Home » Archives for October 2014
Friday, 31 October 2014
கத்தி வைரல் ஃபீவர்
கன்னியாகுமரி மாவட்டம் சிறப்பு பார்வை
தமிழ் நாட்டின் மொத்த ரப்பர் உற்பத்தியில் 95% கன்னியாகுமரி மாவட்டத்தில் உற்பத்தியாகிறது. காற்றாலைகளுக்கு மாவட்டத்தின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு உண்டு. ஆரல்வாய்மொழி பகுதியில் இவை அதிக அளவில் அமைக்கப்பட்டுள்ளன.
விவசாயம்
முக்கிய பயிர்வகைகள்
அரிசி - 400 ச.கி.மீ
தென்னை - 210 ச.கி.மீ
ரப்பர் - 194.78 ச.கி.மீ
மரவள்ளிக்கிழங்கு - 123.50 ச.கி.மீ
வாழை - 50 ச.கி.மீ
பருப்பு - 30 ச.கி.மீ
முந்திரி - 20 ச.கி.மீ
பனை - 16.31 ச.கி.மீ
மாம்பழம் - 17.70 ச.கி.மீ
புளி - 13.33 ச.கி.மீ
கமுகு - 9.80 ச.கி.மீ
பலா - 7.65 ச.கி.மீ
கிராம்பு - 5.18 ச.கி.மீ
கைவினைப் பொருட்கள் மற்றும் குடிசைத் தொழில்
குமரி மாவட்டம் கைவினைப் பொருட்களுக்கு பெயர் போன மாவட்டமாகும். குறிப்பாக தோல் நீக்கப்படாத தேங்காயில் செய்யப்படும் குரங்கு பொம்மைகள், தேங்காய் ஓடு மற்றும் மரத்தால் செய்யப்படும் கைவினைப் பொருட்கள் ஆகியன முக்கியமானவை. மேலும் சங்கினாலான கைவினைப்பொருட்களும் சிறப்பு வாய்ந்தவை. தமிழகத்தின் மொத்த கயிறு உற்பத்தியில் 28.4 சதவிகிதமும் பாய் உற்பத்தியில் 61.5 சதவிகிதமும் இம்மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது.
ரப்பர்
ரப்பர் உற்பத்தி இம்மாவட்டத்தின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. மாவாட்டத்தின் மேற்குப்பகுதியில் கேரள எல்லையை ஒட்டிய பகுதிகளில் இவை அதிகமாக காணப்படுகின்றன. மேலும், நேந்திரம் பழம்,செந்துளுவன், ரசகதளி, பாளயம்கொட்டான், துளுவம், மட்டி, உட்பட பல வகையான வாழைப்பழங்கள் இங்கு பயிரிடப்படுகின்றன. இவை மட்டுமல்லாமல், பலாப்பழம் (வரிக்கில மற்றும் கூளன்), மாம்பழம் (அல்போன்சா, பங்களோரா, நீலம், மற்றும் ஒட்டு) தேங்காய் ஆகியன இம்மாவட்டத்தின் விவசாய வளத்துக்கு பெருமை சேர்க்கின்றன. இவை தவிர ரோஜா, செவ்வந்தி, உட்பட பல மலர்களும் இங்கே பயிரிடப்படுகின்றன.
மீன் பிடிப்பு
கன்னியாகுமரி கடல் பகுதிகளில் 200 - க்கும் மேற்பட்ட இன மீன்கள் கிடைக்கின்றன.
மூவேந்தர்கள்தான் முக்குலத்தோர்
மூவேந்தர்கள்தான் போர்க்குடிகள் ஆவர்கள் இவர்களே முக்குலத்தோர். இவர்களில் திணை ரீதியாக வெட்சி,கரந்தை,தும்பை,வாகை,உழிஞை என பிரிவுகள் உண்டு.
இத்தினை ரீதியாகவே கள்ளர் மறவர் அகமுடையார் எனப்படுகின்றனர்,
வெட்சி மாலை சூடுபவர்களே வெட்சி ஆறலை கள்வர் எனப்பட்டனர். சங்க இலக்கியங்கள் மன்னர்களை வெட்சி சூடவே அழைக்கின்றன. "மறை முது முதல்வன் பின்னர் மேல 23 பொறையுள் பொதியிற் பொடும்பன் பிறர் நாட்டுக் கரந்தையும் பாழ்பட வெட்சி சூடுக விறல் வெய் யயோனே" என கள்ளர்களை கவரவே அழைக்கின்றன.
சோழ மன்னர்களின் கள்வர்களே இவர்கள் அன்டை நாட்டை கவர்தலே இவர்கள் குலத்தொழில். இராஜேந்திரசோழன் கங்கைகொண்டான், கடாரம் கொண்டான் என்ற பட்டக்களின் மூலம் எளிதில் தெரிந்து கொள்ளலாம், அன்டை நாட்டை கவர்ந்து கொண்டான் என்பதை இதன் பொருள்.
சில மூடர் வரலாற்றை மாற்ற நினைப்போர்கள் கள்ளர்களை திருடர் என்று தவறான ஒரு கருத்தை கூறி தமிழர்களின் உன்மையான வரலாற்றை தவறாக பேசி வரலாற்றை மறைக்கும் வேலையை செய்கின்றனர்.
உன்மை என்னவென்றால் சோழர்களும் கவர்தலே செய்தனர் அதுவே கள்ளர்கள்.
வாழ்க சோழர் புகழ்
வளர்க சோழ வம்சம்.
தேவர்களின் முதன்மையான போர்க்கருவி என்று இலக்கியங்களும் பிற குறிப்புகளும் தெரிவிக்கின்ற வளைதடி (வளரி)யே திகிரி என்று இப்பாடலில் குறிப்பிடுகிறது.
தேவர்கள் உபயோகிக்கும் ஆயுதமான வளரியை பற்றி சங்க இலக்கிய பாடல்கள் கூறுகின்றது.
வேறு எந்த இனத்தினரோ அல்லது வேறு மாநிலத்தாரோ பயன்படுத்தியதற்கான ஆதாரம் கிடையாது ஆனால் ஆங்கிலேயர் காலத்தில் வளரியை கள்ளரும்,மறவர்களும் அகமுடையரும் பயன்படுத்தியதாக ஆங்கிலயேயரின் ஆவணங்கள் கூறுகின்றது. "
முக்குலமே சோழ நாட்டில் சங்கமிப்போம்
Tuesday, 28 October 2014
ராஜபக்சேவுக்குப் பாரத ரத்னா விருது வழங்க மோடி அரசு தயார் - சுப்பிரமணியன் சாமி
தமிழர்களை துச்சமாக நினைக்கும் மோடி அரசு ....
அநாகரிக தர்மபாலாவின் 150வது பிறந்தநாளையொட்டி இந்திய அரசு தபால் தலை வெளியிட்டுள்ளது. யார் இந்த அநாகரிக தர்மபாலா?
