ஈழத் தமிழர்களின் மீது சர்வதேச நாடுகளின் அக்கறை மேலும் அதிகரிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பினை பலப்படுத்துங்கள். இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களை ஆதரித்து நேற்றைய தினம் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பா.அரியநேத்திரன் மேலுள்ளவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
2009 மே மாதத்திற்கு பிற்பாடு இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினையே ஆதரித்தார்கள் இதனால்தான் சர்வதேச நாடுகள் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் தமிழர்களின் அரசியல் தீர்வு பற்றி பேசுமாறு இலங்கை அரசை வற்புறுத்துகின்றன.
அது மாத்திரமின்றி தொடர்ந்தும் தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் நிற்கிறார்களா என்பதை சர்வதேச நாடுகள் அவதானித்த வண்ணம் இருக்கின்றன. எனவே நடைபெற இருக்கின்ற கல்முனை மாநகர சபைக்கான தேர்தலிலும் தமிழ் மக்கள் அனைவரும் தமிழ் தேசிய கூட்மைப்புக்கே வாக்களித்து எம்மீது இருக்கின்ற சர்வதேசத்தின் ஆதரவை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய திருக்கோவில் பிரதேசசபைத் தவிசாளர் திரு.புவிதராஜ் (கண்ணன்) அவர்கள் உரையாற்றும்போது
நடைபெற இருக்கின்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக அரசாங்கமும் அதனுடன் உள்ள குழுக்களும் கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் இறங்கியுள்ளன தமிழ் மக்கள் அனைவரும் எதிர்வரும் 8 ஆம் திகதி இவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள் என அவர் தனதுரையில் தெரிவித்தார்.
நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் திரு.கலையரசன் உரையாற்றும்போது
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எத்தனை தடைகள் வந்தாலும் தொடர்ந்தும் தமிழ் தேசியத்திற்காக குரல்கொடுக்கும் இதற்காக கூட்டமைப்பினை பலப்படுத்துவது தமிழ் மக்களின் கடமையாகும் எனவும் எதிர்வரும் தேர்தலிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பினை வெற்றிபெறச் செய்து தமிழ் மக்களுக்கான உரிமையை நிலைநாட்ட பாடுபடவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
http://veryhotstills.blogspot.com
http://veryhotstills.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?