கட்சி வேட்பாளர்கள்,சுயேச்சைகள் மக்களிடம் ஆதரவு பெறுவது,வேட்பாளரின் தனிப்பட்ட செல்வாக்கு, பதவி,பணம் என பல்வேறு அடிப்படையில் அமையும்.
இந்த நிலை மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபடும். பணம் கொடுத்தால் தான் கூட்டத்தை கூட்ட முடியும் என்ற நிலை கடந்த தேர்தலிலேயே உறுதியாகி விட்டது.ஆகையால் தற்போது உள்ளாட்சி தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் கூட்டத்தை கூட்ட முடியவில்லையே… "ஆதரவு கேட்டு நமது அண்ணன் வர்றார்… வர்றார்' என கோஷமிட ஆள் இல்லையே என வருத்தப்பட வேண்டாம்.
இதையெல்லாம் செய்ய… கொடுக்க வேண்டியதை கொடுத்தா போதும், கட்சி எல்லாம் கிடையாது … யார் கூப்பிட்டாலும் கூப்பிட்ட கட்சிகளின் கொடியை தோளில் போட்டுக் கொண்டு கோஷம் எழுப்ப ஒரு கூட்டமே சிவகங்கையில் தற்போது உள்ளது.
வேட்புமனு தாக்கல், பிரசாரம் என அனைத்திற்கும் செல்வதே இவர்களின் வேலை. காலையில 10 மணிக்கு பிரசாரத்திற்கு செல்வதற்காக ரெடியா இருப்பாங்கா… எந்த கட்சி வந்து… ஆள் வேணும்ணு கேட்டாலும் இவர்கள் சென்று விடுவர்.காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை தான் இவர்களுக்கு டூட்டி நேரம். பிரசாரத்தை முடிந்து கிளம்பும் போது கையில 200 ரூபாயும் குவார்ட்டரும் கொடுக்கணும். இது தான் இவர்களது ஒரே "கண்டிஷன்'.
இன்றைக்கு ஒரு கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும் இவர்கள் அடுத்த நாள் வேறு ஒரு கட்சி வேட்பாளருடனும் பார்க்கலாம்.
(dm)
Filed under: Hot News Tagged: உள்ளாட்சித் தேர்தல் 2011, தமிழ்நாடு செய்திகள்
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?