நீதிபதி ,அந்த வழக்கில்,ஜாமின் பற்றிய தன் முடிவைச் சொன்னார்.
"இந்த வழக்கு சட்டத்துக்கும் ,தர்மத்துக்கும் இடையே ஏற்பட்ட ஒரு மோதல்.நீதிமன்றம் என்பது சட்டத்தின் வழி நின்று நீதி வழங்க வேண்டும்.ஆனால் அதே நேரத்தில், நீதிமன்றம் அசைவுகளற்ற ஒரு இயந்திரமும் அல்ல.அதற்கும் உள்ளம் உண்டு.மக்களின் நாடித்துடிப்பை அறியும் திறனுண்டு.இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரே காவல் துறையிடம் வழக்கு பற்றிய எல்லா விவரங்களையும் சொல்லியிருக்கிறார். எனவே சாட்சிகளை அவர் கலைப்பார் எனச் சொல்ல இடம் இல்லை. எனவே ஜாமீன் வழங்கப்படுகிறது".
இது என்ன வழக்கு?என்ன நடந்தது,நீதித்துறையின் உள்ளத்தைத் தொட?
38 வயதான கணவன்.29 வயது மனைவி.10 வயது மகன்.3 வயது மகள்.பிரச்சினை மகள்தான்.அவளால் நடக்க இயலாது,பேச இயலாது, கேட்க இயலாது.இப்படிப்பட்ட ஒரு பெண் வளர்ந்து பெரியவளாகி எப்படி வாழ முடியும்?அவர் மனைவியை கலந்தாலோசித்தார்.
ஒருநாள் ஒரு விடுதியல் அறை எடுத்தார்.குடும்பத்துடன் அங்கு சென்றார்.
குழந்தைகள் இருவருக்கும் தூக்க மாத்திரைகள் கொடுத்தார்,மனைவியும் அவரும் விஷமருந்தினர்.அனைவரும் படுத்தனர்-------
காலை மணி 5.30.பையன் விழித்துக்கொண்டான்.அவனுக்கு மூச்சை யடைத்தது. அப்பா,அம்மா,தங்கை அனைவரையும் எழுப்பிப் பார்த்தான். யாரும் எழுந்திருக்க வில்லை. பயமாக இருந்தது.தன் மாமாவுக்கு ஃபோன் செய்து தகவல் சொன்னான். அவர் வந்தார் பார்த்து அதிர்ந்தார்.
அனைவரையும் மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்றார். சிறுமி வழியிலேயே இறந்து போனாள்.
அந்தத் தந்தை பின் போலீசில் சரணடைந்து நடந்தது அனைத்தையும் சொன்னார்.
வழக்குப் பதிவு செய்யப் பட்டது.
அதுதான் வழக்கு.
(எந்தப் பிரிவுகளில் வழக்கு எனத் தெரியவில்லை-)
செய்தி:டைம்ஸ் ஆஃப் இந்தியா 13-11-2011.
http://cmk-mobilesms.blogspot.com
http://tamil-friend.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?