யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த அமெரிக்க இராஜாங்க உதவி செயலாளர் றொபேர்ட் ஓ பிளேக்கை சந்திப்பதற்கு ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தா முயற்சி எடுத்தார் என்றும் அமெரிக்க தூதரகம் அதற்கு மறுப்பு தெரிவித்திருந்ததாகவும் கொழும்பில் உள்ள இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்கா இராஜாங்க உதவிச்செயலாளர் பிளேக் தமிழ் தேசியக்கூட்டமைப்பை சந்தித்தையடுத்து தாமும் சந்திப்பதற்கு ஒரு சந்தர்ப்பத்தை தருமாறு டக்ளஸ் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தை கோரிய போது டக்ளஸை சந்திப்பதற்கு பிளேக் விரும்பவில்லை என தூதரக மட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாகவும், இதனால் கோபம் அடைந்த டக்ளஸ் நேற்று பிளேக் யாழ்ப்பாணம் வந்த போது ஒரு சில மக்களை தமது அலுவலகத்திற்கு நிவாரணம் தருவதாக அழைத்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தை அரசு ஆதரவுக்கட்சியான ஈ.பி.டி.பி நடத்த உள்ளதை தான் ஏற்கனவே அறிந்திருந்ததாகவும் இதனை தான் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளப்போவதில்லை என்றும் றொபேர்ட் ஒ பிளேக் தெரிவித்துள்ளார். றொபேர்ட் ஓ பிளேக்கிற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் அரசு ஆதரவுடன் ஈ.பி.டி.பி நடத்திய ஆர்ப்பாட்டம், யாழ். கச்சேரியில் அவருக்கு வரவேற்பு எதனையும் வழங்காது அவமதித்தது போன்ற சம்பவங்கள் சிறிலங்கா அரசாங்கத்திற்கு சர்வதேச மட்டத்தில் பாதகமான சூழலையே ஏற்படுத்தும் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
http://galattasms.blogspot.com
http://galattasms.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?