உன்னால் முடியும்..உன்னால் முடியும்...முன்னால்.., முன்னால்...
முஸ்கி:
ஒரு காலத்தில் மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் மூன்றாவதாக வைத்து, தொழுதல் செய்யப்பட்டவர்கள், இன்று "தொழில் செய்பவர்கள்" என்ற அளவில் மட்டுமே பார்க்கப்படுவதன் காரணத்தையும், அதனை சரி செய்வதற்காக காரியங்களையும் ஆராயும் வகையில்இந்த பதிவில் இருக்கும் கேள்விகள்/ கருத்துக்கள் தொகுக்கப்பட்டது.
இதற்கான பதில்களை "எதிர் பதிவாக" எதிர்பார்க்கிறோம். (எம்பூட்டு நாளைக்குத் தான் தொடர் பதிவு எழுத சகபதிவர்களை அழைப்பது...., இது எதிர்பதிவுக்கான அழைப்பு.. தில் இருந்தால் ஒரு சில ஆ"சிறியர்கள்" பற்றிய இந்த விமர்சனங்களுக்கு, பதில்... இனி பேசுவதற்கு ஒன்றுமில்லை, செயலில் காட்டுங்கள்)
கலகம் நன்மையில் முடியட்டும்.
"மனிதனை மனிதனாக, உருவாக்கும் சிற்பிகள் என்று ஆசிரியர்கள்" என்று உங்களின் பெருமையை ஊரெங்கும் பேசுகிறார்களே - உங்களில் எத்தனைப் பேர் சிற்பம் செதுக்கும் உளியை சரியாக வைத்திருக்கிறீர்கள்.., வகுப்புக்கு வரும் முன்னர் எத்தனை பேர், பாடத்தைப் பற்றிய சரியான தயாரிப்புடன் வருகிறீர்கள்?
அது என்ன அப்படி ஒரு கொடூர சந்தோஷம்... கேம்ஸ் பீரியடை கடன் வாங்கி பாடம் நடத்துவதாக "படம்" காட்டுவதில்..
கரும்பலகைக்கு முன் நின்று கொண்டு, ஏன் உளறிக்கொட்டுகிறீர்கள். எங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று நினைக்கிறீர்கள்...ஹா..ஹா.. நாங்கள் எந்திரன் யுகத்து மாணவர்கள். (இலவச லேப்டாப் தரட்டும், இணையத்திலிருந்து, புதியதகவல்களை சேகரித்து, உங்களை "பெண்டு நிமித்தும் படலம்" நடத்தப்போகிறோம்.. அப்போது இருக்கிறது வேடிக்கை.
ஆ..ஊ.. என்றால் "நாங்கெல்லாம் அந்த காலத்துல.." என்று கதையளக்கிறீர்கள்.. ஆசிரியர்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தகுதியை சோதிக்கும் வண்ணம் தேர்வு வைக்கச் சொல்லலாமா? அதுவும் இப்போது மாணவர்களுக்கு நடத்திக்கொண்டிருக்கும் பாடப்பகுதியில்?(டீலா நோ டீலா?)
எப்போது சமச்சீர் வகுப்பறை கிடைக்கும் எங்களுக்கு? எப்ப பாத்தாலும், நல்லா படிக்கிறங்களுக்கே "காவடி" தூக்கிட்டு, எங்களை "காவு" கொடுக்க பாக்குறீங்க... எங்களுக்கும் மனசுனு ஒண்ணு இருக்கு..
பட்டாம்பூச்சியை புடிச்சு, இறக்கைகளில் ஆணியடித்து, மனசுக்குள் ஈயத்தைக் காய்ச்சி ஊத்துறீங்களே நியாயமா? புத்தகத்தில் இருப்பதை வெறுமனே படித்து காட்டுவதற்கு எதுக்கு ஆசிரியர்? (அப்படியெனில், டீவியில் செய்தி வாசிப்பவர்கள் கூடத்தான் நல்லாசிரியர்கள்)
ஒண்ணு தெரிஞ்சுக்கோங்க... லட்சியதுக்காக ஓடுபவர்களை, வெறும் சம்பளத்திற்காக ஓடுபவர்கள் ஜெயித்துவிட முடியாது. லட்சியத்திற்காக பாடம் சொல்லித்தரும் சக ஆசிரியர்களை கிண்டலடிக்கிறீங்களே நியாயமா? (எப்படியாவது அவர்களை கவிழ்க்க வேண்டும் என்று திட்டமிடுவதில் காட்டும் புத்திசாலித்தனத்தை, எப்படி அவர்களை விட அதிகம் சாதிப்பது என்பதில் காட்டலாமே?)
காலங்காலமா இந்த சுள்ளான்னுக தொல்லை தாங்க முடியலையே
ஒரு இயந்திரத்தின், இதயத்தின் குறுக்கு வெட்டுத்தோற்றம் வரைந்து, பாகம் குறிக்கும் பக்குவம் கூட எங்கள் இதய உணர்வுகளை புரிந்து கொள்வதில் காட்டவில்லையே ஏன்? (படிப்பு என்பது வெறும் உடல் சம்பந்தப்பட்டது அல்லவே)
காலையில, முதல் பாட வகுப்பில் கூட.. மனசுல முதலமைச்சர் மாதிரி-னு நெனைச்சுக்கிட்டு, உட்கார்ந்தே பாடம் நடத்துறீங்களே அடுக்குமா? (முதலமைச்சர் கூட நின்னூட்டு தான் பேசுறாங்க... ஆட்சி மாறியிடுச்சு.. தெரியுமில்ல)
புரியவைப்பதை விட்டுவிட்டு, "மக்கப்" செய்வதை தூண்டுகிறீர்களே நியாயமா?(அது சரி... தனக்கு புரிஞ்சா தானே, அடுத்தவங்களுக்கு புரிய வைக்க...)
நாகரீகத்தைப் பற்றி வாய் கிழிய பேசுறீங்க... ஆனா ஸ்கூல் முடிஞ்ச உடனே புள்ளைங்களுக்கு முன்னாடி நீங்க தான் ஓடுறீங்க...(மனசுல ஸ்கூல் பர்ஸ்ட்-னு நினைப்பு...)
கடைசியா ஒரு கேள்வி....வீட்டிலாவது சிரிப்பீங்களா? இல்ல இதே மாதிரி டெரர்தானா?
டிஸ்கி:
இந்த பதிவிலுள்ள கேள்விகள் அர்த்தமற்றவைகள் என்று நீங்கள் நினைத்தால், உலகில் மிகச்சிறந்த கல்வியை அளிக்கும் ஆசிரியர்களை நாம் பெற்றிருக்கிறோம் என்று அர்த்தம். குருதேவோ பவ...
பஸ்கி:
"தில்" என்றால் ஹிந்தியில் அன்பு என்றார்கள். அன்பு இருந்தால் பதில் சொல்லுங்கள் என்பது தான் தலைப்புக்கான கோனார் உரை....எப்பூடி...
http://tamilsmsgalatta.blogspot.com
http://tamilsmsgalatta.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?