இலங்கை பௌத்த துறவியான அநாகரிக தர்மாபாலாவுக்கு இரண்டு முகங்கள் உண்டு.
இலங்கையில் காலூன்றிய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்தவர். பௌத்தத்தை நவீனச் சிந்தனைகள் வழியாகப் பரப்பியவர். சிங்களர்களின் மூடநம்பிக்கைகளை எதிர்த்த சீர்திருத்தவாதி. தமிழகத்தில் அயோத்திதாசர் போன்ற சிந்தனையாளர்களுடன் இணைந்து செயல்பட்டவர்.
தர்மபாலாவுக்கு இருக்கும் இன்னொரு மோசமான முகம் அவர் இனவெறியர் என்பது. ஹிட்லரின் வழியில் 'சிங்களர்கள் ஆரியர்கள். அவர்களே இலங்கையை ஆளப்பிறந்தவர்கள்' என்றார்.
தமிழர்களும், முஸ்லீம்களும் இரண்டாந்தரக் குடிமக்களாகத்தான் நடத்தப்பட வேண்டும் என்ற விஷ எண்ணத்தை விதைத்ததில் அநாரிக தர்மபாலாவுக்கு முக்கியமான இடம் உண்டு. இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் குறித்து பல மோசமான நச்சுக்கருத்துக்களைச் சொன்னவர். இலங்கையில் சிங்களம்தான் ஆட்சி மொழி, சிங்களர்களுக்குத் தமிழர்கள் அடிமைகளாக இருக்க வேண்டும் என்று முன்னெடுக்கப்பட்ட சிங்கள பௌத்தப் பேரினவாதத்துக்கு அநாகரிக தர்மபாலாவும் ஒரு முன்னோடி.
தமிழர்கள் மீதான இனப்படுகொலையை அடுத்து முஸ்லீம்கள் மீதான தாக்குதல்களும், அவர்கள் வழிபாட்டு தலங்கள் மீதான வன்முறைகளும் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. இதை மேற்கொண்டுவரும் சிங்கள இனவாத அமைப்பான பொதுபல சேனா, அநாகரிக தர்மபாலாவைத்தான் தங்கள் முன்னோடியாக முன்னிறுத்துகிறார்கள்.
"இலங்கை அனைத்து மதத்தினருக்கும் சொந்தமானது என்ற கொள்கையை எதிர்க்க வேண்டும். அப்படிச் செயல்பட வேண்டுமானால் அனைத்து சிங்களர்களும் அநாகரிக தர்மபாலா போல ஆக வேண்டும்" என்று பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் வண.கலபொடே அத்தே ஞானசேர தேரர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
'இலங்கை அரசின் இனப் படுகொலைகளை விசாரிக்க வேண்டும். ராஜபக்சே போர்க்குற்றவாளியாக நிறுத்தப்பட வேண்டும்' என்ற கோரிக்கைகளைத் தமிழர்கள் முன்வைத்துக்கொண்டிருக்கும் நேரத்தில் மோடி தலைமையிலான அரசு, சிங்களப் பேரினவாதக் கருத்தாக்கத்துக்கு வலுசேர்த்த அநாகரிக தர்மபாலாவுக்கு ஏன் தபால் தலை வெளியிட வேண்டும்?
சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் 'காங்கிரஸும், தி.மு.க.வும் தமிழின விரோதக் கட்சிகள். மோடி ஆட்சிக்கு வந்தால் ஈழத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்கும். தமிழக மீனவர்கள் பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும்' என்று பரப்புரை செய்யப்பட்டது. ஆனால், மோடி ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் ஈழப்பிரச்னையில் என்ன முன்னேற்றம் நடந்துள்ளது? காங்கிரஸ் ஐந்து ஆண்டுகளில் தமிழர்களுக்கு எதிராகச் செய்தவற்றை மோடி அரசு கணிசமான நாட்களில் செய்துள்ளது. மோடியின் பதவியேற்பு விழாவுக்கு ராஜபக்சே அழைக்கப்பட்டார்.
இலங்கையில் நடைபெற்ற ராணுவக் கருத்தரங்கில் பா.ஜ.க. சார்பாக சுப்பிரமணியன் சுவாமி பங்கேற்றார். தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு இதுவரை மோடி அரசு உருப்படியாக எந்தத் துரும்பையும் கிள்ளிப்போடவில்லை. இரண்டுமுறை ராஜபக்சே தன்னிச்சையாக மீனவர்களை விடுவித்தாரே தவிர, இந்திய அரசின் சார்பில் எந்தக் கடுமையான கண்டனமும் தெரிவிக்கப்படவில்லை.
போர்க்குற்ற விசாரணைக்காக வந்த ஐ.நா. குழுவுக்கு விசா வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டது. 'கச்சத்தீவு விவகாரம் முடிந்துபோன விஷயம்' என்று நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது மத்திய அரசு. இப்படி கொஞ்சமும் இம்மி பிசகாமல் காங்கிரஸ் பாதையிலேயே நடை போடுகிறது மோடி அரசு. அதன் அடுத்த கட்டமாக அநாகரிக தர்மபாலாவுக்குத் தபால் தலை வெளியிட்டுள்ளது மோடி அரசு.
தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு எதிர் அணியான தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களைவிட மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளைக் கண்டித்து கடுமையான அறிக்கைகளை வைகோ வெளியிடுகிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த வைகோவும் ராமதாஸும் தங்கள் கண்டனங்களை அறிக்கைகளாகப் பதிவு செய்யத் தவறுவதில்லை. அதுவும் வைகோ 'வரலாறு மன்னிக்காது' போன்ற கடுமையான வாசகங்களை அறிக்கைகளில் பயன்படுத்தவும் தவறுவதில்லை. ஆனால், அறிக்கைகள் விடுவதைத் தாண்டி, கங்கிரஸ் அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தியதைப்போல மோடி அரசை எதிர்த்து தீவிரமாகப் போராடுவதில்லை.
தமிழக பாரதிய ஜனதா கட்சிக்காரர்களோ ஆட்சி நாற்காலிக் கனவில் அவ்வப்போது இலங்கைப் பிரச்னை குறித்துப் பேசுகிறார்கள். ஆனால், அவர்களின் கனவை, துவைத்து துவம்சம் செய்கிறார் சுப்பிரமணியன் சாமி. 'தமிழக மீனவர்களின் படகுகளை நான்தான் பிடித்துவைத்துக்கொள்ளச் சொன்னேன்', 'ராஜபக்சேவுக்குப் பாரத ரத்னா விருது தர வேண்டும்' என்றெல்லாம் சுப்பிரமணியன் சுவாமி தெரிவிக்கும் கருத்துகள் அதிர்ச்சியின் உச்சம்.
