
எதிர்வரும் 19-09-2011 திங்கள் அன்று சுவிஸில் நடைபெறும் பொங்குதமிழ் நிகழ்வில் அனைவரும் கலந்து கொள்வோம்.
தாயகத்தில் தமிழர்களின் குரல் நசுக்கப்பட்ட காலத்தில் முளைவிட்ட விதையே பொங்குதமிழ். இன்று விருட்சமாகி வளர்ந்துவிட்ட போதும் தாயகத்தில் நிலவும் அடக்குமுறைக்குள் எமது உறவுகள் தமது நியாயமான அடிப்படைக் கோரிக்கைகளையே வெளியே சொல்ல முடியாமல் அடக்கப்படுகின்றார்கள்.
இந்நிலையில் எமது விடுதலைப் பயணத்திற்கு இக்காலப்பகுதியில் அவசியமான ஏழு அம்சக் கோரிக்கையை முன்வைத்து உலகளாவிய வகையில் ஐ.நா முன்றலில் பொங்குதமிழ் நிகழ்வு நடைபெறுகின்றது.
ஐ.நா வில் தற்போது நடைபெற்றுவரும் மனித உரிமை சார்ந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளும் மனித உரிமை அமைப்புக்களும் கலந்துகொள்ளும் இவ்வேளை ஈழ மக்களாகிய நாம் ஒருங்கிணைந்து உலக அரங்கின் மனச்சாட்சிகளை உலுக்கும் வகையில் பொங்கி எழுந்து ஓங்கிக் குரல் கொடுப்போம்.
எனவே பிரித்தானியா வாழ் தமிழ் உறவுகளும் உலகத் தமிழ் உறவுகளும் ஒன்றுபட்டு ஜெனீவா ஐ.நா முன்றலில் 'ஈகைப் பேரொளி முருகதாஸ் திடலில்' நடைபெறும் பொங்குதமிழ் நிகழ்வின் ஊடாக எமது நியாயத்தினை வெளிப்படுத்தி நீதி கேட்போம், ஒன்று திரண்டு உலகத் தமிழினமாக உரிமைக் குரல் கொடுப்போம்.
"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"
நன்றி
பிரித்தானியத் தமிழர் ஒன்றியம்
http://galattasms.blogspot.com
http://galattasms.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?