சமீபத்தில் அமெரிக்காவிற்கு மகிந்தர் செல்ல அங்கே அவருக்கு எதிராக தாம் வழக்கை தொடுத்துள்ளதாக நாடு கடந்த அரசு அறிவித்தது. இது ஒருபுறம் இருக்க இலங்கைக்கான ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதி சர்வேந்திரா சில்வாவுக்கு எதிராகவும் ஏக காலத்தில் பிறரால் வழக்குத் தொடரப்பட இரண்டு வழக்குகளையும் நாடு கடந்த அரசே தொடுத்ததாக அதன் ஊதுகுழல் இணையங்கள் செய்திகளை வெளியிட்டது.
இதனைத் தொடர்ந்து தமிழ் மக்களுக்கு உண்மை நிலை புரியவேண்டும் என்பதற்காக அதிர்வு இணையம் சர்வேந்திர சில்வாவுக்கு எதிராக வழக்கு தொடுத்த வழக்கறிஞரைத் தொடர்புகொண்டு உண்மையை வெளியிட்டது. இதற்கு எதிர்வினையாக உடனே நாடு கடந்த அரசின் அமைச்சர் தணிக்காச்சலம் தயாபரன் அவர்கள் GTVயில் நேற்றுத் தோன்றி குழப்பத்தை தெளிவுபடுத்துவதாகக் கூறி மக்களை மேலும் குழப்பிச் சென்றார். இதனைப் பலர் பார்த்திருக்க முடியும். இது ஒரு புறம் இருக்க 120 நாள் தவணை பற்றி இவர் வாய் திறக்கவே இல்லை.
என்னடா இந்த வழக்கு தொடர்பாக அதிர்வு தொடர்ந்து எழுதிவருகிறதே அதிர்வு இணையம் நாடு கடந்த அரசை சாடுகிறது என்று சிலர் நினைக்கலாம் இல்லை ஒரு விமரசனத்தை முன்வைக்கலாம். வழக்கு அதன் தன்மை அது செல்லுபடியாகுமா இல்லை வெறும் புஸ்வானமா என்பது எல்லாம் நன்கு அலசி ஆரயப்பட வேண்டிய விடையம். சட்டத்தில் இருக்கும் ஒட்டை அதனைப் பயன்படுத்தி சிங்களவன் எப்படித் தப்பித்துக்கொள்ளுவான் என்பது குறித்தும் நாம் அவதானமாக இருக்கவேண்டும் அல்லவா? அதுதான் நாம் இதனைச் சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது. சரி இனி இந்த 120 நாள் தவணை விடையத்துக்கு வருவோம்!
அதாவது அமெரிக்காவில் ஒருவருக்கு எதிராக பொலிசாரால் அல்லது அந் நாட்டு நீதித் துறையால் தொடுக்கப்படும் வழக்கு ஒருவிதம். மற்றும் ஒரு தனி நபர் மேல் மற்றுமொரு நபர் தொடுக்கும் வழக்கு மற்றுமொரு ரகம். அமெரிக்காவைப் பொறுத்தவரை யாரும் யார் மேலும் நஷ்ட ஈடு வழக்கைத் தொடுக்கலாம். அங்கே அது ஒரு காபி குடிப்பதற்குச் சமன். ஆனால் அவ்வாறு வழக்கு தொடுக்கும்போது நீதிமன்றால் கொடுக்கப்படும் அழைப்பாணை (வாரன்ட்) அவர்கள் சம்பந்தப்பட்ட நபரிடம் கொண்டுபோய் சேர்க்கவேண்டும். அதற்கு கால எல்லையாக 120 நாட்கள் இருக்கிறது. அந்த 120 நாட்களுக்குள் அந்தப் பிடியாணையை சமபந்தப்பட்டவரிடம் கொண்டுபோய் கொடுக்கவில்லை என்றால் அமெரிக்க சட்டப்படி அந்த வழக்கு செல்லுபடியற்றதாகலாம். இது தான் அமெரிக்க சட்டம்.
தற்போது மகிந்தருக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கிலும் இதே திரிசங்கு நிலை தான் காணப்படுகிறது. அவருக்கு மேல் வழக்கைப் போட்டுவிட்டோம் வழக்கைப் போட்டு விட்டோம் என்று கத்தி கூச்சல் மட்டும் போட்டு தமிழ் மக்களை பப்பா கொப்பில் ஏற்றுவதும் பின்னர் அது ஒரு புஸ்வானம் போலப் போவதும் இங்கே பல தடவை நடந்து விட்டது. இவ்வாறு பலர் காதில் எங்களுக்கு பூ சுத்தியும் உள்ளார்கள். முன்னரும் இதுபோல நாம் அதனைச் செய்தோம் இதனைச் செய்தோம் என்று எல்லாம் கூறி இறுதியில் ஒன்றுமே செய்யாத நிலை காணப்பட்டதை பல தமிழர்கள் அறிவார்கள். தெரிந்து வைத்திருக்கிறார்கள். எனவே வழக்கு தொடுப்பது முக்கியமல்ல. அதனை விட அதனை செய்தியாக வெளியில் கொண்டு வந்து பரபரப்பு தேடுவது முக்கியமல்ல பிடியாணையை எவ்வாறு மகிந்தரிடம் அல்லது அவர் சார்ந்த ஒருவரிடம் எவ்வாறு கொடுப்பது என்பது தான் தற்போது முக்கியம்.