ஆனால், தேசிய பா.ஜ.க., குறிப்பாக மோடி இதுகுறித்து எந்தக் கருத்தையும் தெரிவிப்பதில்லை. காங்கிரஸ் மத்தியில் ஆண்டபோது ராமேஸ்வரத்தில் கடல் தாமரை போராட்டம் நடத்தினார் சுஷ்மா ஸ்வராஜ். நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது 'மோடி தலைமையில் ஆட்சி அமைந்ததும் மீனவர்களுக்கு என்று தனியாக அமைச்சகம் உருவாக்கப்படும்' என்றார். ஆனால் அப்படி எதுவும் உருவாக்கப்படவில்லை.
கங்கை நதியைச் சுத்தப்படுத்துவதற்காக அமைச்சகத்தை உருவாக்கி, உமாபாரதியை அமைச்சராக நியமித்த மோடி அரசு, மீனவர்களுக்கு என்று தனியாக அமைச்சகம் உருவாக்கவில்லை. இதிலிருந்தே மோடி அரசு எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம். மோடியோ நாடாளுமன்றத்தில் பேசுவதில்லையே தவிர, பள்ளி மாணவர்களிடம் சிறப்புரை ஆற்றுகிறார். மங்கள்யான் விஞ்ஞானிகளிடம் சிறப்புரை ஆற்றுகிறார். ஹரியானா, மகாராஷ்டிரா தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் சிறப்புரை ஆற்றுகிறார். ஆனால் ஈழத்தமிழர் பிரச்னை பற்றியோ, சுப்பிரமணியன் சுவாமி கருத்துகள் பற்றியோ பேசுவதேயில்லை.
தமிழ்நாட்டைச் சேர்ந்த கமல்ஹாசனுக்குத் தூய்மை இயக்கத்துக்கு அழைப்பு விடுக்கும் மோடி, ஈழத்தமிழர்கள் பிரச்னை குறித்து ஒரு வார்த்தையும் வாய் திறந்து சொல்வதில்லை. யார் கண்டது, அநாகரிக தர்மபாலாவுக்குத் தபால்தலை வெளியிட்ட மோடி அரசு, அடுத்து சுப்பிரமணியன் சுவாமி சொன்னதுபோல ராஜபக்சேவுக்கும் பாரத ரத்னா விருது தரலாம். கூடவே ஜெயவர்த்தனேவுக்கும்கூட பாரத ரத்னா விருது தரலாம். அப்போதும் வைகோ 'வரலாறு மன்னிக்காது' என்று அறிக்கை விட்டு விட்டு, உ.பி.யிலோ, ம.பி.யிலோ அதே பா.ஜ.க.வை ஆதரித்து தேர்தல் பிரசாரத்துக்கும் போகலாம்!
முதன்முறையாக ஜன்னல் இல்லாத விமானம் World First Airplane without Window
Friday, 24 October 2014
மறைக்கப்படும் மருது பாண்டியர்
மறைக்கப்படும் தமிழர் வரலாறு மருது பாண்டியர் ஓர் அறிமுகம்
– கதிர் நிலவன்
1857ஆம் ஆண்டு மங்கள் பாண்டே என்பவரால் தொடங்கப்பட்ட பிரித்தானிய வல்லாதிக்க எதிர்ப்புப் போர் தான் " முதல் இந்திய விடுதலைப் போர்" என்று தில்லி அரசு தமிழர்கள் மீது திணித்து வருகிறது. இந்து – இசுலாமிய மதச் சாயலோடு வெளிப்பட்ட இந்தப் போரில் பல்வேறு பகுதிகளின் கூட்டு ஒருங்கிணைவோ, அடித்தட்டு மக்களின் பங்களிப்போ இருந்ததில்லை. தொடக்கத்தில் புரட்சிக்கான எல்லாக் கூறுகளையும் கொண்டிருந்த போதிலும், இறுதியில் குறுகிய மதவாதச் சேற்றில் மூழ்கி தோற்றுப் போனது.
ஆனால் தென்னிந்தியாவில் இந்தப் போருக்கு முன்னர் நடத்தப்பட்ட பல்வேறு பிரித்தானிய எதிர்ப்புப் போர்கள் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டது. சாதி, மத, மொழிகளைக் கடந்து பூலித்தேவன், கட்டபொம்மன், ஹைதர் அலி, திப்புசுல்தான், மருது பாண்டியர்கள், தீரன் சின்னமலை ஆகியோர் போராடி வந்துள்ளனர்.
குறிப்பாக, மருது பாண்டியர்கள் நடத்திய போராட்டம் தென்னிந்தியாவில் நடந்த விடுதலைப் போரில் முதன்மையானதும், திருப்புமுனையும் கொண்டதாகும். மருது பாண்டியர் தளபதியாகவும் ஆட்சிப் பொறுப்பிலும் இருந்த ஆண்டுகள் 1780 முதல் 1801 வரை.
இந்திய வரலாற்று ஆய்வாளர்கள் வடதிசையின் மீது மனச்சாய்வு கொண்டவர்களாக இருப்பதால், இந்திய விடுதலை வரலாற்றை தென்திசையிலிருந்து தொடங்குவதில்லை. இந்திய விடுதலை வரலாற்றை காலவரிசைப்படியும் எழுத மறுக்கின்றனர். ஆங்கிலேயர்கள் தென்பகுதியில் தான் காலடிவைத்து தங்கள் ஆதிக்கத்தை முதன் முதலாக நிறுவினர். அதன்பிறகே வடபுலம் நோக்கி நகர்ந்து, விரிந்த வணிகச் சந்தையை உருவாக்கினர்.
ஆங்கிலேயர்கள் தென் மண்ணில் நிலைபெற்று ஆதிக்கம் செலுத்தியபோது பல்வேறு சிற்றரசுகள் (பாளையப்பட்டுகள்) வரி வசூலிக்கும் முகவாண்மையாக செயல்பட்டன. பின்பு வரிவசூலிக்கும் உரிமையை தானே எடுத்துக் கொண்டு சிற்றரசுகளின் அதிகாரத்தை ஆங்கிலேயர் பறித்துக் கொண்டனர். அப்போது தான் சிற்றரசுகள் சில விழித்துக் கொண்டு பொது எதிரில் எனும் அடிப்படையில் ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து ஒன்றுபடுகின்றன. இந்த ஒன்றுபடுத்துதல் முயற்சிக்கு முதலில் அடித்தளமிட்டவர்கள் பெரிய மருது, சிறிய மருது என்று அழைக்கப்படும் மருது பாண்டியர்கள் ஆவார்கள்.
தூந்தாஜி வாக் (வட கன்னடம்), கேரள வர்மா (மலபார்) தீரன் சின்னமலை (கோவை) கோபால நாயக்கர் (திண்டுக்கல்) கிருஷ்ணப்ப நாயக்கர் (மைசூர்) ஊமைத்துரை (நெல்லை) மயிலப்பன், முத்துக்கருப்பர் (இராமநாதபுரம்) ஞானமுத்து (தஞ்சை) ஆகியோரோடு இணைந்து தென் பகுதி கூட்டமைப்பை முதன் முதலில் உருவாக்கி, ஆங்கிலேயப் படையினரை நிலைகுலையச் செய்த பெருமை மருது பாண்டியர்களையேச் சாரும்.
