Thursday 29 September 2011

ஏலகிரியில் கல்லூரி இளசுகளின் குத்தாட்டம்.

 
 
ஏலகிரி வேலூர் மாவட்ட்த்தில் உள்ளசுற்றுலாத்தளம்.ஜோலார்பேட்டை ரயில் சந்திப்பிலிருந்து அருகாமையில்இருக்கிறது.வேலூரிலிருந்து பேருந்துகளும் உண்டு.திருப்பத்தூரிலிருந்தும்செல்ல்லாம்.இரைச்சல் இல்லாத அமைதியும்,இயற்கைக் காற்றும் வரப்பிரசாதம்.முன்னாள்முதல்வரும்,பா.ம.க தலைவரும் இந்த வருட்த்தில் ஓய்வெடுக்க வந்து பிரபலப்படுத்தினார்கள்.
கோடைகாலம்தான்சீஸன்.அப்போது தங்குவதற்கு இடம் கிடைப்பதே கஷ்டம்.சனி ஞாயிறுகளில் கொஞ்சம் கூட்டம்இருக்கும்.பெரிய ஹோட்டல்களை கட்டி வைத்திருக்கிறார்கள்.சில ஹோட்டல் முதலாளிகள்பணம் செய்ய ஏதேதோ செய்ய ஆரம்பித்திருப்பது நேற்று வெட்ட வெளிச்சம் ஆகியிருக்கிறது.
 
இளமையைப்பற்றித்தான் நமக்கு ஏற்கனவே தெரியுமே? அதுவும் இப்போது போதையுடன் குழுவாக (மாணவர்,மாணவிகள்எல்லாம்தான்) பார்ட்டி நட்த்துவது அதிகரித்திருக்கிறது.கல்லூரி என்று சொன்னேன்இல்லையா? இல்லை,பல்கலைக்கழகம்.சென்னையில் உள்ள ஒரு பல்கலைக்கழக மாணவ மாணவிகளும்வேலூரில் இருந்தும் குழு சேர்ந்திருக்கிறார்கள்.
ஏலகிரியில் உள்ளஹோட்டலில் போதையில் குத்தாட்டம் போட்டு கலாட்டா செய்தவர்களை கைது செய்திருக்கிறதுகாவல்துறை.மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு வளைத்து விட்டார்கள்.கஞ்சா,அபின்சப்ளை செய்த்தாக ஹோட்டலை சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.சேலத்தில்போதை மருந்து வைத்திருந்தவரை பிடித்தபோது அவர் சொன்னார்" கல்லூரி மாணவர்கள்தான் என்னுடைய கஸ்டமர்கள்.
 
இளமைதிக்குத்தெரியாத காட்டில் திணறிக்கொண்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது.கைதானகுழுக்கள் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்திலிருந்து வந்திருக்கிறார்கள்.எதிர்காலம்பற்றிய பயம் எதுவும் அவர்களுக்கு தேவைப்படவே இல்லை.படிப்பை விட்டு வெளியேறும்முன்பே வேலைக்கான நியமனம் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம்.ஆனால் மோசமான போதைமருந்துகளுக்கு அடிமையாகி வேலையை தக்க வைத்துக்கொண்டு மகிழ்ச்சியானவாழ்க்கையை வாழமுடியுமா?
இம்மாதிரிவிஷயங்களே ஏலகிரியில் அதிகம்.பெங்களூரிலிருந்து நிறைய இளைஞர்கள் குழுவாக சேர்ந்துவந்து விடுவார்கள்.நான் முதல்முறை போனபோது ஒரு ரிசார்ட்டில் தங்கியிருந்தேன்.பக்கத்துஅறையில் நான்கு இளைஞர்கள் நள்ளிரவைத் தாண்டியும் வெட்ட வெளியில் உட்கார்ந்துகுடித்துக்கொண்டு அரட்டையடித்துக் கொண்டிருந்தார்கள்.
 
இளைஞர்கள்மட்டும் வருவது போய் இப்போது இருபாலரும் கொண்டாட வருகிறார்கள். வசதி படைத்தோரின்பிள்ளைகள்தான் பெரும்பாலும்! மகிழ்ச்சி என்பதை என்னவென்றே தெரியாமல் மனம் போனபோக்கில் திரிய ஆரம்பித்து விட்டார்கள்.போதை வைத்தே பலரை பிடித்து விடுகிறார்கள்.
காவல்துறை கைதுசெய்யும் அளவுக்கு மானம் கப்பல் ஏறிய பின்பாவது பல்கலைக்கழகங்கள் யோசிப்பார்களா?எத்தனையோ அறிஞர்கள் அங்கே இருக்க முடியும்.புதிது புதிதாக எதையெதையோ கண்டு பிடிக்கிறார்கள்.வெளிநாட்டுபல்கலைக்கழகங்களுடன் ஒப்பந்தம் போடுகிறார்கள்.பழைய கேள்வியை திரும்பக்கேட்போம்.கல்வி என்பது வெறும் தொழில்நுட்பத்தை கற்றுத் தந்து வெளியே அனுப்பவதா?மாணவ மாணவிகளுக்கு நல்வழியை காட்டும்,மாண்பைக் கற்றுத்தரும் ஒருவழியை கண்டுபிடிக்கமுடியாதா? புதிய தலைமுறையினர் சிந்திக்க வேண்டிய விஷயம்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger