யாரோ புதியபதிவராம்.ஐடியா மணி என்று பெயர்.அவர் நல்லவராகத்தான் இருக்க வேண்டும்.இல்லாவிட்டால்என்னை ''நீங்க நல்லா இருக்கணும் சண்முகவேல் சார்" என்று சொல்வாரா? நிரூபன் என்னை தன் பதிவில்அறிமுகப்படுத்திய பதிவில் அவர் சொன்னது.ஆண்டாள் பாசுரங்களையெல்லாம் விமர்சித்துஒரு பதிவு எழுதி விட்டார்.வழக்கமாக பதிவுகளில் இம்மாதிரி பார்க்கும்போது நான்விமர்சிப்பதில்லை.இவர் நல்ல ஆளாச்சே! ஏதோ சகவாசதோஷம் என்று எதிர்பதிவு எழுதுவதாகசொல்லிவிட்டேன்.
கவர்ச்சி,ஆபாசம் என்று பதிவுலகில் காரசாரமாக தனக்குத் தெரிந்த்தைஎழுதி வருகிறார்கள்.ஆபாசம் என்றால் என்ன என்பது பற்றி முன்பே பதிவில் குறிப்பிட்டுவிட்டேன். வார்த்தைகளோ,படைப்போ,புகைப்படமோ அல்லது படக்காட்சியோ மனதில் பாலுணர்வைஏற்படுத்தினால் அது ஆபாசம்.
சினிமாக்களில் கற்பழிப்புகாட்சி இடம்பெறுவதுண்டு.பல திரைப்படங்களிலும் அதன் நோக்கம் ஆபாசம்தான்.சினிமாவைசிறந்த கலையாக கையாளும் இயக்குனர்கள் படங்களில் கற்பழிப்பு காட்சி இருக்கும்.ஆனால்அக்காட்சி பரிதாபத்தையும்,பாதிக்கப்படும் பெண்ணின் மீது பரிவையும் தூண்டுமே தவிரகிளர்ச்சியைத்தருவதில்லை.
ஆண்டாளின் பாசுரங்களும் அப்படித்தான்.படிப்பவர்களுக்கு கிளர்ச்சியைதூண்டாது,ஆண்டாள் பாசுரம் பக்தி இலக்கியம்.இலக்கியங்களில் வார்த்தைகளின் நோக்கம்வேறு.முன்பேகுறிப்பிட்ட்து போல இலக்கியம் என்ன உணர்வுகளை ஏற்படுத்துகிறது என்பதை வைத்து அதன்தகுதி தீர்மானிக்கப்படுகிறது.உலகின் சில திரைப்படங்களும்,நாவல்களும் ஆபாசம் என்று தடை செய்யப்பட்டு கலை,இலக்கியத்தகுதி காரணமாக தடை நீக்கப்பட்ட்துண்டு.
மணி எதற்காக ஆண்டாளைப் பற்றி விமர்சிக்கிறார்? ஏன் கில்மா பதிவுகளைபெண்களிடம் எதிர்பார்க்கிறார்? இந்த பதிவின் நோக்கமென்ன? இன்று கலாச்சார காவலர்களைவிமர்சிப்பவர்கள் யார்? அவர்களின் நோக்கமென்ன? பெண்களுக்கு சப்போர்ட் செய்து ஹீரோஆகலாம் என்று பார்க்கிறீர்களா என்பது ஏன்?
பெண்களுக்கு சப்போர்ட் செய்து எழுதி விட்டால் ஹீரோ ஆகிவிடலாம் என்பதுஉண்மையா? அப்படி யாராவது மணிரத்னம் பட்த்துக்கோ,தங்கர் பச்சான் பட்த்துக்கோ ஹீரோஆகி இருக்கிறார்களா? நான் பல பதிவுகளை அப்படி எழுதியதுண்டு.அடுத்த சிலபதிவுகளுக்கு ஹிட்ஸ் குறையுமே தவிர ஹீரோ மட்டும் ஆகவில்லை.ஆனாலும் எழுதுவதைதவிர்க்க முடியாது.அது பாரதியிடமிருந்து பெற்ற மதிப்பீடு!
கில்மா என்பது கவர்ச்சிப்பட்த்தை குறிக்கிறதா? அரைநிர்வாண பட்த்தைகுறிக்கிறதா? எனக்கு தெரியாது.கவர்ச்சி உணர்வுகளைத் தூண்டும் என்று பிரபல பதிவர் நிரூபன்சொல்கிறார்.அப்படியானால் ஆபாசம்தானே! ஆபாச பதிவுகள் என்ன நோக்கத்திற்காகபதிவுலகில் எழுதப்படுகிறது.ஆபாசத்தை எதிர்ப்பவர்கள் கலாச்சார காவலர்கள் என்றால்அதை தூக்கிப்பிடிப்பவர்கள் கலாச்சாரம் இல்லாத ஆட்களா?
ஆபாச சொற்களை எழுதுவதில்,வரைவதில்ஆர்வம் உள்ளவர்களை கோப்ரோலாலியா(Corprolalia) என்று சொல்வார்கள்.சில முற்றியமனநோய்களிலும்,முதிர்ச்சி அடையாதவர்களிடமும் இந்நிலை இருக்கும்.இவர்கள்ஆலோசனையும்,சிகிச்சையும் பெறவேண்டியவர்கள்.
பெண்கள் சிக்ஸ்பேக்கைவிரும்புகிறார்கள் என்று யார் சொன்னது? விரும்பினால்தானே அதைப்பற்றி எழுதமுடியும்?ஆண்களைப்போல பெண்கள் உடலைப்பார்ப்பதில்லை என்று பல்வேறு ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.தாமரைபட்த்தின் காட்சிக்குத் தகுந்தவாறு பாடல் எழுதலாம்.பதிவர்கள் அதை செய்யுங்கள்,இதை எழுதுங்கள் என்ற ஐடியாவை எதிர்பார்த்து காத்திருக்கிறார்களா? அவரவர்களுக்கு தெரிந்ததை எழுதுகிறார்கள்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?