சின்னமருது வெளியிட்ட 'ஜம்புத்தீவுப் பிரகடன' அறிக்கைக்கு இணையாக வடநாட்டில் எந்த மன்னனும் வெளியிட்டதில்லை. அதில், "ஐரோப்பிய ஈனர்களுக்கு தொண்டு செய்பவனுக்கு மோட்சம் கிடையாது. அவன் வைத்திருக்கும் மீசை எனது அடிமயிருக்குச் சமம். அவன் பெற்ற பிள்ளைகள் தன் மனைவியை ஐரோப்பிய ஈனப் பிறவிக்கு கூட்டிக் கொடுத்துப் பெற்ற பிள்ளைகள். ஐரோப்பியக் குருதி ஓடாத அனைவரும் ஒன்று சேருங்கள்" என்ரு அறைகூவல் விடப்பட்டது.
ஜம்புத்தீவு (நாவலந்தீவு என்பது தமிழ்ப்பெயர்) புரட்சிப் பிரகடன அறிக்கை திருச்சி மலைக்கோட்டையிலும், திருவரங்கத்திலும் ஒட்டப்பட்டது. இதைப் படித்து ஆத்திரமுற்ற ஆங்கிலேய அரசு மருது பாண்டியர்களின் உற்றார், உறவினர், மகன்கள், பேரன்கள் ஆகியோரை சிறைபிடித்து தூக்கிலிட ஆணை பிறப்பித்தது.
மருது பாண்டியர்களும், ஏனையோரும் தூக்கிலிடப்படுவதற்கு முன்பு நடந்த நிகழ்வுகளை கோர்லே (Gourley) எனும் ஸ்காட்லாந்துக்காரர் ஒரு இராணுவ அதிகாரி தன்னிடம் தெரிவித்ததாகக் கூறுகிறார்; "மருதுவின் அறிக்கை கீழ்த்தரமான பழிவாங்கும் எண்ணத்தை உசுப்பிவிட்டது. இதன் காரணமாகவே அவரது சீமைக்குத் தீவைத்து அழிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவரது குடும்பத்தில் இருந்த ஆண், பெண் அனைவரையும் கைது செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது. பிடிபட்ட அனைவரையும் இராணுவ விசாரணை எதுவுமின்றி தூக்கிலிட ஆணை தரப்பட்டது. இந்த ஆணைகள் சிறிதுகூட மாற்றமின்றி, காலதாமதமின்றி நிறைவேற்றப்பட்டன." மருது இராணுவ மன்றத்திடம் "தனக்கு தயை ஏதும் காட்ட வேண்டாம்" என்று சொன்னார். "நான் என் நாட்டைக் காப்பாற்றுவதற்காகப் போரிட்டு தோற்கடிக்கப்பட்டுள்ளேன். என்னுடைய உயிரைப் பறிக்க உங்களுக்கு உரிமை இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். நான் அது பற்றி ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. ஆனால் இந்தச் சிறுவர்கள்? இவர்கள் என்ன தவறு செய்தனர்? இவர்கள் உங்களுக்கு எதிராக ஆயுதம் எடுத்தார்கள? இவர்களைப் பாருங்கள்! இவர்களால் ஆயுதம் எடுக்க முடியுமா?"
(கோர்லே எழுதிய நூலின் பெயர் Mahradu – An Indian Story Of The Beginning Of The Ninteenth Century – 1813, London) மேற்கண்ட மருதுவின் இறுதி உரையினை படிப்பவருக்கு அண்மையில் நடந்த முள்ளிவாய்க்கால் போர்தான் நினைவுக்கு வரும். அதில் குழந்தைகள், பெண்கள், வயது முதிர்ந்தோர் என்று வேறுபாடின்றி கொடுங்கோலன் இராசபக்சே அரசால் கொன்று குவிக்கப்பட்டதையும் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனது குடும்பம் பூண்டோடு அழிக்கப்பட்டதையும் நெஞ்சில் ஈரங்கொண்டோரால் எப்படி மறக்க முடியும்?
ஆயுதமென்றால் என்னவென்று தெரியாத பச்சிளம் பாலகன் பாலச்சந்திரனை, கொல்ல உங்களுக்கு மனம் எப்படி வந்தது? என்று நாம் சிங்கள ஆட்சியாளர்களிடம் கேள்வி கேட்பதைப் போலத்தான் அன்றைக்கு இராணுவத்திடம் பிடிபட்ட மருதுவும் கேட்டுள்ளார்.
24.10.1801இல் மருது பாண்டியர்கள் உள்ளிட்ட அனைவரையும் தூக்கிலிட்டப் பிறகும் ஆங்கிலேய அரசின் பழிவாங்கும் இரத்தவெறி அடங்கவில்லை.
மருதுவின் எஞ்சிய வாரிசாகிய 15 வயதுடைய துரைச்சாமி உள்பட 73 பேரை மலேசியாவின் பினாங்கு தீவிற்கு (Prince of Wales Island) 11.02.1802இல் நாடு கடத்த உத்தரவிட்டது.
1818இல் பினாங்கு சென்ற இராணுவத் தளபதி வெல்ஷ் என்பவர் துரைச்சாமியை பார்த்துள்ளார். அதுகுறித்து 'எனது நினைவுகள்' நூலில் பின்வருமாறு கூறுகிறார் "உடல்நலம் குன்றிய தோற்றத்தோடு துரைச்சாமியை காண நேரிட்டது. இதைப் பார்த்த பொழுதில் என் இதயத்தில் கத்தி சொருகியதைப் போல உணர்ந்தேன்."
சிவகங்கையை ஆண்ட மருது பாண்டியர்கள் அரசப் பரம்பரையினர் அல்லர். சிவகங்கையை சேதுபதி மன்னர் வழியாக ஆட்சி செய்தவர்கள் முத்து வடுகநாதரும், அவரது மனைவி வேலு நாச்சியாருமே. ஆண் வாரிசு இல்லாத காரணத்தால் வேலு நாச்சியார் விருப்பத்தின் பேரில் படைத் தளபதிகளாக பொறுப்பு வகித்த மருது பாண்டியர்கள் வசம் ஆட்சி நிர்வாகம் ஒப்படைக்கப்படுகிறது.
1800ஆம் ஆண்டுகளில் விவசாயிகளை கொடுமைப்படுத்திய மன்னர்கள் நிறையவே உண்டு. இதற்கு விதிவிலக்காக மருது பாண்டிய மன்னர்கள் விளங்கினர். மருது பாண்டியர்களின் அரசு, மக்கள் அரசாக – குறிப்பாக விவசாயிகள் விரும்பிய அரசாக விளங்கியது. அதற்குக் காரணம் அவர்கள் விவசாயிகளுக்கு பல அரசு உதவிகளை (சலுகையாகவோ, மானியமாகவோ) வழங்கிடும் நிர்வாக சீர்திருத்தங்களைச் செய்தனர். அடித்தள மக்களின் ஆதரவாளர்களாக மருது பாண்டியர்கள் விளங்கியதை வெளிப்படுத்தும் சான்றாக பேரா. கதிர்வேலின் "History of Maravas" நூலில் நரிக்குடி சத்திரச் செப்பேட்டில் காணப்படும் செய்தியை தந்துள்ளார்.
விவசயிகளின் நல்லெண்ணத்தை அவர்கள் ஈட்டியிருந்ததால்தான் புரட்சி இயக்கம் மூலம். அவர்கள் விடுதலைப் போரை நடத்தியபோது சிவகங்கை சீமைக்கு வெளியிலும் விவசாயிகளின் ஆதரவு பெருகியது. மருதிருவர் படை தஞ்சை நோக்கிச் சென்றபோது அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் அவர்களுடன் இணைந்து கொண்டனர் என மார்க்சிய அறிஞர் கோ. கேசவன் அவர்கள் "சமூகமும் கதைப் பாடலும்" என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
மருது பாண்டியர்களின் மாண்பினை உயர்த்தும் வரலாற்றுச் சான்றுகள் எண்ணிலடங்கா. பல சான்றாவணங்களை எடுத்துக் கூறியும்கூட, தில்லி அரசின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கக்கூடிய இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் குழு (ICHR)வானது, மருது பாண்டியர்களின் வீரஞ்செறிந்த விடுதலைப் போரை முதல் சுதந்திரப் போராக ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. இது தமிழினத்தின் மீதான பகையுணர்ச்சியை வெளிப்படுத்தும் செயலாகும்.
'தென்னாட்டுக் கிளர்ச்சிகள்' (South Indian Rebellion – The First war of Independence 1800 - 1801) எனும் நூலின் மூலமாக அதன் ஆசிரியர் இரா. ஐயப்பன் முதல் சுதந்திரப் போராக இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் குழு (ICHR) மருது பாண்டியர் நடத்திய போரை அறிவிக்க வேண்டுமென்று வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருவதும் குறிப்பிடத்தக்கது.
"வட இந்தியத் தலைவர்கள் வான்புகழ் பெறுகின்றனர். தமிழ்நாட்டுத் தலைவர்கள் ஏற்ற அறிவும், ஆற்றலும் பெற்றிருந்தும் அவ்வாறு உயர்ந்து விளங்குதல் அரிதாக உள்ளது. காரணம் தமிழர் தம்மவர்களின் சிறப்புகளை உணராமையும், உணர்ந்தாலும் போற்றாமையும் ஆகும்" என்று பேரா. ந. சஞ்சீவி எழுதிய "மானம் காத்த மருது பாண்டியர்கள்" நூலின் அணிந்துரையில் மு.வரதராசனார் குறிப்பிடுவார்.
மு.வ.வின் கூற்று முற்றிலும் உண்மைதானே? தமிழர்களே! நம் வரலாற்றை உணரப் போவது எப்போது?
இக்கட்டுரை,தமிழ்த் தேசியப் பேரியக்க கொள்கை இதழான தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2014 அக்டோபர் 16-31இதழில் வெளிவந்தது.
Tuesday, 21 October 2014
விடுதலை நாளிதழ் உள்ளத்தால் உயர்ந்த கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிதி..
விடுதலை நாளிதழ் உள்ளத்தால் உயர்ந்த கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிதி..........
இந்தியாவில் கிரிக்கெட் விளையாடி கோடி கோடியாக சம்பாதித்தவர்கள் எல்லாம் ஹோட்டல், மற்றும் பெரிய நிறுவனங்களைத் தொடங்கி தங்களின் தொழிலை மட்டுமே வளமாக்கிக் கொண்டார்கள். தனக்காக கைதட்டிய ரசிகனை பற்றி ஒரு முறையும் சிந்திக் காதவர்கள்.
நாம் ஓய்வு பெற்ற பின்பும் எதாவது வருமானம் வருமா என்று ஏங்கி கொண்டு இருக்கிறார்கள். ஆனால் பாகிஸ்தான் அதிரடி ஆட்டக்காரர் ஷாஹித் அப்ரிடி, எந்த அளவிற்கு அதிரடி ஆட்டகாரரோ, அதே அளவிற்கு இளகிய மனம் படைத்தவர்.
ஆம், .தன் வாழ்நாளில் சம்பாதித்த பணத்தை எல்லாம் அவர் பிறந்து வளர்ந்த கிராமத்திற்கு இலவச மல்டி ஸ்பெஷல் மருத்துவமனை அமைப்ப தற்கும் மற்றும் தரமான சாலைகள் போடுவதற்கும் செலவு செய்துள்ளார். இதுவரை அவர் இதற்காக 17 மில்லியன் டாலர்களை செலவு செய்துள்ளார். இந்திய மதிப்பில் 77 கோடிக்கும் மேல் இருக்கும். முன்னதாக ஷாஹித் அப்ரிதி தனது கிராமத்தின் பாதை நிர்மாணத்துக்கு ஒரு மில்லியன் அன்பளிப்பு செய்திருந்தமை குறிப் பிடத்தக்கது. அப்ரிடியின் மனிதநேய செயலை பாராட்டுவோம்.. வாழ்த் துவோம்..!
இன்னும் சிலரோ ஓய்வு பெற்ற பிறகு கிரிக்கெட் அகடமி தொடங்கு வார்கள். அதில் புதிய ஆட்டகாரரர்கள் நுழைவதற்கு லட்சக்கணக்கில் பணம் வாங்குவார்கள். அவர்களின் சம்பளத் தில் இருபது சதவீதம் வாழ்நாள் முழு வதும் தரகு பெறுவார்கள். இது தானே இங்கே நடந்து கொண்டு இருக்கிறது.
சே- கஜா and முஹம்மது ஷபியுதீன்.
Sunday, 19 October 2014
அதிவேக 20–வது சதம்: தெண்டுல்கரை முந்திய கோலி High speed 20th century Tendulkar before the Kohli
தர்மசாலாவில் நடந்த வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 4–வது ஒருநாள் போட்டியில் வீராட் கோலி சதம் அடித்தார். இது அவருக்கு 20–வது சதமாகும். ஒட்டுமொத்தமாக 20–வது சதம் அடித்த 8–வது வீரர் ஆவார்.
கோலி 133 இன்னிங்சில் விளையாடி 20–வது சதத்தை அடித்துள்ளார். கிரிக்கெட் சகாப்தமான சச்சின் தெண்டுல்கர் தனது 20–வது சதத்தை 197–வது இன்னிங்சில் தான் அடித்தார். இந்த வகையில் வீராட் கோலி தெண்டுல்கரை முந்தியுள்ளார்.
