"நிரபரதித் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கச் செய்வோம்" என்ற போராட்ட வாசகத்தை ஏந்தி நிற்கும் இளம்பெண் தான் செங்கொடி.
பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து, காஞ்சிபுரம் வட்டாச்சியர் அலுவலகம் முன் இன்று மாலை, தீக்குளித்த செங்கொடி, தனது தீக்குளிப்பதற்கு முன்னதாக கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார்.
"தோழர் முத்துக்குமாரின் உடல் தமிழகத்தை எழுப்பியது போல், என்னுடைய உடல் இந்த 3 தமிழர்களின் உயிரை காப்பாற்ற பயன்படும் என்ற நம்பிக்கையுடன் செல்கிறேன்- இப்படிக்கு தோழர் செங்கொடி" என்று அந்த கடிதத்தில் அவர் எழுதியுள்ளார்.
முத்துக்குமாரைப் போலவே, தாய் இல்லாமல் வளர்ந்த செங்கொடி வறுமையான சூழ்நிலையிலும், கொள்கை உணர்வோடு வாழ்ந்து வந்தவர். இருபத்தி எழு வயது நிறைந்த இந்த பெண்ணை கல்லூரி படிப்பை படிக்க வைத்தது காஞ்சிபுரத்தில் உள்ள மக்கள் மன்றம் என்ற அமைப்பு தான்.
மக்கள் மன்றம் இப்போது ராஜீவ் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்டு, வரும் ஒன்பதாம் தேதி தூக்குத்தண்டனையை எதிர் நோக்கி காத்திருக்கும் பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோரை, மரணத்திலிருந்து மீட்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட செங்கொடியின் மரணம் இப்போது, பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோரது மரண தண்டனையை தகர்க்க போராடும் தமிழ் உணர்வாளர்களை மட்டுமில்லாது, அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மூன்று தமிழர்களின் உயிரை காப்பாற்ற நடந்து வரும் போராட்டத்தில், இப்போது ஒரு இளம்பெண் உயிர் பலியாகி இருப்பது வருத்ததை ஏற்படுத்தும் விஷயமாகி விட்டது.
இலங்கை தமிழர்களின் பிரச்சனையின் போது, முத்துக்குமார் தீக்குளித்தபோதே, இது தவிர்த்திருக்கபட வேண்டும் என்று கருதப்பட்ட நிலையில், இப்போது செங்கொடியின் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.
தமிழர்களுக்காக களத்தில் நின்று போராடுவதற்கு தான் இப்போது இளைஞர்கள் தேவைப்படுகிறார்களே அன்றி உயிரை மாய்த்துக்கொள்ள அல்ல என்பதை தான் தமிழ் இயக்கங்களை சார்ந்தவர்கள் கருத்து.
செங்கொடியின் போராட்டம், மரண தண்டனைக்கு எதிரான போராட்டத்தின், அனைத்து தரப்பு மக்களின் கவனத்தை ஈர்த்து, போராட்டத்தை தீவிரமாக்கும் என்றாலும் கூட,
ஒரு மரணத்துக்கு, மற்றொரு மரணம் தீர்வாகி விடாது என்னும் சூழ்நிலையில், இது போன்ற தற்கொலைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்பது தான் எம் கருத்து.
தீக்குளித்த செங்கொடியின் ஆத்மா, மூவரின் உயிர் மீட்பால் சாந்தியடையட்டும்.
http://tamilsmsgalatta.blogspot.com
http://tamilsmsgalatta.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?