங்கத்தப்போல விலையேறி கிடப்பது வேறு விஷயம்....!!!
டிஸ்கி : விக்கி தக்காளி நேற்றைக்கு அவன் பதிவில் யாரையோ போட்டு தாளிச்சானே, அது யாருய்யா....? எனக்கு இதுவரை தெரியவே இல்லை....!!!
டிஸ்கி : என் வாழ்க்கை வரலாற்றில் முதன் முதலாக, லாட்டரி அடித்திருக்கிறது வெஸ்டன் யூனியன் பேங்கில், பிலிப்பைன்ஸ் பெண் ஊழியர் போன் செய்தாள், என்ன பரிசு என கேட்டதுக்கு, அது ஒரு கிஃட் பாக்ஸாம் நான் போயிதான் திறந்து பார்க்கணுமாம், சாயங்காலம் வாறேன்னு சொல்லியிருக்கேன், ஆண்டவா ஒருகிலோ தங்கம் கிடைக்கட்டும், நான் பஹ்ரைனை காலி பண்ணிட்டு ஊர் வந்துர்றேன் ஹி ஹி, ஆக நாளை ஒரு பதிவு தேத்திருவேன் ஹி ஹி....!!!
டிஸ்கி : என் வாழ்க்கை வரலாற்றில் முதன் முதலாக, லாட்டரி அடித்திருக்கிறது வெஸ்டன் யூனியன் பேங்கில், பிலிப்பைன்ஸ் பெண் ஊழியர் போன் செய்தாள், என்ன பரிசு என கேட்டதுக்கு, அது ஒரு கிஃட் பாக்ஸாம் நான் போயிதான் திறந்து பார்க்கணுமாம், சாயங்காலம் வாறேன்னு சொல்லியிருக்கேன், ஆண்டவா ஒருகிலோ தங்கம் கிடைக்கட்டும், நான் பஹ்ரைனை காலி பண்ணிட்டு ஊர் வந்துர்றேன் ஹி ஹி, ஆக நாளை ஒரு பதிவு தேத்திருவேன் ஹி ஹி....!!!
http://dinasarinews.blogspot.com
http://tamil-message.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?