வாழ்க்கையில நடந்த நடக்கும் முதல் ஆச்சர்யமாச்சே வரலாறு ஆச்சே, வெஸ்டன் யூனியன் பேங்க்ல லாட்டரி அடிச்சதுன்னு அதை கொஞ்சம் விரிவா சொல்றேன் முதல்ல இருந்தே....
பொதுவா வெளிநாடுகளில் இருந்து ஊருக்கு பணம் அனுப்பும் பேங்குகளில் நாம் பணம் அனுப்பியதும் கஸ்டமர்களை கவர்வதற்காக இப்பிடி லாட்டரி சீட்டுகள் கொடுப்பதுண்டு, எனக்கு இதில் ஒருபோதும் நம்பிக்கை இருந்ததில்லை காரணம் ஒரு நாளும் லாட்டரி விழுந்ததே கிடையாது...!!!
பணம் அனுப்பியதும் அவர்கள் தரும் லாட்டரி சீட்டை பக்கத்தில் இருக்கும் இந்திய [[மொராக்கோ]] பிரஜைகளுக்கு கொடுத்து விட்டு செல்லும் என்னை லூசோன்னுதான் பார்ப்பாயிங்க நம்ம ஆளுங்க....!!!
இல்லைன்னா ரூமுக்கு வந்ததும் தூக்கி தூரப்போட்டுருவேன். இது ஒரு பன்னெண்டு வருஷமா நடக்கும் தொடர்கதை, இந்த தடவை ஊர் போயிட்டு வந்தபின் இந்த டிக்கெட்டை முன்பு போல களையாமல் எங்கோ போட்டு வைத்திருந்தேன்...
நேற்று [[அதான் முந்தாநாள்]] நான் பணியில் இருக்கும் போது, போன் வந்தது ஹலோ எனக்கு மனாசே கூட பேசணும் முடியுமா பிலிப்பயினி ஆங்கிலத்தில் பேசினாள், நான்தான் என்ன மேட்டருன்னு கேட்டதுக்கு செர் உங்களுக்கு லாட்டரியில பிரைஸ் அடிச்சிருக்கு, டிக்கெட்டையும், உங்கள் சிபிஆரையும் [[சிபி அல்ல அதுதான் எங்கள் அத்தாரிட்டி கார்ட்]] கொண்டு வந்து பரிசை பெற்று செல்லுங்கள் என்றாள்...
நான் கேட்டேன் என்ன பரிசென்று அதற்கு அவள் அது சர்பிரைஸ் செர் நீங்க நேர்ல வந்து பாருங்கள் என்றாள், நமக்குதான் மனசுக்குள்ளே ஒன்னும் வைக்க முடியாதே, பிளாக், பேஸ்புக், டுவிட்டர், பஸ் லாரி ஆட்டோ'ன்னு எல்லா ஆத்தாகிட்டேயும் சொல்லி பரப்பிட்டேன் ஹி ஹி...
போதாததுக்கு நண்பர்களிடமும் சொல்ல, ஒருத்தன் சொல்றான் தங்க பிஸ்கட் கிடைக்கும்னு, ஒருத்தன் சொல்றான், 5000 டாலர் கிடைக்கும்னு, ஒருத்தன் சொல்றான் எல் சி டி கிடைக்கும்ங்குறான், ஒருத்தன் சொல்றான் ஆயிரம் தினாராவது கிடைக்குங்குறான்....!!!
ஆக எனக்கு வேலையே ஓடவில்லை, எப்படா டியூட்டி முடியும்னு தவிச்சுகிட்டு இருக்கும் போதே, ஆமாம் எல்லாம் சரி லாட்டரி டிக்கெட்டை எங்கே வச்சோம்னு மறந்து போச்சே, வழக்கமா தூரப்போட்ட மாதிரி போட்டுட்டோமா தெரியலையேன்னு யோசிச்சு யோசிச்சு தாவு தீர்ந்து போனதுதான் மிச்சம், கொய்யால நியாபகமே இல்லை சலிப்பாக இருந்தது...
சரி எதுக்கும் வேலை முடிந்ததும் போயி பார்க்கலாம்னு தவிப்போடு காத்து இருந்தேன். வேலை முடிஞ்சதும் டாக்ஸி பிடிச்சு நேரே ரூமுக்கு ஓடினேன் டிக்கெட்டை தேடு தேடுன்னு தேடி சலிச்சு, ஒரு மூலையில் கண்டெடுத்தேன். பேங்க் மூட அரை மணித்துளிகளே இருந்தது...!!
டிராப்பிக்கில் டாக்ஸி மெதுவாக செல்லவே, இறங்கி ஓடுனேன் ஆவலாக, நான் பேங்க் செல்லுமுன்பாகவே அந்த டாக்ஸிகாரன் சிரிச்சி தலையில் அடித்துக்கொண்டே என்னை கடந்துபோனான்...ஹி ஹி...
ஒருவழியா உள்ளே நுழைந்து டிக்கெட்டை பிலிப்பைனி ஊழியரிடம் கொடுத்ததும், வாழ்த்துக்கள் செர் என்று கைகுளுக்கினாள் அவள் முகத்தில் அப்பிடி ஒரு சிரிப்பு, எனக்கோ ஆர்வம் தாங்க முடியவில்லை, ஒரு பேப்பரில் கையெழுத்து போட சொன்னாள் போட்டதும், அழகான ஒரு பார்சலை தந்தாள் வாழ்த்துக்களோடு...
ஆஹா இதுக்குள்ளே என்ன இருக்குன்னு பிதுக்கி பிதுக்கி பார்த்துக்கொண்டே ரூமுக்கு ஓடி வந்தேன் [[டாக்ஸிலதான்]] ரூம் கதவை பலமா லாக் செய்துட்டு மறுபடியும் நல்லா பூட்டியிருக்கான்னு செக் பண்ணிட்டு பார்சலை பிரித்தேன், அடப்பாவிகளா இப்பிடியா ஒரு பச்சைபுள்ளையை ஏமாத்தி பல்பு கொடுப்பாயிங்க ஹி ஹி என்னான்னு கீழே பாருங்க....
ஒரு ஹேன்ட் பேக், ஒரு கேப், ஒரு கப், ஒரு கேரி பேக் இம்புட்டுதான் அயிட்டம், ஆண்டவா ஒருகிலோ தங்கமாவது மினிமம் கிடைச்சிருக்க கூடாதா ம்ம்ம்ம் இன்னும் பயிற்ச்சி வேணுமோ....???!!!
அந்த தொப்பி என் தலையில் ஹி ஹி...
டிஸ்கி : அப்பாடா இப்பதான் ஆமினா மேடத்திற்கு மனசு குளிர்ந்திருக்கும், நேற்றைக்கே பதிவுல நான் பல்பு வாங்கப்போவதை சொல்லி இருந்தாங்க ஹி ஹி....!!!
http://dinasarinews.blogspot.com
http://tamil-message.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?