சென்ற பதிவின் பின்னூட்டத்தில் பிரகாஷ் என்ற நண்பர், தி.மு.க ஒரு தப்பும் பண்ணல, அவர்களை வேண்டுமென்றே குறிவைத்து தாக்கி கொண்டிருக்கிறார்கள் என்ற குற்றசாட்டை வைத்துள்ளார், அவரது வாதத்தின் படியும் மற்றும் பல்வேறு கழக சொம்புதூக்கிகளின் வாதத்தின் படியும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டின் மூலம் அரசுக்கு 7000 கோடி லாபம் தான், அதனால் நட்டம் ஒன்றுமில்லை, ஆகவே தி.மு.க நிரபராதி மட்டுமல்ல மக்களுக்காக உழைத்த மகான்களை கொண்ட கழகம் அது.
காசுக்கு கூட்டத்தில் கத்துபவன் கூட இந்த அளவு குரல் கொடுக்க மாட்டான் என்றால் இவர்கள் எந்த அளவு மூளை சலவை செய்யப்பட்டவர்கள் என்பதை நண்பர்கள் அறிக!, 2ஜி ஊழல் ராசாவிலிருந்து ஆரம்பிக்கபட்டதல்ல, அது தயாநிதி மாறனில் இருந்து விசாரிக்கப்பட வேண்டும் என்பது பலரது வாதம், ஆனால் தயாநிதி மாறன் இந்தியாவின் தொலைதொடர்பு துறையை தூக்கி நிறுத்தியவர் போல் பேசி கொண்டிருக்கிறார்கள் நமது சொம்புதூக்கிகள்!
இந்தியா முழுவதும் பேச ஒரு ருபாய் என்ற திட்டத்தின் மூலம் மக்களின் கவனத்தை பெற்றவர் தயாநிதிமாறன், ஆனால் உண்மையென்ன?
அந்த திட்டத்தில் பயன்பெற நீங்கள் மாதம் 450 வாடகை கட்ட வேண்டும், இழப்பீட்டை விட அதிக அளவு லாபம் பார்த்து மக்களை ஏமாற்றியர் தான் இந்த ஹைடெக் ஏமாற்றுக்காரர், இந்தியாவை போன்ற பல நாடுகள் S.T.D முறையை ஒழித்து விட்டது, அதாவது வாசிங்டன்னில் இருந்து ஃப்லோரிடாவுக்கு பேசினாலும், கலிஃபோர்னியாவிலிருந்து நியூயார்க் பேசினாலும் அது உள்ளூர் அழைப்பு தான், இந்தியாவில் தான் பக்கத்துக்கு ஊருக்கு பேசினாலும் S.T.D. இதில் தயாநிதி மாறன் எதை அன்ப்ளக்(unplug) பண்ணினார் என தெரியவில்லை!?
அதிக பட்ச உச்சவரப்பு கட்டணம் பற்றி மட்டுமே TRAI பேசியிருக்கிறதே தவிர குறைந்த பட்ச கட்டணம் என்று எதையும் நிர்நயிக்கவில்லை!, அவர்கள் பத்து பைசாவுக்கும் கொடுக்கலாம், ஐந்து பைசாவுக்கும் கொடுக்கலாம், இரண்டு பைசாவுக்கும் கொடுக்கலாம், ஒரு பைசாவுக்கும் கொடுக்கலாம் ஏன், சும்மா கூட பேச அனுமதிக்கலாம், அது அவர்கள் லாபத்தை குறைத்து கொண்டு சந்தையை தன்வசம் ஆக்க செய்யும் யுக்தியே தவிர இதிலும் தயாநிதி மாறன் எதை அன்ப்ளக் பண்ணினார் என தெரியவில்லை.
சிவசங்கரனின் ஏர்செல் நிறுவனத்தை மலேசியா நிறுவனத்திடம் விற்க மிரட்டினார் என சிவசங்கரனே வாக்குமூலம் கொடுத்த பிறகும், சி.பி.ஜ தயாநிதிமாறனை சும்மா ஒப்புக்கு விசாரித்து கொண்டிருப்பது அதிகாரவர்க்கத்தின் பணம் எது வரை பாய்ந்துள்ளது என்பதை காட்டுகிறது, இங்கணம் இருக்க திரும்ப திரும்ப கழக கண்மணிகளால் தி.மு.க விற்கு எவ்வாறு சொம்பு தூக்க முடிகிறது என்று தான் தெரியவில்லை, ஊழலின் மொத்த உருவமான தி.மு.க மற்றும் காங்கிரஸை இன்னும் ஒரு கட்சியாக இந்தியாவில் வைத்து கொண்டிருப்பது இந்திய மக்களின் பொறுமைக்கு ஒரு சாட்சி என்பேன்!
இன்னும் முடியல!
என்னிடம் பத்து ருபாய் அடக்கமுள்ள பொருள் நாலைந்து இருக்கிறது, நான் ராசா என்ற படித்த அன்ப்ளக்கிடம் அதை விற்பதற்கான உரிமையை தருகிறேன், அது சந்தையில் பல நூறு மடங்கு அதிக விலைக்கு விற்கக்கூடியது, சான்று உலக சந்தையிலும் அந்த பொருள் விற்பனைக்கு உள்ளது, அப்பேற்பட்ட பொருளை அந்த ராசா பதினோறு ருபாய்க்கு விற்று, ஹைய்ய்ய்ய்ய்ய்யா உங்களுக்கு ஒரு ருபாய் லாபம் பெற்று தந்து விட்டேன் என தவ்வுகிறான்.
நீங்களே சொல்லுங்கள் ஐயா, இந்த வேலையை செய்ய எனக்கு எதற்கு அந்த படித்த அன்ப்ளக், என் கடைக்கு, அதை சார்ந்தவர்களுக்கு எவ்வளவு லாபம் பெற்று தர முடியுமோ அதை விட்டு விட்டு, நானும் லாபத்தில் விற்றேன் பார் என்று ஒரு விளக்கம், அதற்கு ஆமாம் சாமி போட்டு கொண்டு ஒரு கூட்டம்.
வெக்கமாயில்லை, ஒவ்வொரு மனிதனின் உழைப்பும் வியர்வையும் தான் இந்தியா, நீ வெளிநாட்டு வங்கியில் கோடி கோடியாய் சேர்க்க இப்படி ஊழலால் ஏமாற்றி கொண்டிருக்கிறாயே!, உன்னையெல்லாம் பெத்தாங்களா, இல்ல........................
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?