லிபிய முன்னாள் சர்வாதிகாரி கேணல் கடாபியின் ஆதரவுப் படைகள் தற்போது உயிரைப் பாதுகாக்க வேறு வழி தெரியாத நிலையில் இறுதி மூச்சைக் காக்க சண்டை போட்டுக் கொண்டிருப்பதாக ரீ.என்.சி போராளிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
கடாபியின் பிறந்த நகரமான ஒஸார் அடி காடி இருக்கும் சிற்றா நகரில் கடந்த சில நாட்களாக கடும் மோதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கடாபி படைகள் இப்போது நகரத்தின் அடி அந்தத்தில் இருக்கின்ற வாய்க்கால் போன்ற சிறிய பாக்கற்றுக்குள் சிக்குண்டுள்ளன. தப்பிப்போக வழியற்ற நிலையில் உயிருக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் தெரிவித்த போராளிகள் குழு தாம் தற்போது சிற்றா நகரின் பெரும் பகுதியை கைப்பற்றிவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்தப் படைப்பிரிவினரை வழி நடாத்துவது கடாபியின் மகன்களில் ஒருவராக இருக்கலாம் என்றும், அவரும் இதற்குள்ளேயே மறைந்துள்ளதாகவும் போராளிகள் தொவிக்கின்றனர். ஆனால் கடாபியை பிடிப்பது நமது நோக்கமல்ல என்று நேட்டோ செயலர் ஆனஸ்போ ராஸ்முசன் தெரிவித்தது இந்த விவகாரத்தின் பின்னால் ஏதோ ஒரு முடிச்சு நெருடுவதையே காட்டுகிறது.
http://veryhotstills.blogspot.com
http://veryhotstills.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?