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் காஷ்யப் தோல்வி Kashyap loses in Denmark Open semifinals
டென்மார்க் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி டென்மார்க்கின் ஒடென்ஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் அரை இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் காஷ்யப், சீன வீரரை சந்தித்தார்.
இதில் இந்திய வீரர் காஷ்யப் 16–21, 15–21 என்ற நேர் செட்டில் தோல்வி கண்டு வெளியேறினார். இதன் மூலம் இந்த போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.
வெஸ்ட்இண்டீசிடம் ரூ. 400 கோடி நஷ்டஈடு கேட்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு west indies pay compensation of 400 crore ask india cricket board decision
மும்பை, அக். 19–
வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்திய சுற்றுப்பயணத்தை பாதியில் ரத்து செய்துவிட்டு நாடு திரும்பியது. சம்பள பிரச்சினை தொடர்பாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட மோதலால் 4–வது ஒருநாள் போட்டியோடு அந்த அணி வீரர்கள் தங்களது பயணத்தை முடித்துக் கொண்டனர்.
அந்த அணி 5 ஒருநாள் போட்டி, ஒரே ஒரு 20 ஓவர் ஆட்டம் மற்றும் 3 டெஸ்டில் இந்தியாவுடன் விளையாட திட்டமிட்டு இருந்தது.
தர்மசாலாவில் நடந்த 4–வது ஒருநாள் போட்டியோடு அந்த அணி வீரர்கள் நாடு திரும்பினர். போட்டியை பாதியில் ரத்து செய்ததற்காக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் மன்னிப்பு கேட்டு இருந்தது.
வெஸ்ட்இண்டீஸ் வீரர்களின் இந்த செயலால் இந்திய கிரிக்கெட் வாரியம் கடும் அதிருப்தி அடைந்து உள்ளது. வெஸ்ட்இண்டீஸ் பயணம் பாதியில் ரத்து செய்யப்பட்டதால் தங்களுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் சஞ்சய் பட்டேல் தெரிவித்து இருந்தார்.
ரூ.400 கோடி வரை வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்திடம் நஷ்டஈடு கேட்கும் என்று தெரிகிறது. வருகிற 21–ந்தேதி ஐதராபாத்தில் நடைபெறும் கிரிக்கெட் வாரிய அவசர செயற்குழுவில் இதுபற்றி முடிவு செய்யப்படும்.
மேலும் வெஸ்ட்இண்டீஸ் அணியுடனான நேரடி போட்டித் தொடரை 5 ஆண்டு நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் வாரியத்தின் உறுப்பினர்கள் விரும்புகிறார்கள். இதுபற்றியும் அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
இருமாநில தேர்தலில் காங். வீழ்ந்தது: பாஜகவை மக்கள் அங்கீகரித்து விட்டனர் தமிழிசை பேட்டி two state elections congress The fall of the BJP in tamilisai with people recognizing
சென்னை, அக்.19–
மராட்டியம், அரியானா சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றதை தமிழக பா.ஜனதா அலுவலகத்தில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள். மாநில தலைவர் டாக்டர் தமிழிசை தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினர்.
இதில் தேசிய செயலாளர் எச்.ராஜா, மாவட்ட தலைவர்கள் ஜெய்சங்கர், காளிதாஸ், மற்றும் ஜி.கே.எஸ். உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் டாக்டர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:–
மராட்டியம், அரியானா ஆகிய இரு மாநிலங்களிலுமே பா.ஜனதாவை தனிப்பெரும் கட்சியாக மக்கள் அங்கீகரித்து விட்டனர்.
மராட்டியத்தில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை கிடைக்காமல் இருந்தாலும் மத்தியில் ஆளும் எங்கள் கூட்டணிதான் வெற்றி பெற்றுள்ளது.
தேர்தல் அறிவித்து கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சு வார்த்தையில் ஏற்பட்ட பிரிவால் மக்கள் தடுமாற்றம் அடைந்துள்ளனர். அவ்வளவுதான்.
தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் பிரசாரம் செய்ய சென்றோம். அதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. தமிழரான தமிழ்செல்வன் வெற்றி முகத்தில் இருக்கிறார்.
தேர்தல் நடைபெற்ற இருமாநிலங்களிலும் காங்கிரஸ் வீழ்த்தப்பட்டுள்ளது. வடமாநிலங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம் மோடி ஆட்சி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை தமிழகத்திலும் எதிரொலிக்கும். இந்த வெற்றிகள் தொடரும்.
தீபாவளி பரிசாக மக்கள் இந்த வெற்றியை மோடி அரசுக்கு வழங்கி இருக்கிறார்கள். மோடி அரசும் 5 ஆண்டுகளில் இல்லாத வகையில் டீசல் லிட்டர் ரூ.3.50 குறைத்து பொருளாதார சீர்திருத்தத்தை தொடங்கி மக்களுக்கு தீபாவளி பரிசை வழங்கி இருக்கிறது.
சென்னை நகரம் ஒருநாள் மழையிலேயே தடுமாறுகிறது. தேங்கி கிடக்கும் தண்ணீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
டீசல் விலைக்குறைப்பு வரவேற்கத்தக்கது: ராமதாஸ் அறிக்கை Diesel cost welcome ramadoss statement
சென்னை, அக். 19–
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக் குறைந்திருப்பதையடுத்து டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.65 குறைக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் இனி வரும் காலங்களில் டீசல் விலையை விருப்பம் போல நிர்ணயித்துக் கொள்ளும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்திருப்பது வருத்த மளிக்கிறது.
மத்தியில் எந்தக் கட்சியின் ஆட்சி நடந்தாலும் எரிபொருள் மானியத்தை முழுமையாக ஒழித்துவிட வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக இருக்கிறது. ஏற்கனவே பெட்ரோல் மீதான விலைக் கட்டுப்பாட்டை நீக்கியதன் மூலம் அதற்கு அளிக்கப்பட்டு வந்த மானியத்தை முந்தைய காங்கிரஸ் அரசு ரத்து செய்தது. தொடர்ந்து டீசல் மானியத்தையும் ஒழிக்க மத்திய அரசு திட்டமிட்டது.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், 2009 ஆம் ஆண்டு ஜனவரியில் தொடங்கி இரு மாதங்களுக்கு முன்பு வரை மொத்தம் 31 முறை ரூ. 30.10 அளவுக்கு டீசல் விலை உயர்த்தப்பட்டது. இதனாலும், கடந்த சில மாதங்களாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்ததாலும் டீசல் விற்பனையில் ஏற்பட்ட இழப்பு நீங்கி லாபம் கொட்டத் தொடங்கியது. அதன்பயனாகத்தான் டீசல் விலையை 70 மாதங்களில் முதன்முறையாக மத்திய அரசு குறைத்துள்ளது.
