கடந்த 9ம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு நிகழ்வின்போது கனடியப் பிரதமர் ஸ்டீபன் கார்பர் அவர்கள் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சுதந்திரமான விசாரணை அவசியம் என்றும் இலங்கையில் ஜனநாயக உரிமைகள் மதிக்கப்பட்டு நம்பகத்தன்மை ஏற்படுத்தப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சுதந்திரமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்ற ஐக்கிய நாடுகள் சபையின் கோரிக்கைக்கும் கனடா தொடர்ந்து ஆதரவளிக்குமென்றும் கனடியப் பிரதமர் தெரிவித்துள்ளதுடன் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கனடா கலந்துகொள்ளப் போவதில்லையென்றும் ஏனைய பொதுநலவாய நாடுகளும் இவ்வாறான நிலைப்பாட்டையே மேற்கொள்வார்களென்று தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் கனடியத் தமிழர் தேசிய அவை புதிய ஜனநாயகக் கட்சியுடனும் (NDP) லிபரல் கட்சியுடனும் (Liberal) சந்திப்புக்களை மேற்கொண்டு இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றமீறல் மனிதவுரிமைமீறல் அரசியலுரிமைமீறல் போன்றவற்றுக்குத் தகுந்த ஆதரங்களை வழங்கி மேற்கொண்ட பல சந்திப்புக்களின் பயனாகப் புதிய ஜனநாயகக் கட்சியும் லிபரல் கட்சியும் ஆதரவாக அறிக்கையினை வெளியிட்டமைமை இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும். இதன் தொடர்ச்சியாகவே கனடிய அரசியல் கட்சிகள் இவ்வாறான நிலைப்பாட்டை எடுத்துள்ளன என்பது யாவரும் அறிந்ததே.
தொடர்ந்து கனடியத் தமிழர் தேசிய அவை கனடிய அனைத்துக் கட்சிப் பாரானுமன்ற உறுப்பினர்களுடனும் மனிதவுரிமை அமைப்புக்களுடனும் சந்திப்புக்களை மேற்கொண்டு கனடியப் பாராளுமன்றத்தினூடாக இலங்கைமீது சர்வதேசக் குற்றவியல் நீதி விசாரணை மேற்கொள்ளுவதற்கான ஆணையைப் பிறப்பிப்பதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகின்றது. தொடர்ந்து கனடியத் தமிழர் தேசிய அவை காத்திரமான இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ளுமெனத் தெரிவித்துக்கொள்கிறது.
கனடியப் பிரதமர் அவர்களின் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான இந்நிலைப்பாட்டுக்கு கனடியத் தமிழர் சார்பில் நன்றியைத் தெரிவிப்பதுடன் கனடிய அரசின் இந்நிலைப்பாட்டிற்கு என்றும் உறுதுணையாக இருக்குமென்றும் கனடியத் தமிழர் தேசிய அவை உறுதியளித்துக்கொள்கிறது.
கனடியத் தமிழர் தேசிய அவை (NCCT)
http://galattasms.blogspot.com
http://galattasms.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?