அமெரிக்கா வந்த மகிந்தர் ஐ.நா கட்டிடத்தை விட்டு வெளியே வரவில்லை ! நியூ யோக் நகரில் அவரை நெருங்க முடியவில்லை! என்று கதைகளைக் கட்டிவிட்டதே இந்த GTV தான். இதனை எந்த அமெரிக்க அதிகாரி சொன்னார் என்று கேட்டால் GTV யால் சொல்லமுடியுமா? இல்லையே. ஒரு அதிகாரி தெரிவித்தார் என்று சொல்கிறார்கள் ஆனால் அந்த அதிகாரி யார்? அது ஒரு மாஜை அதிகாரியா அவரைப் பார்க்கவே முடியாதா! GTV க்கு தான் வெளிச்சம். எனவே திட்டமிட்டு கதைகளைக் கட்டவிழ்த்து விடுகிறது ஒரு கூட்டம். அமெரிக்காவில் மகிந்தர் ஒரு பெளத்த கோவிலுக்கு வர இருந்ததாகவும் ஆனால் அவர் அங்கே வரவில்லை என்றும் சொல்லப்படுகிறது. வந்தால் அழைப்பாணையை தாம் கொடுத்திருப்போம் என்கிறார்கள் நா.க அரசின் உறுப்பினர்கள். சரி இவ்வளவு பேசுபவர்கள் விமாநிலையத்தில் வைத்து கொடுத்திருக்கலாமே? இல்லை அவர் தங்கியிருந்த விடுதியை அறிந்து அங்கே வேலைபார்க்கும் ஒரு ஊழியர் மூலம் கொண்டு சென்று கொடுத்திருக்கலாமே. அழைப்பாணை என்பது என்ன வெடிகுண்டா? ஒரு பத்திரம் தானே.
இதனையே ஒருவர் கையில் சேர்க்க வக்கில்லை என்றால் தமிழீழம், தனியரசு , வெளிநாட்டமைச்சு என்று பேசுவது எல்லாவற்றிலும் அர்த்தமில்லை. பெறப்பட்ட அழைப்பாணையை இனி இலங்கைக்கு அனுப்பினாலோ இல்லை அலரி மாளிகைக்கு அனுப்பினாலோ அதனை அவர்கள் நிச்சயம் ஏற்றுக்கொள்ளப்போவது இல்லை. அதனை திருப்பி அனுப்புவார்கள் என்பது சிறுபிள்ளை கூட அறியும். இந் நிலையில் இவர்கள் அழைப்பணையை வைத்து என்ன செய்யப்போகிறார்கள்? 120 நாட்கள் கழிந்ததும் இச் செய்தி கூட சூடு தணிந்துவிடும் அல்லவா. இப்படியே காலத்தை ஓட்டவா எமது போராளிகள் களத்தில் வீர மரணம் அடைந்தார்கள் ? தேசிய தலைவரின் பாதையில் நாம் செல்கிறோம் என வாய் கிழியக் கத்துபவர்கள் தேசிய தலைவர் ஒரு விடையத்தை எவ்வாறு கையாள்வார் என்று கூடத் தெரிந்துவைத்திருக்கவில்லை என்பது தான் பெரு மனவருத்தத்துக்குரிய விடையமாக உள்ளது.
ஒரு தாக்குதலாக இருக்கலாம் இல்லை நகர்வாக இருக்கலாம் தேசிய தலைவர் அதனை தாரை தம்பட்டம் போட்டு ஊடகங்களுக்கு முதலில் சொல்லியா அதனைச் செய்வார்? இல்லை செய்திருக்கிறாரா? இல்லையே. தாக்குதல் வெற்றி என்றால் அவர் சொல்லவே தேவையில்லை எதிரியின் வாயில் இருந்தே செய்தி முதலில் கசிந்து ஊடகங்களில் வரும். அதுதான் உண்மையான வெற்றி. அதனை விடுத்து ஊடக அறிக்கை விடுவதும் நடக்கவிருப்பதனை ஆரூடம் சொல்வதும் ஒரு ஆரோக்கியமான அரசியல் நகர்வுக்கு எம்மை இட்டுச் செல்லப்போவது இல்லை. இதனை நாம் எப்போது புரிந்துகொள்கின்றோமோ அப்போதே எமது நகர்வுகள் பயனுள்ளதாக அமையும்.
பின் குறிப்பு: ரி.வி யில் தோன்றிய அமைச்சர் தயாபரன் அவர்கள் புட்போல்(உதைபந்தாட்டம்) பற்றியும் எப்படி எல்லோரும் சேர்ந்து "கோல்" அடிக்கவேண்டும் என்று கூறினார். இங்கே அவர் "கோல்" என்று கூறியது தமிழீழம் என்னும் "கோல்"(இலக்கு) ஆகும். (சும்மா கோல் என்றும் சிலர் நினைப்பார்கள்). ஒற்றுமையைப் பற்றிப் பேசும் இவரால் நாடு கடந்த அரசுக்குள் பிரிந்து நிற்க்கும் ஜனநாயக அணியினரை ஒற்றுமையாக்க முடியவில்லையே ? இதற்கு அவர் என்ன பதில் சொல்லப்போகிறார்?
அதிர்வு
http://masaalastills.blogspot.com
http://masaalastills.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?