அதேவேளையில், டீசலுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தையும் மத்திய அரசு படிப்படியாக குறைத்து விட்டது. 2011ஆம் ஆண்டு மே மாதத்தில் ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.18 மானியம் வழங்கப்பட்டுவந்தது. இந்த மானியம் இப்போது முழுமையாக ரத்து செய்யப்பட்டு விட்டது.
இனியும் டீசலுக்கு மானியம் வழங்கக்கூடாது என்று நினைத்ததால் தான் டீசல் மீதான விலைக் கட்டுப்பாட்டை தளர்த்திய மத்திய அரசு, விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களிடமே ஒப்படைத்திருக்கிறது. இதன் மூலம் டீசல் விலையை கட்டுக்குள் வைத்திருப்பதற்கான பொறுப்பை தட்டிக் கழித்திருக்கிறது.
டீசல் விலை உச்சத்தில் இருக்கும்போது விலைக் கட்டுப்பாட்டைத் தளர்த்தினால் மக்கள் மத்தியில் எதிர்ப்பு எழும் என்பதால், சரியான நேரத்திற்கு காத்திருந்து உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ள நேரத்தில் இத்தகைய நடவடிக்கையை மத்திய அரசு எடுத்திருக்கிறது. இது புத்திசாலித்தனமான முடிவாக இருக்கலாம்; ஆனால், நிச்சயமாக மக்கள் நலனுக்கு உகந்த முடிவல்ல.
டீசல் மீதான விலைக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதால் உடனடியாக பாதிப்பு ஏற்படாமல் போகலாம். ஆனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்கும் பட்சத்தில் அதனால் ஏற்படும் பாதிப்புகள் மிகவும் அதிகமாக இருக்கும். உதாரணமாக 2008 ஆம் ஆண்டில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மிக அதிகபட்சமாக ஒரு பீப்பாய் 147 டாலர் என்ற அளவை எட்டியது. இப்போது மீண்டும் கச்சா எண்ணெய் விலை அந்த அளவுக்கு உயர்ந்தால், இந்தியாவில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.26 வரை அதிகரிக்கும். அவ்வாறு உயர்ந்தால் பாசனத் தேவைக்காக டீசலை நம்பியிருக்கும் விவசாயிகளும், விசைப்படகுகளுக்காக டீசலை நம்பியுள்ள மீனவர்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் விண்ணைத் தொடும் அளவுக்கு அதிகரிக்கும். இது ஏழை மற்றும் நடுத்தர மக்களை மிக மோசமாக பாதிக்கும்.
எனவே, டீசல் விலையை சந்தை நிலவரத்திற்கு ஏற்ற வகையில் உயர்த்திக் கொள்வதற்கு எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இந்த அதிகாரத்தை மத்திய அரசு அதன் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க வேண்டும். உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும், மக்கள் நலன் கருதி உள்நாட்டில் டீசல் விலையை உயர்த்தாமல் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
வேலூரில் நகை தொழிலாளி வீட்டில் 20 பவுன் கொள்ளை jewelry worker home jewelry robbery
வேலூர், அக்.19–
வேலூர் சைதாப்பேட்டை ஆஸ்பிட்டல் வெங்கடாஜல முதலியார் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார்(55). நகை செய்யும் தொழிலாளி. இவரது வீட்டில் இன்று அதிகாலை 2 மணியளவில மர்ம நபர்கள் புகுந்துள்ளனர்.
பின்னர் பீரோவை உடைத்து அதிலிருந்த 20 பவுன் நகை, 30 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து ஜெயக்குமார் வடக்கு போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து டிஎஸ்பி பன்னீர்செல்வம், இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், சப்–இன்ஸ்பெக்டர் ரீனா ஆகியோர் விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
திட்டக்குடி அருகே லாரி மீது கார் மோதல்: பெண் உள்பட 3 பேர் காயம் Thittakudi near accident 3 people injured
திட்டக்குடி, அக்.19–
கன்னியாகுமரி மாவட்டம் ஆனந்தமேடு பகுதியை சேர்ந்தவர் உமாநாத் (வயது38). நேற்று இவரும் இவரது உறவினர் சந்தோஷ் என்பவரின் மனைவி தேவஸ்ரீ (34) மற்றும் இவரது 2½வயது பெண் குழந்தை ஸ்ரீதிகா ஆகிய 3 பேரும் ஒரு காரில் சென்னை புறப்பட்டு வந்தனர். காரை உமாநாத் ஓட்டி வந்தார்.
திட்டக்குடியை அடுத்த ராமநத்தம் அருகே எழுத்தூர் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது முன்னால் சென்ற லாரி மீது எதிர்பாராதவிதமாக கார் மோதியது. இதில் காரை ஓட்டி சென்ற உமாநாத் மற்றும் காரில் பயணம் செய்த தேவஸ்ரீ, ஸ்ரீதிகா ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நீலகிரி மாவட்டத்தில் சிறப்பு முகாம்: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் voter list name added apply nilgiris district
ஊட்டி, அக். 19–
நீலகிரி மாவட்ட தனி வட்டாட்சியர் (தேர்தல்கள்) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:–
நீலகிரி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு அனைத்து வாக்குச் சாவடிகள் மற்றும் கோட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் நகராட்சி அலுவலகங்கள் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் சங்கரால் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு வாக்காளர் பட்டியல் 2 நகல்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர்சேர்த்தல், நீக்குதல், ஏற்கனவே பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர்கள் விவரத்தில் தவறுகள் இருப்பின் திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றுக்கு 15.10.2014 முதல் 10.11.2014 தேதி வரை தொடர்புடைய அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் வரும் 30.10.2014 அன்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறும் சமயம் வாக்காளர் பட்டியலிலுள்ள பெயர்கள் வாசிக்கப்படும். அத்துடன் வரும் 26–ந் தேதி மற்றும் 2–ந் தேதி ஆகிய இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வாக்கு சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இதனை பொதுமக்கள் நன்கு பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாக பெயர் சேர்க்க படிவம் 6–ல் விண்ணப்பிக்க வேண்டும். வரும் 2015–ம் வருடம் ஜனவரி 1–ந் தேதி 18 வயது பூர்த்தி அடையும், அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
பெயர் விடுபட்டவர்கள், வேறு சட்டசபை தொகுதிக்கு மாறியவர்களும் விண்ணப்பிக்கலாம். 18 முதல் 25 வயது உடையவர்கள், விண்ணப்பத்துடன், பிறந்த தேதிக்கான சான்று இருப்பிடச் சான்று உள்ளிட்டவற்றை இணைக்க வேண்டும். 25 வயதுக்கு மேற்பட்டவர்கள், இருப்பிடச் சான்றுடன், இதற்கு முன் குடியிருந்த முகவரி, ஏற்கனவே வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை எண் ஆகியவற்றை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். பெயர் நீக்கம் செய்ய படிவம் 7, திருத்தங்கள் செய்ய படிவம் 8, முகவரி மாற்ற படிவம் 8ஏ ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும்.
