
தமிழீழம்
எமது அன்பிற்கும் பாசத்திற்குமுரிய தமிழீழ மக்களே!
தமிழீழ தனியரசு நிறுவும் வரை சகல வழிகளிலும் தொடர்ந்து போராடுவோம்
உயிர்த் தியாகத்திற்கு இலக்கணம் வகுத்து இலட்சியத் தீயில் ஆகுதியாகிய இலட்சியப் போராளி தியாக தீபம் திலீபன். அஞ்சாமையும், உயிர் துறப்பதற்கு தயங்காத திடசித்தமும் திலீபனின் சாதனைகள்.
மக்கள் புரட்சி வெடிக்கட்டும், சுதந்திர தமிழீழம் மலரட்டும் என்ற செய்தி எமது போராட்ட வரலாற்றை முன்னோக்கிச் செலுத்தியது, எங்கள் திலீபன் என்றும் மறையாச் சிரஞ்சீவி. திலீபன் தமிழும், தமிழீழ மண்ணும், தமிழினமும் வாழும் வரை எம்மோடு இருப்பான்.
அவன் தமிழினத்திற்காக வாழ்ந்தவன், அதே இனத்தின் விடுதலைக்காக, சுதந்திரமான வாழ்வுரி மைக்காக பன்னிரு நாள் நீர் ஆகாரம் இன்றித் வீரச்சாவை வரித்தவன். தியாக தீபம் திலீபன் உலகிற்கோர் உன்னதமான பாடம் நல்கிய பிறகு எம் கண் முன்னே மாவீரன் என்றாகி விட்டான். போர் வாழ்விலும் அவன் பதித்த அழியா முத்திரை என்றும் நிலைத்து நிற்கின்றது.
விடுதலை வரலாற்றில் முக்கிய கட்டத்தில் நிற்கும் ஈழத் தமிழீனம். திலீபன் நினைவுக்கும் வீரவரலாற்றிற்கும் நெஞ்சில் நினைவாலயம் எழுப்பி வணக்கம் செலுத்தும் கடமையுடன் வாழ்கின்றது. தனது வீரச்சாவில் தமிழீழ மக்கள் நலமுடன் வாழவேண்டும் என்று உறுதி பூண்ட திலீபன்; நினைவு சுமந்து நிக்கும் இன்றைய நாளில், நாம் அனைவரும் பொங்குதமிழராய் அணிதிரண்டு எமது விடுதலை இலட்சியத்தை வென்றெடுக்கவேண்டும்.
எமது விடுதலைப் போர் என்று தொடங்கியதோ அன்றே வீரமும் தியாகமும் கூடப் பிறந்து விட்டன. நெஞ்சுறுதியும், மறப்பண்பும், தளர்ச்சியில்லாத வீரமும் கொண்ட இலட்சியப் போராளி தியாக தீபம் லெப் கேணல் திலீபன் நினைவு நாளில் சுதந்திர தமிழீழ தனியரசு நிறுவும் வரை சகல வழிகளிலும் தொடர்ந்து போராடுவோமென உறுதியெடுத்து கொள்கின்றோம்.
நன்றி.
"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"
அனைத்துலகத் தொடர்பகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.

http://masaalastills.blogspot.com
http://masaalastills.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?