2ஜி ஸ்பெக்ட்ரத்துக்கு விலையை நிர்ணயிக்க அமைக்கப்பட்ட அமைச்சர் குழுவுக்கு, அந்த அதிகாரத்தைத் தர மறுத்து நெருக்கடி தந்த, முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறனால் தான் ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கே வித்திடப்பட்டது என்று பிரதமர் மன்மோகன் சிங் குற்றம் சாட்டினார்.
அமெரிக்காவிலிருந்து டெல்லி திரும்பும் வழியில் விமானத்தில் நிருபர்களிடம் பேசிய மன்மோகன் சிங், 2ஜி ஸ்பெக்ட்ரத்துக்கு விலையை நிர்ணயிக்க அமைச்சரவைக் குழு அமைக்கப்பட்டது. ஆனால், அந்தத் குழுவுக்கு தயாநிதி மாறன் எதிர்ப்புத் தெரிவித்தார்.
ஸ்பெரக்ட்ரம் விலை நிர்ணயம் என்பது தொலைத் தொடர்புத்துறையின் அடிப்படையான உரிமை என்றும், அதில் ஏராளமான தொழில்நுட்ப-பொருளாதார விஷயங்கள் அடங்கியுள்ளதால், அமைச்சரவைக் குழுவால் அதில் முடிவை எடுக்க முடியாது என்றும், அதை தொலைத் தொடர்புத் துறையால் தான் சிறப்பாக கையாள முடியும் என்றும் வாதிட்டார்.
ஒரு கட்டத்தில் அவரது வாதத்தை நானும் ஏற்றுக் கொண்டேன். ஸ்பெக்ட்ரம் விற்பனையில் தேவையில்லாத பிரச்சனைகள் வரக் கூடாது என்று நினைத்துத் தான் தயாநிதியின் கருத்தை ஒப்புக் கொண்டேன் என்றார்.
ஆனால், அமைச்சரவைக் குழுவின் தலையீடு இல்லாததால் பின்னர் தொலைத் தொடர்புத்துறை நினைத்தபடியெல்லாம் ஸ்பெக்ட்ரத்தை ஒதுக்கி பெரும் ஊழலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?