Monday 14 November 2011

வியாழக்கிழமை முதல் பெட்ரோல் விலை குறைகிறது

 
 


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை நிலவரத் துக்கு ஏற்ப இந்தியாவில் 15 நாட்களுக்கு ஒரு தடவை பெட்ரோல் விலையை இந்திய எண்ணை நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. அதன்படி கடந்த 3-ந் தேதி பெட்ரோல் விலை ரூ.1.80 உயர்த்தப்பட்டது.

இந்த விலை உயர்வுக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. கடந்த ஓராண்டில் பெட்ரோல் விலை சுமார் ரூ.10 உயர்ந்து விட்டது. சென்னையில் கடந்த ஜனவரி மாதம் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.63-க்கு விற்றது. தற்போது அது ரூ.73 ஆக உயர்ந்துள்ளது.

பெட்ரோல் விலையைத் தொடர்ந்து டீசல், சமையல் கியாஸ், விலையும் உயரலாம் என்று கூறப்பட்டதால் மக்களிடம் அதிருப்தி அதிகரித்தது. இந்த நிலையில் கச்சா எண்ணை விலை குறைந்தது. கடந்த மாதம் ஒரு பேரல் கச்சா எண்ணை 125 டாலராக இருந்தது.

தற்போது அது 115 டாலர் என்ற அளவுக்கு குறைந்துள்ளது. கச்சா எண்ணை விலை குறைவால் பெட்ரோல் விலையை குறைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சுத்திரிகரிப்பு வரி உள்பட எல்லா செலவினங்களும் குறைந்துள்ளதால், எண்ணை நிறுவனங்கள், பெட்ரோல் விலையை குறைக்க சம்மதித்துள்ளன.

ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.1 வரை குறைக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் லிட்ட ருக்கு ரூ.2 வரை குறைக்க எண்ணை நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. எண்ணை நிறுவனங் களின் ஆலோசனை கூட்டம் இன்று அல்லது நாளை நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் விலை குறைப்பு முடிவு எடுக்கப்படும்.

நாளை இரவு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே 17-ந் தேதி முதல் பெட்ரோல் விலை குறைப்பு அமலுக்கு வரும். 2010-ம் ஆண்டு ஜுன் மாதத்துக்கு பிறகு பெட்ரோல் விலை குறைய இருப்பது குறிப்பிடத்தக்கது. பாராளுமன்ற கூட்டம் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.

இந்த கூட்டத்தில் பெட்ரோல் விலை உயர்வு பிரச்சினையை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அதற்கு முன்னதாக பெட்ரோல் விலையை குறைத்து எதிர்க்கட்சிகளின் வாயை அடைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக பெட்ரோல் விலை குறைப்பு மூலம் கூட்டணி கட்சியான திரிணாமூல் காங்கிரசின் மிரட்டலை புறக்கணிக்க முடியும் என்று மத்திய அரசு கருதுகிறது.

 


0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger