மங்காத்தாவா… மகிந்தாத்தாவா மன்மோகன் சிங் குழப்பம்..
போர்க்குற்ற விசாரணை கண்டிப்பாக நடாத்தப்பட வேண்டுமென பான் கி மூன் பிடிவாதமாகச் சொன்னதால் மகிந்த உறக்கமின்றி துடித்துக் கொண்டிருந்தார்.
இவ்வளவு காலமும் மகிந்தாஜி மகிந்தாஜி என்ற மன்மோகன் சிங் கொஞ்சநாளாக மங்காத்தாஜி, மங்காத்தாஜி என்றபடி தன்னைப் பார்த்து தலைப்பாகையை தடவுவதை நினைத்தால் சினமாக இருந்தது..
இதற்குள் யாரோ ஒரு கேடுகெட்ட புத்தபிக்கு வந்து 600 தமிழ் பெண்களின் முலைகளை விராண்டி இரத்தம் எடுத்துவிட்டு ஐ.நா போனால் போர்க்குற்றம் விலகுமென்று சொல்ல, கிறீஸ் மனிதனை அனுப்பி முலைகளை விராண்டியதுதான் மிச்சம்.. பிரச்சனை தீர்ந்தபாடில்லை..
அப்போதுதான் கெகலிய ரம்புக்கல ஒரு பெக்கை அடித்துவிட்டு திடீரென.." மங்காத்தா தமிழன் வைச்சிட்டான்ரா ஆப்பு..!" என்று கத்தினார்..
" மொக்கத கறண்ட… மங்காத்தா… மங்காத்தா… எதிங் சொல்லுறது.." மகிந்தவின் மண்டை சுழன்றது.. ஐ.நா போனபோது மன்மோகன் சிங்கும் மகிந்தா என்று சொல்லாமல் தன்னை மகிந்தாத்தா.. மகிந்தாத்தா. என்று பல தடவைகள் கூப்பிட்டதும் நினைவுக்கு வந்தது..
" அடோவ் கெகலி… மங்காத்தா அப்பிடீன்னா என்ன..? " கேட்டார்..
" மங்காத்தா அட அது தெமிழ் படம்.. த்ரிஷா ரெம்ப நல்லாருக்கு.." – இது கெகலிய
" திரிபோஷக்… போடா போ… திரிபோஷ சாப்பிட்டா நல்லாத்தானே இருக்கும் போடா.. போ.. " மகிந்தவுக்கு யுவால் ஏறியது..
" அட திரிபோஷ மாவு இல்லேங்க இத திரிஷா நம்ம நடிகை.. பியூட்டி.. உம்மா.."
" மங்காத்தாவுக்கும் – மகிந்தாத்தாவுக்கும் – சனல் 4க்கும் என்ன கொனக்சன் புரியல்லியே..? "
" ஐயோ.. என்ன பண்ணுறது.. சனல் 4 வீடியோவ மடக்காவிட்டால் போர்க் குற்றத்தில் இருந்து தப்ப முடியாதுன்னு நா அழுவுறேன் அதுக்குள்ள நீங்க மங்காத்தாவுக்கு போயிட்டீங்களே.." பீரீஸ் கோபமாக சொன்னார்.
" இல்லீங்க சனல் 4 ஐ உடைக்கிற ஐடியா மங்காத்தாவிலதான் இருக்கு.. " இது கெகலிய
" எப்பிடி…!? "
கெகலிய உடனடியாக காட்டிஸ்கில் இருந்த மங்காத்தாவை சுழலவிட்டார்…
படம் ஓடுகிறது.. மகிந்தவுக்கு அடி நுனி எதுவும் தெரியவில்லை… படமே ஒரு கோமாளிக்கூத்தாக இருந்தது.. படம் எடுத்தவன நிலத்தில போட்டு மிதிக்க வேணும் போல இருந்தது..
" என்ன எழவு படமையா இது..? "
" கொஞ்சம் பொறுங்க மாத்தயா.."
" படம் முடியப் போவுது.."
கிளைமாக்ஸ் வந்தது..
மகிந்த கண்களை கூர்மையாக்கிப் பார்த்தார்… வன்னியில் வெடிகுண்டு நிரப்பிய கட்டிடம் எரிந்தது போல இங்கும் ஒரு கட்டிடம் எரிகிறது.. அஜித் சுடப்படுகிறார்… அவர் கதை முடிந்துவிடுகிறது..
சப்பென்று போய்விட்டது மகிந்தவுக்கு..
" இதில என்னையா புதுமை இருக்கு..?"
" கொஞ்சம் பொறுங்க.." படம் மேலும் தொடர்ந்தது..
அஜித் தன்னிடமிருந்த மாலையை செத்துப்போன போலீஸ்காரனின் மீது வீசுகிறார்… தப்பிப்போகிறார்… அஜித் மரணம் ஒரு பொய் நாடகம்…
" அடேங்கப்பா…!"
" மங்காத்தா…இல்லே இது மகிந்தாத்தா..! மகிந்தாத்தா..!" என்று கதறுகிறார்.. மகிந்த..
சத்தம் கேட்டதும் கோப்பையில் கூழ் குடித்துக் கொண்டிருந்த கோத்தபாய ஓடிவந்து விசாரிக்கிறார்..
" என்ன ஐயே நடந்தது..? இந்த குதி குதிக்கிறது..?"
" அடேய் மல்லி மங்காத்தா கிளைமாக்ஸ் பாத்தியா.. றிவைன்ட்.. றிவைன்ட்.. ! " மறுபடி ஓடுகிறது.. கிளைமாக்ஸ்..
" பாத்தியா கொட்டி பிரபாகரன் ஐடன்டிக்காட்டை போட்டு ஒரு பாடியை வீசியிட்டு போனானே அதுபோலதானே அஜித்தும் பண்ணியிருக்காரு.."
" அன்ன தெய்யனே.. பாத்தீங்களா நம்ம சிங்கள மூளைக்கு இது தெரியாம போச்சுதானே.." இது மகிந்த..
" அப்பவே சொன்னனே.. தமிழன நம்பக்கூடாதுன்னு பிரபாகரன் தப்பிப்போனத மங்கத்தா படத்தால சொல்லியிருக்காங்களே.." இது கோத்தா..
" ஓகோ இப்பதானே புரியுது.. மன்மோகன் சிங் எதுக்கு என்ன மகிந்தாத்தாஜி என்னு கூப்பிட்டார்னு புரியுது புரியுது.."
கோத்தபாய துள்ளிக் குதித்தார்..
" கொட்டவுட..! " – இது கெகலிய ரம்புக்கல
" எல்லாரும் என்ன சொல்லுறது புரில்லே.. மகிந்தாத்தா… கோத்தபாயாத்தா… ரம்புக்கலவாத்தா… என்ன எழவுடா இது.." பீரீஸ் கேட்டார்.
" அடே உனக்கு எதுதான் புரிஞ்சுது..? இனி போர்க்குற்றம் பொய்யாப் போவுது.. சனல் 4 க்கு எதிரா ஐ.நாவில மங்காத்தாவ போட்டா சரி.."
" பிரபாகரன் தப்பியிட்டாரு நம்மமேல போர்க்குத்தம் வராது.. பலே பலே.." கோத்தா..
ரூபவாகினி அலறியது..
" பிரபாகரன் தப்பிப்போன கதை மங்காத்தா படம் மூலம் அம்பலமாகியிருக்கு.. என்று லங்காபுவத் தெரிவிக்கிறது.. ஆகவே ஐ.நாவில் மங்காத்தாவை விரைவில் திரையிட்டு சனல் -4 ற்கு பதிலடி கொடுக்க இருக்கிறது அரசு.." என்று கூறியது.
அதைப்பாத்த சோமவன்ச குளியாப்பிட்டி கொன்னகல தேரர் கூறும்போது, " மங்காத்தா என்றா சிங்காத்தா அவ சிங்கத்துக்கு பிறந்த சிங்காத்தா.." என்று ஒரு பஞ்ச் டயலாக் பேசினார்..
" அதுதான் அஜித் இமயமலைக்கு தப்பிப்போகப் போறார் போல.." இன்னொரு பஸ்னா லொட்ஜ் அறிவுஜீவி கருத்துக் கூறினார்.. " பிரபாகரனும் இமயமலையில் இருப்பதாக.." அருகில் இஸ்மாயில் காக்கா மித்திரனில் படித்து சொன்னார்.
மங்காத்தா கிளைமாக்ஸ் பிரபாகரன் கதையின் கிளைமாக்ஸ் என்று சொன்ன சோனாவுக்கு உதைக்க வெங்கட்பிரபு சரணை ஏவியதாக ஒரு சினிமா கிசுகிசு வெளியானது..
மங்காத்தா கதையை சரத் பொன்சேகா அமெரிக்காவில் ஒபாமாவுக்கு சொன்னதாக ஜே.வி.பி கூறியது..
மங்காத்தாவில் த்ரிஷாவின் கவர்ச்சிக் காட்சிகள் அதிகம் இருப்பதால் ஐ.நாவில் வீட்டோ பாவிக்க இடமில்லை என்பதை ஆய்வாளரான தமிழர் ஒருவர் உறுதி செய்தார்.
மங்காத்தா சிங்களத்தில் மகிந்தாத்தா என்ற பெயருடன் வெளியானது..
மங்காத்தாவுடன் பீரீஸ் உலக நாடுகளின் தலைவர்களைக் காணப் புறப்பட்டார்.. முதலில் சீனா போனார்..
" நாங்களும் மங்காத்தா பாத்தம் புரியல்ல ஆனா மகிந்த சிந்தனை எப்பிடி உண்மையை பிடிச்சிருக்கு.." கூலிக்குழு ஒன்றின் றேடியோ மகிந்தவை பாராட்டி அவருக்கு, " மகிந்தாத்தா " என்று பட்டமளித்தது..
சனல் 4க்கு எதிராக ஐ.நாவில் மங்காத்தா..
" சபாஸ் மங்கா…"
கற்பனைக் கதை முடிந்தது..
பெயர்கள் உட்பட யாவும் கற்பனை
எழுதியது : டைரக்டர் 27.09.2011
http://masaalastills.blogspot.com
http://masaalastills.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?