விண்ணப்பத்தில் வாக்காளர்கள் செல்போன் எண், ஈ–மெயில் உள்ளிட்ட வற்றை குறிப்பிடு மாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நேரில் விண்ணப்பிக்க முடியாதவர்கள் ஷ்ஷ்ஷ்.மீறீமீநீtவீஷீஸீs.tஸீ.ரீஷீஸ்.வீஸீ என்ற இணையதளம் மூலமும் விண்ணப்பிக்கலாம்.
மேலும் தற்போது செயல்பட்டுவரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் இணையதளம் மூலமும் விண்ணப்பிக்கலாம். அனைத்து விண்ணப் பங்களும் பரிசீலிக்கப்பட்டு 2015 ஜனவரி 5–ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
மேற்கண்டவாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
My Blog List
-
-
Navy veterans of the case Italian Governments petition in the Supreme Court - Navy veterans of the case Italian Governments petition in the Supreme Court New Delhi , Jan . 15 - 2 Indian fishermen and sailors were killed in the incid...11 years ago
-
Ramya Nambeeshan Stunning Model Stills 2013 - Cute Actress shared a link. Ramya Nambeeshan Stunning Model Stills 2013 PhotoShoots - Actress HD Gallery | Stills | Photos |... Ramya Nambeeshan Stunning ...11 years ago
-
Shri Narendra Modi has been the most talked about person on Facebook, in India, for the year 2013 - *Shri Narendra Modi has been the most talked about person on Facebook, in India, for the year 2013* *According to the social networking giant’s top India...11 years ago
-
மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம்: ஜெயலலிதா நாளை தொடங்கி வைக்கிறார் Metro rail test run will be starting tomorrow - *மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம்: ஜெயலலிதா நாளை தொடங்கி வைக்கிறார் Metro rail test run will be starting tomorrow* சென்னை, நவ.5- சென்னையில் ரூ.14 ஆயிரத்து 600...11 years ago
Popular Posts
-
நண்பனின் மனைவியை உஷார் பண்ணி எல்லாவற்றையும் ‘முடித்த’ நண்பன்! தமிழகத்தின் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வரதராஜன் பே...
-
' அது ' முடியும்... ஆனால அதுதான் முடியாது...! ஒரு தாத்தா வாக்கிங் போய்க் கொண்டிருந்தார். வழியில் ஒரு பிராத்தல் விடுதி இருந்த...
-
கொஞ்சல்.. காதலில் மட்டுமில்லை, காமத்திலும் கூட ரொம்ப சுவாரஸ்யமான விஷயம்.. கொஞ்சுவது பலவகை.. ஒவ்வொன்றிலும் ஒரு புது சுகம் இருக்கத்தான் ச...
-
பிரபல இயக்குனரின் படுக்கையறையில் தமிழ் முன்னணி நடிகை by abtamil Tamil newsYesterday, எதுகை மோனை இயக்குனரின் படத்தில் அறிமுகமாகி, தமிழி...
-
சொல்வதெல்லாம் உண்மை. நடிகையின் கள்ளத்தொடர்பால் விவாகரத்து வரை செல்லும் கணவர். by abtamil ஆண் நண்பருடனான ... - Tamil newsToday, தனியார்...
-
இயற்கைக்கு மாறாக உறவுகொள்ள வற்புறுத்தி துன்புறுத்துகிறார் என்று கூறி தன் கணவர் மீது புகார் கொடுத்துள்ளார் நடிகை யுக்தா முகி. 1999-ல் உலக அ...
-
மனைவியை விவாகரத்து செய்கிறார் நடிகர் தனுஷ் – ரஜினி குடும்பம் அதிர்ச்சி by abtamil ஆண் நண்பருடனான ... - Tamil newsToday, மனைவியுடன் தனு...
-
துணை நடிகைகளை வைத்து விபச்சார தொழிலில் ஈடுபட்ட பிரபல அம்மா நடிகை சென்னையில் கைது செய்யப்பட்டார். சென்னை நகரில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கி...
-
முதலிரவு அறை First night tamil sex jokes புதுமணத் தம்பதிகள் சடங்குகள் முடிந்து முதலிரவு அறைக்குள் நுழைந்தனர். எதுக்கு கண்ணே இனி ஆட...
-
காத்துநின்ற பள்ளி மாணவியை புதருக்குள் வைத்து இரு வாலிபர்கள் கற்பழிப்பு ஆந்திர மாநிலம் ஆதிலா பாத் மாவட்டம் வெல்லம் பள்ளி கிராமத்தை சே...
Popular Posts
-
பெங்களூரை சேர்ந்த நந்தகுமார் என்ற வாலிபர், ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த இளம்பெண்ணை இன்டர்நெட் மூலம் சாட் செய்து திருமணம் செய்துக்கொண...
-
பிரபல நடிகை சினேகா உல்லலின் ஆபாச வீடியோக்கள் இணையதளங்களில் உலா வந்து கொண்டு இருக்கிறது. இதனை அவரை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிரபல...
-
முதலிரவு அறை First night tamil sex jokes புதுமணத் தம்பதிகள் சடங்குகள் முடிந்து முதலிரவு அறைக்குள் நுழைந்தனர். எதுக்கு கண்ணே இனி ஆட...
-
கடந்த தீபாவளிக்கு ஜெயன்ட் நிறுவன தயாரிப்பில் , முருகதாஸ் இயக்கத்தில் , சூர்யா நடித்து வெளிவந்து , தமிழினத்திற்கே பெருமை ச...
-
சொல்வதெல்லாம் உண்மை. நடிகையின் கள்ளத்தொடர்பால் விவாகரத்து வரை செல்லும் கணவர். by abtamil ஆண் நண்பருடனான ... - Tamil newsToday, தனியார்...
-
மனைவியை விவாகரத்து செய்கிறார் நடிகர் தனுஷ் – ரஜினி குடும்பம் அதிர்ச்சி by abtamil ஆண் நண்பருடனான ... - Tamil newsToday, மனைவியுடன் தனு...
-
பிரபல இயக்குனரின் படுக்கையறையில் தமிழ் முன்னணி நடிகை by abtamil Tamil newsYesterday, எதுகை மோனை இயக்குனரின் படத்தில் அறிமுகமாகி, தமிழி...
-
Gallery Tamil Actress - Malavika Hot South Indian Actress Tags :malavika hot photos,malavika hot pictures,malavika singer,singer mala...
-
The turbine of the Kudankulam Nuclear Power Project's first reactor which was resynchronized with the southern gridlast Friday, was stop...
-
' அது ' முடியும்... ஆனால அதுதான் முடியாது...! ஒரு தாத்தா வாக்கிங் போய்க் கொண்டிருந்தார். வழியில் ஒரு பிராத்தல் விடுதி இருந்த...