ராஜீவ் காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
அவர்களது கருணை மனுவை ஜனாதிபதி தள்ளுபடி செய்ததால் எந்த நேரத்திலும் தூக்கு தண்டனையை நிறைவேற்றப்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்ததால் அவர்களது தண்டனை நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவரும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெயிலில் இருந்து வருவதால் அவர்களை விடுவிக்கக் கோரி போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
பேரறிவாளன் தனக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனை குறித்து ஒரு ஆங்கில புத்தகம் எழுதியுள்ளார். அதன் இந்தி மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு விழா நேற்று மும்பையில் நடந்தது.
பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் விழாவில் கலந்து கொண்டு நிருபர்களிடம் கூறியதாவது: எனது மகன் பேரறிவாளன் அப்பாவி. அவனுக்கும் ராஜீவ்காந்தி படுகொலைக்கும் எந்த தொடர்பும் கிடையாது.
அவனுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை அநீதியானது. பேரறிவாளன் ஜெயிலுக்கு சென்ற போது 19 வயது. இப்போது அவனுக்கு 40 வயதாகிறது. இந்த 21 ஆண்டுகளாக அவன் அப்பாவி என்பதை நிரூபிக்க நான் போராடி வருகிறேன்.
பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரின் கருணை மனுக்கள் 11 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது ஏன்? இத்தனை காலம் ஏன் தாமதம் செய்தார்கள்? இவர்களை விடுவிக்க சோனியா உதவ வேண்டும். மரண தண்டனைக்கு எதிராக அவர் குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
http://masaalastills.blogspot.com
http://masaalastills.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?