இன்று குழந்தைகள் தினம்.
சில நாட்களாகப் பதிவுலகில் ஓய்ந்திருந்த ஒரு விளையாட்டை இன்று நண்பர் கணேஷ் மீண்டும் துவக்கியிருக்கிறார்.தொடர் பதிவைத்தான் சொல்கிறேன். குழந்தைகள் தினத்தை முன்னிட்டு "மழலை உலகம் மகத்தானது" என்ற தலைப்பில் என்னையும் எழுதப் பணித்து விட்டார்.முதல் இன்னிங்க்ஸிலேயே ஆடச் சொல்லி விட்டார்.அன்புக் கட்டளை.உடனே இறங்கி விட்டேன்.
அப்டமன் கார்ட்,ஆர்ம் கார்ட்,செஸ்ட் கார்ட் எல்லாம் போட்டாச்சு.காலில் தடுப்புக் கட்டியாச்சு.கையுறைகளை மாட்டிக்கொண்டு ,மட்டையைச் சுழற்றிக் கொண்டு இதோ மைதானத்தில் இறங்குகிறேன்.தலையைத் திருப்பி சூரியனைப் பார்க்கிறேன்.
முதல் பந்தில் அடித்தால் சிக்ஸரோ இல்லை நடு ஸ்டம்ப் எகிறப் போகுதோ!
என்ன எழுதலாம் ?
புது விதமாக ஏதாவது?தமிழ் இலக்கியத்தில் பிள்ளைத்தமிழ் என்று ஒரு பிரிவு உண்டு.இறைவனையோ,இறைவியையோ குழந்தையாக உருவகித்துப் பாடும் பாடல் அது.குழந்தைகள் தினத்தில் ஏதாவது பிள்ளைத்தமிழ் பற்றி எழுதலாமா?
(நீ என்ன பெரிய முனைவர் குணசீலனா,தமிழ் இலக்கியம் பற்றியெல்லாம் எழுதுவதற்கு.ஏதோ கொஞ்சம் தமிழ் படித்ததற்கே அலட்டிக் கொள்கிறாயே! அதெல்லாம் அவர் எழுதுவார்--1)
இன்றைய மாணவர்கள் பற்றி அவர்கள் நடத்தை பற்றி.புத்திசாலித்தனம் பற்றி,குறும்புகள் பற்றி எழுதலாமா?(உனக்கென்ன தெரியும்?நீ ஆசிரியரா?அதையெல்லாம் வேடந்தாங்கல் கருன் பார்த்துக் கொள்வார்.--2)
மழைக்காலம் வந்து விட்டது.குளிர் காலம் வரப்போகிறது.குழந்தைகளுக்குப் பல உடல் உபாதைகள் ஏற்படும்-சளி,காய்ச்சல்.செரியாமை என்பது போல். அவர்களுக்கு மருத்துவரிடம் போகாமல் ஏதாவது வீட்டு வைத்தியம் செய்வது எப்படி என்று குறிப்புகள் எழுதலாமா?(அதுக்கெல்லாம் நிறையத் தெரிஞ்சி ருக்கணும்.உன்னால் முடியாது. அன்பு உலகம் M.R. பார்த்துக் கொள்வார்--3.)
பின் என்னதான் எழுத?என் இளமை நினைவுகளை நினைத்துப் பார்த்துச் சுவை படக் கூறலாமா?எத்தனையோ இருக்கிறதே!(அதெல்லாம் எழுத ,'நினைத்துப் பார்க்கிறேன்',வே .நடனசபாபதி இருக்கிறார். அவர் எழுதட்டும்.--4)
இப்படியே போனால் நான் எழுத எதுவுமே இருக்காதே!கணேஷுக்கு என்ன பதில் சொல்ல?
ஒரு சிறுவன் தன் அப்பா பற்றி ஒரு கவுஜ எழுதுகிறான்—
"என் அப்பா ரொம்ப நல்லவர்தான்.
ஒரே ஒரு கெட்ட குணம் அவரிடம்
பொய் அதிகம் சொல்வார் அடிக்கடி.
ஆஃபீசில் விடுப்பெடுக்க
அழகாய் ஒரு பொய்!
லேட்டாய் வீடு திரும்பினால்
அம்மாவிடம் ஒரு பொய்!
கடன் காரன் தேடி வந்தால்
கண்டிப்பாய் ஒரு பொய்!
பார்த்தார் என் பிராக்ரஸ் ரிபோர்ட்
சொன்னார் கோபமாய்
"முட்டாப் பய மகனே"
ஹை!அப்பா ஒரு நிஜம் சொன்னார்!!"
கடைசியில் இன்றைய டைம்ஸில் வந்த செய்தி-
"இன்றைய சிறுவர்களின் EQ குறைந்து வருகிறது.மிக எளிதில் பொறுமை இழக்கிறார்கள்.சகிப்புத்தன்மை குறைவாக இருக்கிறது.எளிதாக மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள்.எதையும் தாங்கும் சக்தி குறைந்து விட்டது. இப்போதெல்லாம் ஏழு,எட்டு வயதுக் குழந்தைகள் கூட வன்முறை பற்றியும் மரணம் பற்றியும் பேசுகிறார்கள்"
இவை மனோதத்துவ நிபுணர்களின் கருத்து.
மற்றொரு செய்தி.சென்னையில் வசதியான பள்ளிகளில் படிக்கும் சிறுவர்களில் 20 விழுக்காடு பேர் பருமனாக இருக்கிறார்கள்.8 விழுக்காட்டுக்கு மேல் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டி ருக்கிறார்கள். 2ஆவது வகை நீரிழுவு நோய் இவர்களுக்கு வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.
Quo vadis!
தொடர அழைக்கும் நால்வர் யாரென்பதைத் தனியாகச் சொல்லவும் வேண்டுமோ?!
http://cmk-mobilesms.blogspot.com
http://tamil-friend.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?